search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா தேர்தல்"

    • வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது சந்தித்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கை.
    • அவரது நடத்தை ஜூனியர் அதிகாரிகளை மறைமுகமாக பாதிக்கலாம், தேர்தல் விதிமுறையை மீறியதாக தேர்தல் ஆணையம் கருதியது.

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது.

    காங்கிரஸ் கட்சி வெற்றி அதிகாரப்பூர்வமாக ஆட்சியை பிடிக்கிறது என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே தெலுங்கானா டி.ஜி.பி. அஞ்சனி குமார், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டவருமான ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    இவரது நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய செயல் என தேர்தல் கமிஷன் அவரை சஸ்பெண்ட் செய்தது. இதனால் ஐபிஎஸ் அதிகாரி ரவி குப்தா கூடுதலாக டிஜிபி பொறுப்பை ஏற்றிருந்தார். இந்த நிலையில் அஞ்சனி குமார் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.

    இவரது சஸ்பெண்ட் நடவடிக்கைக்குப்பின் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மைக்கான இடத்தை பிடித்தது. பின்னர், ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரது நடத்தை ஜூனியர் அதிகாரிகளை மறைமுகமாக பாதிக்கலாம் என்று கருதிய தேர்தல் ஆணையம், டிஜிபி-யின் செயல் தெளிவான தேர்தல் விதிமுறை மீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    • காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
    • 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. என்றபோதிலும், காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

    பிஆர்எஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க தேர்தல் பணியில் முழுக்கவனம் செலுத்தியது. அதேவேளையில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததுபோன்று, தெலுங்கானாவிலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    தெலுங்கானாவில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின் அதிக அளவில் வாக்குகள் பதிவாகினது. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    தொடர்ந்து, 3 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 51.89 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், தெலங்கானாவில் சட்டசபை தேர்வதுலக்கான வாக்குப்பதிவு முடிவடைந்தது. 5 மணி வரை வாக்குச்சாவடியில் இருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் அளித்து வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்படி, 5 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63.94 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தெலுங்கானா தினசரி நாளேடுகளில் கர்நாடக அரசு விளம்பரங்கள் வெளியீடு.
    • பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், கர்நாடகா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி தெலுங்கானா தினசரி நாளேடுகளில் கர்நாடக அரசு செய்த சாதனைகளை விளக்கும் விளம்பரங்களை வெளியிட்டது.

    கர்நாடக அரசு விளம்பரங்கள் தேர்தல் நடைபெற இருக்கும் தெலுங்கானா மாநில நாளேடுகளில் விளம்பரங்களாக வெளியிடுவது குறித்து பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்திருக்கும் தேர்தல் ஆணையம், கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தின் விளம்பரங்கள் தெலுங்கானா நாளேடுகளில் வெளியிட தடை விதித்து இருக்கிறது.

    தேர்தலில் பலத்தை நிரூபிக்க காங்கிரஸ் கட்சி பொது மக்களின் வரி பணத்தை வீணடிக்கிறது என பா.ஜ.க. குற்றம்சாட்டி இருந்தது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கட்சி நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யானின் ஜன சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

    நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதே நாளில் தெலுங்கானா மட்டுமின்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் என மொத்தம் ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

    • ஊழல் செய்யும் அரசாங்கத்தை கே. சந்திரசேகர ராவ் நடத்தி வருகிறார்.
    • சந்திரசேகர ராவின் குடும்பத்தினர் வசம் தான் உள்ளது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

    அந்த வகையில், அந்தோல் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிராசார கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, தெலுங்கானா முதலமைச்சர் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் கே. சந்திரசேகர ராவ்- தனது கட்சி மாநிலத்திற்காக என்ன செய்துள்ளது என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.

    தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலேயே மிகவும் ஊழல் செய்யும் அரசாங்கத்தை கே. சந்திரசேகர ராவ் நடத்தி வருகிறார். இவரது ஆட்சியில் பணம் கொட்டும் இலாகாக்கள் அனைத்தும் சந்திரசேகர ராவின் குடும்பத்தினர் வசம் தான் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதோடு காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் அளித்திருக்கும் ஆறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சட்டம் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே இயற்றப்பட்டு விடும், அவை நிறைவேற்றப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    "தெலுங்கானாவில் தற்போது நில பிரதிநிதித்துவ அரசு மற்றும் மக்கள் அரசிடையேயான போட்டி நிலவி வருகிறது. உங்களது முதலமைச்சர் காங்கிரஸ் கட்சி என்ன செய்திருக்கிறது என கேட்கிறார். ஆனால், காங்கிரஸ் என்ன செய்தது என்பதை விட, கே சந்திரசேகர ராவ் என்ன செய்திருக்கிறார் என்பதே கேள்வியாக இருக்க வேண்டும்," என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    • தேர்தலில் இக்கட்சிகளை 360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • எம்.ஐ.எம். கட்சியின் 12 வேட்பாளர்களில் 6 பேருக்கு குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், இந்த தேர்தலில் இக்கட்சிகளை 360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அவர்களில் 226 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என தேர்தல் பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்துள்ளது.

    இதில், ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதியின் 119 வேட்பாளர்களில் 58 பேர், பா.ஜ.க.வின் 111 வேட்பாளர்களில் 78 பேர், காங்கிரஸின் 118 வேட்பாளர்களில் 84 பேர், எம்.ஐ.எம். கட்சியின் 12 வேட்பாளர்களில் 6 பேருக்கு குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவுற்று இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் வருகிற 30-ந் தேதி 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில் 3-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைப்போம் என்று பிஆர்எஸ் கட்சி தலைவர் முதல் மந்திரி கே. சந்திரசேகர ராவ் நம்பிக்கையுடன் கூறி வருகிறார். மாதம் 4,000 உதவித் தொகை, ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர் என காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிகளும் மக்களை கவர்ந்துள்ளது.

    டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. களமிறங்கி உள்ளது.

    இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவுற்று இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

    அதன்படி, 119 தொகுதிகளுக்கு. மொத்தம் 4,798 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்பு மனு பரிசீலனை செய்ததில் 2,898 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பதால், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் போட்டியிடும் கஜ்வேல் தொகுதியில் அவரை எதிர்த்து மொத்தம் 113 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதேபோன்று அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான காமாரெட்டி தொகுதியில் சந்திரசேகர ராவை எதிர்த்து 57 பேர் போட்டியிடுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பைனாகுலர் சின்னத்தை சர்மிளா விரும்பவில்லை.
    • தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட்டுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா, தெலுங்கானா அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

    தெலுங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரசுடன் கைகோர்த்து தேர்தல் களம் காண சர்மிளா விரும்பினார்.

    அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து சர்மிளா 119 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து தேர்தல் பணியை தொடங்கினார்.

    தனது கட்சிக்கு பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் சர்மிளா விண்ணப்பித்திருந்தார். அதன்படி அவரது கட்சிக்கு 'பைனாகுலர்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

    ஆனால் அந்த சின்னத்தை சர்மிளா விரும்பவில்லை. தங்களுக்கு ஏர் உழும் விவசாயி சின்னம் அல்லது பாம்பு புற்று சின்னம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று சர்மிளா விரும்புகிறார்.

    இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட்டுள்ளார்.

    • அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பணம், பரிசு பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாக்காளர்களை கவருவதற்காக அரசியல் கட்சியினர் பரிசுப் பொருட்கள் மற்றும் மதுபானங்களை ஆங்காங்கே பதுக்கி வைத்துள்ளனர்.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறக்கும் படைகள் அமைத்து வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் மது பாட்டில்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்த ரூ.3.68 கோடி மதிப்புள்ளான மது பாட்டில்கள் ரூ.3.17 கோடி ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தெலுங்கானாவில் போலீசார் நடத்திய சோதனையில் இதுவரை 347.16 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    ×