search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல்"

    • தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.
    • விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

    தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். ஏராளமான திரைப்படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர நடிகராகவும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரீனிவாச ராவ். அவரது தனித்துவமான சிரிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாப்பாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த திருப்பாச்சி திரைப்படத்தில் சனியன் சகடை என்ற கதாப்பாத்திரம் மக்கள் மனதில் பதிந்தது. பின் 2011ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ திரைப்படத்தில் ஆளவந்தான் என்ர அரசியல்வாதி கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார். அவர் வரும் காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்லேட்டுகளான உலா வந்து கொண்டு இருக்கின்றன.

    தற்போது 81 வயதாகும் கோட்டா ஸ்ரீனிவாச ராவ், கடந்த சில மாதங்களாகவே உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இதனிடையே தெலுங்கானா மாநிலத்தில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஐதராபாத் மக்களவைத் தொகுதியில் வசித்து வரும் ஸ்ரீனிவாசராவ் இன்று தனது வாக்கினை செலுத்துவதற்காக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வருகை தந்தார்.

    மனைவி மற்றும் உதவியாளர் ஒருவருடன் வருகை தந்த அவருக்கு, வாக்குச்சாவடிக்குள் அமர இருக்கைகள் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் தனது வாக்கினை செலுத்தினார். கம்பீரமான வில்லனாக பல திரைப்படங்களில் மிரட்டிய கோட்டா ஸ்ரீனிவாச ராவ், உடல் தளர்ந்து, வயோதிகம் காரணமாக நடந்து வந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஒரு காலத்தில் கம்பீரமான வில்லனாக வலம் வந்த அவர், இன்று நடக்க முடியாதபடி பிறரின் துணையோடு தள்ளாடியபடி வருகை தரும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த தள்ளாத வயதிலும் வாக்களிக்க வேண்டும் என்ற அவரது உறுதியை அவர்கள் பாராட்டி வருகின்றனர்.

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழக அரசியல் களத்தில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது
    • 2026 தமிழக அரசியல்களம் நடிகர்கள் நிறைந்த களமாக மாறும் என தெரிய வந்துள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 2026 -ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திமுக, அதிமுக, பாஜக வுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய 'தமிழக வெற்றிக் கழகம்' வருகிற தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனால் தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பு ஏற்படும் தெரிகிறது.



    இதே போல வருகிற தேர்தலுக்கு முன் புதிய கட்சி தொடங்கி தீவிர அரசியல் பணிகளில் இறங்க போவதாக நடிகர் விஷாலும் கடந்த மாதம் அறிவித்தார். கண்டிப்பாக 2026 தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் தனது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து வார்டு பகுதிகளிலும் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் அவரது ரசிகர் மன்றம் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




    தமிழக அரசியல் களத்தில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனவே 2026 தமிழக அரசியல்களம் நடிகர்கள் நிறைந்த களமாக மாறும் என தெரிய வந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜூன் 4-ந்தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்.
    • டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எங்களது அரசுகள் உள்ளன.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று அவர் டெல்லியில் ஆம்ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து 'ரோடு ஷோ' நடத்தினார். அவர் 2 இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது கெஜ்ரிவால் பேசியதாவது:-

    ஜூன் 4-ந்தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமையும். டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும். கடவுள் எனக்கு 21 நாட்கள் கொடுத்துள்ளார். 24 மணி நேரமும் உழைத்து நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன்.

    பா.ஜனதாவின் சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும், இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே 400 இடங்கள் தேவை என்று பா.ஜ.க. கூறுகிறது. சர்வாதிகாரத்தை கொண்டு வரவே அவர்கள் விரும்புகிறார்கள்.

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு என்னை கைது செய்தது. நான் ஒரு சிறிய மனிதன். எங்களிடம் ஒரு சிறிய கட்சி உள்ளது.

    டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எங்களது அரசுகள் உள்ளன. இருப்பினும் டெல்லி மக்களுக்காக தரமான பள்ளிகள் மற்றும் மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தேன். இது தவறா?

    இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் பா.ஜனதாவை வீழ்த்துவது தொடர்பாக ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் கெஜ்ரிவால் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தினார்.

    டெல்லியில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆம்ஆத்மி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் அவர் விவாதித்தார்.

    அதை தொடர்ந்து பிற்பகலில் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். இன்று மாலை அவர் 2 இடங்களில் ரோடு ஷோ நடத்துகிறார். மோதி நகர்,உத்தம் நகர் பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

    டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 25-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் 4 தொகுதிகளில் ஆம்ஆத்மி போட்டியிடுகிறது. எஞ்சிய 3 இடங்களில் காங்கிரஸ் நிற்கிறது.

    • பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.

    பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் ஆந்திரா தேர்தல் 2024 போட்டியிடுகிறார். பவன் கல்யாணுக்கு அமோக ஆதரவு கிடைத்துக் கொண்டு இருக்கும் நிலையில். மே 7 ஆம் தேதி அல்லு அர்ஜூன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவினை பதிவிட்டார் அதில் பவன் கல்யாண் காருவின் மீது எனக்கு எப்பொழுது மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அவர் எடுத்துக் கொண்ட பாதையை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு என்று பதிவிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக் நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.

    அதை அறிந்துக் கொண்ட ரசிகர்கள் ஷில்பா ரவிந்திராவின் வீட்டை சூழ்ந்துக் கொண்டனர். அவரைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்களுக்கு கையசைத்தும் நன்றி தெரிவித்தும் அன்பை பகிர்ந்துக்கொண்டார் அல்லு அர்ஜூன். பின் அவரது நண்பரான ஷில்பா ரெட்டிக்கு வாக்கு அளிக்குமாருக் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மேடக் நிஜாமாபாத் உள்ளிட்ட 8 தொகுதிகளில் மட்டுமே ஒரு சில பெண்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
    • அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு முக்கிய பதவிகளை வழங்காததால் பெண்கள் அரசியலுக்கு வருவதில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 13-ந் தேதி வாக்கு பதிவு நடக்கிறது.

    இங்கு மொத்தம் 525 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 49 பேர் மட்டுமே பெண்கள்.

    மொத்த போட்டியாளர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே பெண்கள் உள்ளனர். கம்மம் தொகுதியில் ஒரு பெண் வேட்பாளர் கூட களத்தில் இல்லை. செவெல்லா, மேடக் நிஜாமாபாத் உள்ளிட்ட 8 தொகுதிகளில் மட்டுமே ஒரு சில பெண்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

    அதிகபட்சமாக செகந்திராபாத் மற்றும் வாரங்கல் தொகுதியில் தலா 8 பேர் போட்டியிடுகின்றனர்.

    குறைந்த அளவில் பெண்கள் போட்டியிடுவது அந்த மாநிலத்தில் உள்ள பெண் சமூக ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண்ணை தலைவராக ஏற்க மக்கள் தயங்குகிறார்கள். அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு முக்கிய பதவிகளை வழங்காததால் பெண்கள் அரசியலுக்கு வருவதில்லை.

    பெண்கள் போட்டியிட தயங்கினால் அவர்களுக்காக போராட யாரும் இருக்க மாட்டார்கள். இதனை மாநிலத்தில் உள்ள பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சந்திரசேகர ராவ் மறைமுகமாக பா.ஜ.க.வை ஆதரித்து வருகிறார்.
    • பிரதமர் மோடி தெலுங்கானா மக்களுக்காக எதையும் செய்யவில்லை.

    தெலுங்கானா மாநிலம் நக்ரேக்கல் பகுதியில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம் செய்தார்.

    தெலுங்கானாவில் முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் மறைமுகமாக பா.ஜ.க.வை ஆதரித்து வருகிறார். இந்த தேர்தலுக்கு பிறகு அவருடைய கட்சி காணாமல் போய்விடும்.

