search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு"

    • ராகுல் பயணித்த வாகனத்தின் முகப்பில் வாய்மையே வெல்லும் என எழுதப்பட்டிருந்தது.
    • பாஜகவைச் சேர்ந்த மத்திய மந்திரிகளே பாராளுமன்றத்தை முடக்கியதாக ராகுல் குற்றச்சாட்டு

    வயநாடு:

    தகுதி நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி இன்று கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு வந்தார். வயநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்து வர ராகுல் காந்தி சாலைப் பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் நின்றபடி பயணித்த ராகுல் காந்தி, சாலையின் இருபுறமும் கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார்.

    ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தார். வாகனத்தின் முகப்பில் வாய்மையே வெல்லும் என எழுதப்பட்டிருந்தது. பேரணியின் முடிவில் கல்பற்றா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    பாஜகவைச் சேர்ந்த மத்திய மந்திரிகளே பாராளுமன்றத்தை முடக்கினர். பாராளுமன்றத்தில் என்னை பேச விடாமல் தடுத்தனர். சபாநாயகரிடம் சென்று எனது வாதத்தை விளக்க அனுமதி கேட்டேன். பாஜக என்னிடம் இருந்து அனைத்தையும் பறித்துக்கொண்டாலும் பிரச்சனை இல்லை. ஆனால், நான் மக்களுக்காக பேசுவதை பாஜகவால் ஒருபோதும் தடுக்க முடியாது. அவர்கள் (பாஜக) என்னை சிறையில்கூட அடைக்கலாம், ஆனால் வயநாட்டு மக்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்காக நான் பேசுவதை தடுக்க முடியாது.

    எம்.பி.யாக இல்லாததால் டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்ய வேண்டிய கட்டாயம். அவர்கள் எனது வீட்டை எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி. எனக்கு அந்த இல்லத்தில் இருக்க பிடிக்கவில்லை. வயநாட்டில் எத்தனையோ பேர் வெள்ளத்தில் வீடுகளை இழந்தார்கள். அவர்கள் எப்படி போராடினார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்து வர ராகுல் காந்தி சாலைப் பேரணி நடத்தினார்.
    • ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

    வயநாடு:

    கேரளா மாநிலம் வயநாடு பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை எழுப்பினர். ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்தனர். 

    இந்நிலையில், தகுதி நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி இன்று வயநாடு தொகுதிக்கு வந்தார். அவருக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    வயநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்து வர ராகுல் காந்தி சாலைப் பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் நின்றபடி பயணித்த ராகுல் காந்தி, சாலையின் இருபுறமும் கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார்.

    ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தார். வாகனத்தின் முகப்பில் வாய்மையே வெல்லும் என எழுதப்பட்டிருந்தது. பேரணியின் முடிவில் பொதுக்கூட்டத்தில் ராகுல் உரையாற்றுகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகுல் காந்தி எம்.பி.யின் கட்சி அலுவலகம் கேரளாவின் வயநாடு தொகுதியில் அமைந்துள்ளது.
    • கேரளாவின் வயநாடுவில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது கட்சி அலுவலகம் வயநாடுவில் உள்ளது. இந்த அலுவலகம் மீது நேற்று இந்திய மாணவர் கூட்டமைப்பு தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் கட்சி தொிவித்தது.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கேரள முதல் மந்திாி பினராயி விஜயன் கண்டனம் தொிவித்தா.

    இதுதொடா்பாக, பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டா் செய்தியில், ராகுல் காந்தி அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். நம் நாட்டில் ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவும் உரிமை உள்ளது. இருப்பினும், இது அதிகமாக இருக்கக்கூடாது. இது தவறான போக்கு. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டுள்ளாா்.

    • கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்திருக்கும்போது, வெளியே இருந்து வந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.
    • இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) கொடிகளை ஏந்தியபடி குண்டர்கள் வந்து தாக்கியதாக இளைஞர் காங்கிரஸ் தகவல்

    வயநாடு:

    கேரளாவின் வயநாடுவில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனை அக்கட்சி உறுதி செய்து உள்ளது.

    இதுபற்றிய வீடியோவும் வெளிவந்து உள்ளது. அதில், கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்திருக்கும்போது, வெளியே இருந்து வந்த சிலர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

    இதுபற்றி இளைஞர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) கொடிகளை ஏந்தியபடி குண்டர்கள் வந்தனர். அவர்கள் ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகத்தின் சுவர் மீது ஏறி, குதித்து உள்ளே வந்தனர். கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர்' என கூறப்பட்டுள்ளது.

    ×