search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ"

    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கமல்ஹாசன் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார்.
    • இப்படம் அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி வெளியாகவுள்ளது

    நகைச்சுவை நடிகர்களாக இருந்து கதாநாயகனாக மாறியவர்களில் சந்தானம் ஒருவர். 2014 ஆம் ஆண்டு ஸ்ரீனாத் இயக்கத்தில் வெளிவந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    சில மாதங்களுக்கு முன் சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நல்ல நகைச்சுவை திரைப்படமாக சந்தானத்திற்கு அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து "இங்க நான் தான் கிங்கு" என்ற படத்தில் சந்தானம் நடித்துள்ளார்.

    ஆனந்த் நாராயண் இப்படத்தை இயக்கியுள்ளார். எழிச்சுர் அரவிந்தன் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். கோபுரம் பிலிம் ப்ரொடக்ஷன் இப்படத்தை தயாரித்துள்ளது. மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உட்பட பலர் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். பிரியாலயா இப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

     

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கமல்ஹாசன் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இப்படம் அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து கேரக்டர் ரிவீலிங் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் பால சரவணன் பாலா என்ற கதாப்பாத்திரத்திலும். தம்பி ராமைய்யா விஜயகுமார் ஜமீனாகவும், முனிஸ்காந்த பாடி பல்ராமாகவும் சந்தானம் வெற்றிவேல் கதாப்பாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். சந்தானம் மணமேடையில் அழுதுக்கொண்டு இருப்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பைக் ஒட்டி வந்த நபர் மீது ஒரு லாரி மோதியது.
    • இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் பைக் ஒட்டி வந்த நபர் மீது ஒரு லாரி மோதியது. இதனால் பைக் லாரியின் அடியில் சிக்கி சேதமடைந்தது. உடனே பைக் ஒட்டி வந்த நபர் லாரி மீது ஏறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ஆனால் அதைப் பொருட்படுத்தாது ஓட்டுநர் லாரியை ஓட்டிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அன்றைய தினம் இதே லாரி மற்றொரு விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. 

    • பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' .
    • டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கிறார். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பின் போது ஆரவ் எடுத்த அஜித் குமாரின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலானது.

    அஜித் குமார் அவர்களின் நண்பர்களோடு பைக் டூர் செல்லும் பழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் மீண்டும் நண்பர்களுடன் பைக் டிரிப் சென்றார். அதில் நடிகர் ஆரவும் உடனிருந்தார். அந்த டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    கடந்த வாரம் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சி ஒன்றின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து அஜித் குமாரும் ஆரவும் மிக நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

    இந்நிலையில் அஜித் குமார் ஆரவுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிளான ரேசிங் பைக்கை பரிசளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
    • இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.

    ஷூட்டிங் நடைப்பெற்ற போது ஆரவ் எடுத்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைராலிகியது. பின் அஜித்திற்கு உடலில் சிறிய பிரச்சனை இருந்ததால் அதற்கு அறுவை சிகிச்சை செய்தார்.

    அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அக்காட்சியில் ஆரவ் சீட்டில் கட்டப்பட்டு இருக்கிறார். அஜித் ஜீப்பை ஓட்டுகிறார். சில நிமிடங்களில் அந்த ஜீப் கவிழ்கிறது. இக்காட்சியை ஸ்டண்ட் டூப் உதவி இல்லாமல் அவரே நடித்து இருப்பது பிரமிக்க வைக்கிறது. இக்காட்சி இப்பொழுது இணையதளத்தில் வைரலாகியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏராளமான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
    • அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகின்றன.

    சத்திய சாய் மாவட்டம், புட்டபர்த்தி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குட்டகுண்ட ஸ்ரீதர் ரெட்டி நேற்று தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர் அனில் குமார் என்பவர் மேளம் அடித்தபடி கட்சிப் பாடல்களை பாடினார்.

    கொத்த செருவு பி.சி காலனியில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது அரசு அரசு ஊழியராக வேலை செய்யும் தன்னார்வலர் ஹர்ஷத் என்பவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் துண்டை தோலில் அணிந்து கொண்டு தன்னிலை மறந்து விசில் அடித்தபடி நடனம் ஆடினார்.