    பிரதமர் மோடி தெலுங்கானா மக்களுக்காக எதையும் செய்யவில்லை. முந்தைய காங்கிரஸ் அரசில் உருவாக்கிய பொதுத் துறை நிறுவனங்களை மோடி பலவீனப்படுத்தினார். பா.ஜ.க.வின் கஜானாவை நிரப்புவதற்காக மக்களையும், நாட்டையும் கொள்ளையடித்தார்.

    மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. ஆகியோரின் அடிப்படை உரிமைகளை பறித்து அடிமைகளாக மாற்றுவார்கள். அரசியல் சட்டத்தை மாற்றி இட ஒதுக்கீட்டை அகற்றி உங்கள் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறிக்க நினைக்கிறார்கள்.

    மோடியை வெளியேற்றி நாட்டை காப்பாற்ற வேண்டிய நேரம் இது.

    தெலுங்கானா மக்கள் இந்த தேர்தலில் கவனமுடன் வாக்களிக்க வேண்டும். உங்களுடைய தேர்வு சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்றுவதாக இருக்க வேண்டும்.

    வேலையில்லா திண்டாட்டம் விலைவாசி உயர்வு கவலையை அளிக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகள், அரசியலமைப்பு சட்டத்தை நாங்கள் முன்னின்று காப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாட்டின் மொத்த வேட்பாளர்களில் 26 சதவீத வேட்பாளர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களாக இருந்தனர்.
    • கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 421 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது.

    காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று இப்போதே பலரும் ஆய்வு செய்ய தொடங்கி விட்டனர். மாநிலம் வாரியாக இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் அடிப்படையில் ஆய்வு நடந்து வருகிறது.

    இதில் காங்கிரஸ் கட்சி மிக குறைவான இடங்களில் போட்டியிடுவதை அரசியல் ஆய்வாளர்கள் அனைவரும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுத்து காங்கிரஸ் குறைவான தொகுதிகளில் போட்டியிடுவது காங்கிரஸ் தலைவர்களின் தேர்தல் வியூகமாக இருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது.

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி மிக மிக குறைவான தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதால் அதுவே விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது. மிக குறைவான இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி விட்டு மத்தியில் எப்படி ஆட்சியை பிடிக்க முடியும் என்ற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பி வருகிறார்கள்.

    1951-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 479 இடங்களிலும் போட்டியிட்டது. நாட்டின் மொத்த வேட்பாளர்களில் 26 சதவீத வேட்பாளர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களாக இருந்தனர். 1957-ல் 490 இடங்களில், 1962-ல் 488 இடங்களிலும், 1967-ல் 516 இடங்களிலும், 1971-ல் 441 இடங்களிலும், 1977-ல் 492 இடங்களிலும், 1980-ல் 492 இடங்களிலும், 1984-ல் 517 இடங்களிலும் காங்கிரஸ் போட்டியிட்டது.

    1989-ம் ஆண்டு தேர்தலில் 510 இடங்களிலும், 1991-ல் 500 இடங்களிலும், 1996-ல் 529 இடங்களிலும், 1998-ல் 477 இடங்களிலும், 1999-ல் 453 இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை களம் இறக்கியது. 2004-ம் ஆண்டு தேர்தலில் 417 வேட்பாளர்களும், 2009-ம் ஆண்டு தேர்தலில் 440 வேட்பாளர்களும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டனர்.

    மோடி தேசிய அரசியலுக்கு பாரதிய ஜனதாவை எழுச்சியுற செய்த 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 464 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 421 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது.

    ஆனால் இந்த தடவை காங்கிரஸ் கட்சி 328 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. மீதமுள்ள அனைத்து இடங்களிலும் தோழமைக் கட்சிகளுக்கு விட்டு கொடுத்து விட்டது. பாரதிய ஜனதாவை ஒன்று சேர்ந்து வீழ்த்த வேண்டும் என்ற கொள்கை அடிப்படையில் மாநில கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டுக் கொடுத்து இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சொல்கிறார்கள்.

    பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற லட்சியத்தின் காரணமாகவே காங்கிரஸ் வரலாறு காணாத அளவுக்கு வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைத்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த தேர்தலை விட இந்த தடவை 93 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி குறைவாக போட்டியிடுகிறது.

    நாடு முழுவதும் 7 கட்ட தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கையுடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் எண்ணிக்கையை ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்த்த போது காங்கிரஸ் மிக மிக பரிதாப நிலையில் இருப்பது போல தோற்றம் அளிக்கிறது. அதாவது மொத்த வேட்பாளர்களில் 5 சதவீத அளவுக்கு கூட காங்கிரஸ் வேட்பாளர்கள் இல்லை.

    ஆனால் இதை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒரு குறையாக கருதவில்லை. மாறாக தேர்தல் வியூகமாக சொல்கிறார்கள். பாரதிய ஜனதாவை வீழ்த்த தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர்.

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாமல் இருந்தால் சரி.

    • வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    • சின்னங்களை பதிவேற்றிய பிறகு அந்த யூனிட்டை சீல் வைக்க வேண்டும் என உத்தரவு.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த எந்திரங்களில் பொத்தானை அமுக்கி வாக்களித்ததும் அந்த வாக்கு யாருக்கு அளிக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்காக விவிபாட் எனப்படும் ஒப்புகை சீட்டுகளை உறுதி செய்யும் எந்திரம் கடந்த 2013-ம் ஆண்டு தேர்தல் முதல் பயன்படுத்தப்படுகிறது.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மின்னணு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்து ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாற்றப்படுவதாக பெரும்பாலான எதிர்க்கட்சிகள் சந்தேகப்படுவதே இதற்கு காரணமாகும்.

    குறிப்பாக எந்த பொத்தானை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்கு அளிக்கும் வகையில் மின்னணு எந்திரங்களை மாற்றி அமைக்க முடியும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் முக்கியமான குற்றச்சாட்டு ஆகும். ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் மின்னணு எந்திரங்களில் முறைகேடு நடப்பதை தடுப்பதற்கு விவிபாட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை எண்ணி மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இது தொடர்பான வழக்கில் முதலில் ஒரு சட்டசபை தொகுதியில் குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியின் விவிபாட் எந்திர ஒப்புகை சீட்டுகள் மட்டும் எண்ணப்பட்டன. 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பான வழக்கில் ஒரு சட்டசபை தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளின் விவிபாட் எந்திர ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட வேண்டும் என அறிவுறுத்தியது.

    அதன் பேரில் தற்போது ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 5 வாக்குச்சாடிகளின் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படுகின்றன.

    இந்த நிலையில் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த புதன்கிழமை விசாரிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் 5 கேள்விகளை கேட்டு பதில் பெற்றனர். விவிபாட் எந்திரங்களின் செயல்பாடுகள் பற்றியும் கேட்டு அறிந்தனர்.

    அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், "விவிபாட் எந்திரத்தில் மைக்ரோ கன்ட்ரோலர் சிஸ்டம் உள்ளது. அதில் உள்ள தகவல்கள் ஒரு முறை செயல்படுத்தக்கூடியவை. அவற்றை மாற்றி அமைக்க முடியாது. இந்திய மின்னணு கழக நிறுவனம் மற்றும் பாரத் மின்னணு நிறுவனம் ஆகியவை இவற்றை தயாரித்து கொடுக்கின்றன" என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து நீதிபதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் சரிபார்க்க வசதியாக விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு முதலில் உத்தரவிட்டது. பின்னர் மற்றொரு தீர்ப்பில் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி ஒப்பீடு செய்யும் நடைமுறையை 5 வாக்குச்சாவடிகளாக அதிகரித்து உத்தரவிட்டது. இவை அனைத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திர நடைமுறையை வலுப்படுத்தும் நோக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளாகும்.

