search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா தேர்தலில் சர்மிளாவுக்கு பைனாகுலர் சின்னம்- வேறு சின்னம் வழங்க முறையீடு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தெலுங்கானா தேர்தலில் சர்மிளாவுக்கு பைனாகுலர் சின்னம்- வேறு சின்னம் வழங்க முறையீடு

    • பைனாகுலர் சின்னத்தை சர்மிளா விரும்பவில்லை.
    • தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட்டுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா, தெலுங்கானா அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

    தெலுங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரசுடன் கைகோர்த்து தேர்தல் களம் காண சர்மிளா விரும்பினார்.

    அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து சர்மிளா 119 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து தேர்தல் பணியை தொடங்கினார்.

    தனது கட்சிக்கு பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் சர்மிளா விண்ணப்பித்திருந்தார். அதன்படி அவரது கட்சிக்கு 'பைனாகுலர்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

    ஆனால் அந்த சின்னத்தை சர்மிளா விரும்பவில்லை. தங்களுக்கு ஏர் உழும் விவசாயி சின்னம் அல்லது பாம்பு புற்று சின்னம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று சர்மிளா விரும்புகிறார்.

    இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட்டுள்ளார்.

    Next Story
    ×