     



    ஷர்ஷத் தான் ஒரு அரசு ஊழியர் என்பதை மறந்து நடனம் ஆடுவதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.

    இந்த வீடியோவை பார்த்த எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து நடனமாடிய அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆந்திராவில் ஏற்கனவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பேரணியில் கலந்து கொண்ட தன்னார்வலர்கள் 11 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
    • கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா?

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. அதன்படி தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தி (51) அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

    இந்நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்தி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஆணவப்படுகொலை செய்வேன் என்றும், தாயோடு சேர்த்து குழந்தையையும் கருவறுப்போம் என்றும், வருகின்ற காலத்தில் கொங்கு நாட்டில் பல்வேறு கொலைகள் விழும் என்று உளவுத்துறைக்கே சவால் விட்டார். பழைய வீடியோ தான் என்றாலும் கூட, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது மீண்டும் பரவுவதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


    ஈரோடு அருகே கவுண்டர் சாதிப் பெண்ணை திருமணம் செய்த பட்டியிலினப் பையனை கொலை செய்ய அந்தப் பெண்ணின் தந்தை செய்த முயற்சியில் அந்தப் பையனின் 15 வயது சகோதரி கொல்லப்பட்டாள். சூரியமூர்த்தியின் சாதி வெறியால் அந்த கொலை நடந்தேறியதாகவும், அத்தகைய நபரை நாமக்கல் தொகுதி வேட்பாளராக எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சமூக நீதி குறித்து பேசும் தி.மு.க.வுக்கு இதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா என்றும், அரசியலில் வெற்றி பெற எதையும் கண்டு கொள்ளமாட்டீர்கள் என்றால், தி.மு.க.-வுக்கும், பா.ஜ.க.-வுக்கும் என்ன வேறுபாடு? பெரியார், அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்த தகுதியில்லாத கூட்டம் என்று பத்திரிகையாளர்களும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

    எனவே, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவாரா, அதற்கு தி.மு.க.-வும் அழுத்தம் கொடுக்குமா என்று கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

    • பிரபல ரேடியோ ஜாக்கி அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ.
    • வீடியோவின் கீழ் அசோக் செல்வனை டேக் செய்துள்ளார் அஞ்சனா.

    தங்களின் விருப்பமான திரைப் பிரபலங்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வழியாக செய்திகள் அனுப்புவதும், ஒரு சில பிரபலங்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அந்த ரசிகர்களுடன் அதே சமூக வலைதளங்கள் வழியே உரையாடுவதும் தற்போது அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில், பிரபல ரேடியோ ஜாக்கி அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது வீடியோவிற்கு நடிகர் அசோக் செல்வன் கமெண்ட் செய்தால், தான் பெற்றோர் பார்க்கும் பையனையே திருமணம் செய்துக் கொள்வேன் என கூறினார்.

    இருப்பினும், வீடியோவின் கீழ் அசோக் செல்வனை டேக் செய்த அஞ்சனா, "அசோக் செல்வன் மட்டும் கமெண்ட் செய்துவிட்டால், என் சோலி முடிஞ்சுது.." எனவும் கிண்டலாக குறிப்பிட்டிருக்கிறார்.

    • அல்லு அர்ஜூன் 2 முறை நந்தி விருதுகளை பெற்று உள்ளார்.
    • அல்லு அர்ஜுன் இணையதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தெலுங்கு பட உலகின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன். ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ்குர்ராம், புஷ்பா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

    இவர் 2 முறை நந்தி விருதுகளை பெற்று உள்ளார். திரைப்படங்களில் நடிப்பதோடு, சில விளம்பரங்களிலும் நடித்து உள்ளார். 2007 முதல் நடிக்க தொடங்கி 17 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் இணையதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர்," சினிமாவில் சிறந்த நல்ல படங்கள் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. மேலும் ஒரு சில மோசமான படத்தால், பார்வையாளர்களின், நேரத்தையும், ஆற்றலையும், பணத்தையும் வீணாக்க விரும்பவில்லை" என்றார்.

    • டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.
    • ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏ.ஐ. வீடியோக்களும் முக்கிய பங்காற்ற தொடங்கி உள்ளன.

    இந்த தேர்தல் களத்தில் இதனை ஆளும் கட்சியான தி.மு.க. முதல் முறையாக கையில் எடுத்து செயல்படுத்தி உள்ளது. சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டை வாழ்த்துவது போன்ற ஏ.ஐ. வீடியோ வெளியிடப்பட்டது.

    தி.மு.க. மாநாட்டு பந்தலிலும் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் கருணாநிதியே மாநாட்டுக்கு நேரில் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இதே போன்று முன்னாள் மத்திய மந்திரியும் தற்போதைய எம்.பி.யுமான டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.

    இப்படி தி.மு.க. சார்பில் இரண்டு வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகி அது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    இதேபோன்று மறைந்த தங்கள் தலைவர்கள் ஏ.ஐ. வீடியோ மூலம் பேசுவதற்கான ஏற்பாடுகளையும் மற்ற கட்சியினரும் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடியோவை தயாரித்து வெளியிட அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதே போன்று மற்ற அரசியல் கட்சியினரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோக்களை தயாரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்த வீடியோக்கள் மூலம் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் உள்ளன என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

    குறிப்பாக இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கும் கட்சியினர் மறைந்த தங்களது தலைவர்களை பயன்படுத்தி மாற்று அணியினரை விமர்சிக்க முடியும் என்ப தால் அது அரசியல் களத்தில் மோதல் போக்கை உரு வாக்க வழிவகுக்கும் என்கிறார்கள்.



    உதாரணத்துக்கு தமிழகத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

    அவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பது போன்று ஏ.ஐ. வீடியோக்களை வெளியிட்டால் அது இரண்டு பிரிவினருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறி உள்ளனர்.

    தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. இந்த அணிகளை சேர்ந்தவர்களும் மறைந்த தங்களது தலை வர்களை ஏ.ஐ. வீடியோக்கள் மூலமாக உருவாக்கி விமர்ச னம் செய்யவும் வழி வகுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது. அதே நேரத்தில் அதனை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கணிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
    • ஸ்டார் திரைப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடீயோ நேற்று வெளியானது.

    இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் 'ஸ்டார்' பட உருவாக்கத்தின் முழு வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

    சின்னத்திரையில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த கவின், "லிப்ட்" என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். கவினின் இரண்டாவது திரைப்படமான "டாடா" மாபெரும் வெற்றி பெற்றது.

    இதையடுத்து கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஸ்டார். ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

    இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ப்ரோமோ வெளியானது. ஏற்கனவே இத்திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடீயோ மற்றும் பாடல் வெளியானது.

    தொடர்ந்து, ஸ்டார் திரைப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடீயோ நேற்று வெளியானது.

    இந்நிலையில், ஸ்டார் திரைப்படம் உருவாக்கத்தின் முழு விடியோ இன்று வெளியானது.

      

    • அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக வெளியீடு.
    • தான் பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    தமிழக சட்டப்பரேவையில் பேசிய வீடியோவை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக சட்டப்பேரவையில் தான் பேசியதை ஆளுநர் ஆர்.என்.ரவி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.
    • இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சேக் பேட்டையை சேர்ந்தவர் ஹனுமான் நாயக் (வயது 22). இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வருகிறார்.

    இந்த நிலையில் ஹனுமான் நாயக் சேக் பேட்டையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடைக்குச் சென்றார்.

    அங்கிருந்து மாட்டிக்கொள்ளாமல் சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி என்று பேசியபடி ஒரு சாக்லேட்டை நைசாக திருடி சாப்பிட்டார். இதனை அவரது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்தார்.

    அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இதனைக் கண்டு சூப்பர் மார்க்கெட் மேலாளர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சாக்லேட் திருடியது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அனுமான் நாயக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×