    ஆனால், நீங்கள் மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இதை ஏற்க முடியாது.

    இந்த எந்திரங்களின் செயல்பாடுகளில் சில சந்தேகங்கள் இருந்ததாலேயே, அது குறித்து தெளிவுபடுத்துமாறு தேர்தல் ஆணைய அதிகாரிகளை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் திறன் குறித்து 2-வது முறையாக தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்க முடியாது.

    தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் கொண்ட அமைப்பு. அதற்கான தனி தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையம் ஓர் அரசியல் கட்சி கிடையாது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பை இன்று வழங்கினார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது நம்பகத்தன்மை இருப்பதாக கூறிய நீதிபதிகள் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் தொழில்நுட்பம், வழிமுறைகள் குறித்து விரிவான விசாரணையும், ஆலோசனையும் நடத்தினோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், விவிபாட் கருவியின் நம்பகத்தன்மையை பல்வேறு கட்டங்களில் உறுதி செய்தோம்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கட்சியின் சின்னத்துடன் பார்கோடு இணைப்பது குறித்து ஆராய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை, விவிபாட் ஒப்புகை சீட்டுகளுடன் 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

    ஏற்கனவே நடைமுறையில் உள்ள 5 சதவீத ஒப்புகை சீட்டுகள் சரிபார்க்கும் நடைமுறை தொடர வேண்டும்.

    வாக்காளர்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க விவிபாட் ஒப்புகை சீட்டுகளை கூடுதலாக எண்ணுவதற்கான முடிவை தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

    வாக்குப்பதிவில் குளறுபடி என சொல்லி வேட்பாளர்கள் யாராவது அதை சரிபார்க்க விரும்பினால் கட்டணம் செலுத்த வேண்டும். வாக்குப்பதிவு எந்திரம் தவறாக செயல்பட்டது கண்டறியப்பட்டால் கட்டணம் திருப்பித் தரப்படும். எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது. தேர்தல் நடைமுறையை சந்தேகிப்பது தேவையற்ற குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறைந்தது 45 நாட்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட வேண்டும்.

    மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

    தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர் விரும்பினால் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் உள்ள மைக்ரோ கட்டுப்பாட்டு கருவியை ஆய்வு செய்யலாம்.

    எந்திரத்தில் சின்னத்தை பதிவேற்றி முடித்ததும் சின்னம் ஏற்றும் அலகு சீல் செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்கும் ஸ்டிராங் ரூமிலேயே சின்னங்களை பொருத்தும் எந்திரங்களை வைக்க வேண்டும்.

    மைக்ரோ கட்டுப்பாட்டு கருவியில் பயன்படுத்தும் சிப், பொறியாளர்கள் குழுவால் சரிபார்க்கப்பட வேண்டும்.

    மின்னணு எந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பகத்தன்மை உள்ளது. எனவே விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ண கோரிய மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    • சொந்த தொகுதியான மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் அதிக ஓட்டு களை பெற்று முன்னிலை வகிப்பார் என பலரும் பந்தயம் கட்டி வருகின்றனர்.
    • அரசியல் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பந்தயமாக கட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற பா.ஜனதா வேட்பாளராக நமச்சிவாயம், காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம், அ.தி.மு.க. வேட்பாளராக தமிழ்வேந்தன் போட்டியிட்டனர். அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

    ஓட்டுப் பதிவு நேற்று முன்தினம் நடந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்பது குறித்து டீ கடை, ரியல் எஸ்டேட் அலுவலகம், வணிக நிறுவனங்கள், நண்பர்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சியினரிடையே கடும் விவாதம் ஏற்பட்டு வருகிறது. இது ஒரு கட்டத்தில் சூதாட்டமாக உருமாறியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என ஒரு தரப்பினரும், பா.ஜனதா வேட்பாளர் வெற்றிக் கனியை பறிப்பார் என இன்னொரு தரப்பினரும் பந்தயம் கட்டி வருகின்றனர். இதற்காக, லட்சக்கணக்கில் பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.

    இதுமட்டுமல்லாமல், வில்லியனுார் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., பெற்ற ஓட்டுகளை விட ஒரு ஓட்டாவது கூடுதலாக காங்கிரஸ் வேட்பாளருக்கு கிடைக்கும் என ஒரு தரப்பினரும், வாய்பே இல்லை. இம்முறை வில்லி யார் தொகுதியில் நமச்சிவாயம் அதிக ஓட்டுகளை பெற்று தொகுதியில் முதலாவதாக வருவார் என எதிர்தரப்பினரும் ஆயிரக்கணக்கான ரூபாயை பந்தயம் கட்டி வருகின்றனர். இதுபோன்ற சூதாட்டம், மண்ணாடிப்பட்டிலும் களை கட்டி உள்ளது. சொந்த தொகுதியான மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் அதிக ஓட்டு களை பெற்று முன்னிலை வகிப்பார் என பலரும் பந்தயம் கட்டி வருகின்றனர்.

    இன்னொரு பக்கம், இந்த முறை சரித்திரம் மாறும் மண்ணாடிப்பட்டில் வைத்திலிங்கமே அதிக ஓட்டுகளை பெற்று சாதிப்பார் என எதிர்தரப்பினரும் பணத்தை பந்தயமாக கட்டி வருகின்றனர். அரசியல் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பந்தயமாக கட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் தீர்வு ஜூன் 4-ந் தேதி தெரிந்து விடும்.

    • வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.
    • நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்து வாக்களித்தார்.

    மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவிற்காக காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகர் அஜித்குமார் தனது வாக்கினை செலுத்த சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வருகை தந்து வாக்களித்தார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

    முன்னதாக, நடிகர் சிவகாத்திகேயன் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். நடிகர் கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    அதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குசாவடியில் அலையென திரண்ட மக்களுக்கு மத்தியில் வாக்களித்தார். நடிகர் சூர்யா, கார்ஹ்த்டி, சிவகுமார் குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

    நடிகர்களான விக்ரம், விஜய் சேதுபதி, செல்வ ராகவன், தனுஷ், வெற்றி மாறன் ரத்ன குமார், கமல்ஹாசன், திரிஷா, ஹரிஷ் கல்யாண் மற்றும் பலர் அவர்களின் ஜனநாயக கடமையை சிறப்பாக செய்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது
    • நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன.

    நாளை தேர்தல் நடைபெறவுள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதன்படி புதுச்சேரியின் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவத்தில் நுழைவு வாயிலில் அலங்காரம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இத்தகைய அலங்காரம் பாஜகவிற்கு உதவிகரமாக இருக்கும் என திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகாரளித்தனர். பின்னர் தாமரை அலங்காரங்களை தேர்தல் அதிகாரிகள் அகற்றினர். 

    • அனைத்து மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்.
    • சுயேட்சைகள் வெற்றி பெற முடியாது என சொல்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

    தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வரும் மன்சூர் அலிகான் இன்று கடைசிநாள் பிரசாரத்துக்கிடையே அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

    ஆள்பலம், பணபலம் இல்லாமல் தேர்தலில் நான் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். 1980-ல் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜனாப் அப்துல்சமது சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்.

    அதே பள்ளப்பட்டி தான் எனக்கு சொந்த ஊர். அங்கு தான் நான் படித்து வளர்ந்தேன். மக்கள் எனக்கு மிகுந்த ஆதரவினை கொடுத்து வருகிறார்கள். எனவே நான் சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெறுவேன். பாரதிய ஜனதாவிடம் பணம் வாங்கி கொண்டு வாக்குகளை பிரிப்பதற்காக தேர்தலில் நிற்கிறேன் என வதந்தி பரப்புகிறார்கள்.

    ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறேன். சுயேட்சைகள் வெற்றி பெற முடியாது என சொல்கிறார்கள். பல பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரியாக உள்ளனர். அனைத்து மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×