என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெலுங்கானா"

    • ஏராளமான மக்கள் பன் வாங்கி சாப்பிட்டு, அவருக்குத் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
    • அமைச்சர் நாரா லோகேஷ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன்

    தெலங்கானாவின் புகழ்பெற்ற மேதாரம் ஜாத்ரா திருவிழாவில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான ஷேக் ஷா வாலி, சாலையோரம் கடை அமைத்து 'கோவா பன்' விற்று வந்துள்ளார்

    அங்கு வந்த சில யூடியூபர்கள் அவரிடம், அந்த பன் பாதுகாப்பானதுதான் என்பதை நிரூபிக்க வாலியை கோவா பன்-ஐ சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். அவரின் அடையாளத்தை சரிபார்க்க ஆதார் அட்டையைக் கேட்டு வற்புறுத்திய அவர்கள், அவரின் வியாபாரத்தை 'உணவு ஜிகாத்' என குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ கண்டனத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஏராளமான மக்கள் வாலியின் கடைக்குச் சென்று பன் வாங்கி சாப்பிட்டு, அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தச் சம்பவத்தைக் கண்டித்த ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், "அன்புச் சகோதரர் வாலி அவர்களே, உங்களுக்கு நேர்ந்த இந்த கசப்பான அனுபவத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன். சகோதரத்துவத்திற்கும் பரஸ்பர மரியாதைக்கும் பெயர் போன நமது தெலுங்கு சமூகத்தில் இத்தகைய பிரிவினைவாதப் போக்கிற்கு இடமில்லை.

    நான் விரைவில் உங்களைச் சந்தித்து, உங்கள் கைகளால் அந்தப் புகழ்பெற்ற 'கோவா பன்'-ஐ ருசிப்பேன். நாம் அனைவரும் உங்கள் பக்கம் நிற்கிறோம்." என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாரா லோகேஷ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கானாவில் நகராட்சி தேர்தல் நடைபெற்றது.
    • காங்கிரஸ் வேட்பாளர் பணம் மற்றும் குக்கர்கள் வழங்கிய நிலையிலும் தோல்வியடைந்தார்.

    தெலுங்கானா மாநிலத்தில் நகராட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான வார்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    அஸ்வராவ்பேட்டா என்ற நகராட்சியிலும் தேர்தல் நடைபெற்றது. இங்குள்ள 10-வது வார்டில் காங்கரிஸ் கட்சி போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், வாக்கு சேகரித்தபோது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் சமையல் குக்கர் போன்ற பரிசுப்பொருட்களை வழங்கியுள்ளார்.

    ஆனால், தேர்தலில் அவர் தோல்வியடைந்துள்ளார். இதனால் விரக்தி ஏற்பட்டுள்ளது. தனக்கு வாக்களிப்பாளர்கள் என்று பரிசுப் பொருட்கள் வழங்கினேன். ஆனால் எனக்கு வாக்களிக்கவில்லை. இதனால் வாக்காளர்கள் தான் வழங்கிய பரிசுப் பொருட்களை திரும்ப வழங்க வேண்டும் என்று கூறியதாக செய்திகள் பரவியது.

    இதனால் 10-வது வார்டு வாக்காளர்கள் கடும் கோபம் அடைந்தனர். அவர்கள் குக்கருடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.

    நாங்கள் ஒருபோதும் பணமே அல்லது குக்கரோ கேட்கவில்லை. இப்போது நாங்கள் ஏன் அவமானப் படுத்தப்படுகிறோம். என வாக்காளர்கள் கேட்டனர்.

    இந்தக் கோரிக்கையால் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாகவும், வேட்பாளர் தங்களை மிரட்ட முயற்சிப்பதாகவும் குடியிருப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.

    போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து பதற்றத்தை தனித்தனர்.

    • 448 வார்டுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 240 வார்டுகளில் வெற்றிபெற்றது.
    • பி.ஆர்.எஸ் 140 வார்டுகளிலும், பா.ஜனதா 37 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.

    தெலுங்கானாவில் நேற்று முன்தினம் 116 நகராட்சிகளில் உள்ள 2,582 வார்டுகளுக்கும், 7 மாநகராட்சிகளில் உள்ள 414 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

    இன்று மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 448 வார்டுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 240 வார்டுகளில் வெற்றிபெற்றது.

    பி.ஆர்.எஸ் 140 வார்டுகளிலும், பா.ஜனதா 37 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் பல வார்டுகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

    • கிராமத்தின் அருகே உள்ள குளத்தின் கரையின் டிராக்டர் வந்து கொண்டு இருந்தது
    • டிராக்டரில் வந்த 20 பெண்களும் தண்ணீரில் மூழ்கினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் மல்லாபூர் அடுத்த மொகிலி பேட்டாவை சேர்ந்த 20 பெண்கள் மஞ்சள் அறுவடை வேலைக்காக அருகில் உள்ள கிராமத்திற்கு டிராக்டரில் சென்றனர்.

    நேற்று மாலை வேலை முடிந்து மீண்டும் டிராக்டரில் சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    கிராமத்தின் அருகே உள்ள குளத்தின் கரையின் டிராக்டர் வந்து கொண்டு இருந்தது. குறுகிய வளைவில் திரும்பும்போது டிராக்டர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்தது.

    டிராக்டரில் வந்த 20 பெண்களும் தண்ணீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கிய பெண்களை மீட்டனர். இதில் தண்ணீரில் மூழ்கி சம்பங்கி சாய்ம்மா (வயது 35),லலிதா (42 ), வைஷ்ணவி (13), பெட்டி ரெட்டி கங்கு (32) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    விவசாய வேலைக்குச் சென்று ஒரே ஊரை சேர்ந்த 4 பெண்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மல்லாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிபின் ராம்தாஸ் ஐதராபாத் ஐகோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
    • அசைவ உணவுப் பொருட்கள் விற்பனையை தடுக்க ஒரு கொள்கையை வகுக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தின் ரெட் ஹில்ஸில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிபின் ராம்தாஸ் என்பவர் இறைச்சி மற்றும் அசைவ உணவு பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி கோரினார். இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்தனர். இதனை எதிர்த்து அவர் ஐதராபாத் ஐகோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கில் வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்தப் பிரச்சனையில் வழிகாட்டுதல்களை வகுக்க உத்தரவிட்டார்.

    மேலும் நீதிபதி கூறுகையில், தெலுங்கானா மாநிலத்தில் கோவில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு 100 மீட்டருக்குள் இறைச்சி மற்றும் அசைவ உணவுப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க ஒரு கொள்கையை வகுக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    பக்தர்களின் உணர்வுகள், அமைதி, தூய்மை, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை மனதில் கொண்டு வழிகாட்டுதல்களை வகுக்குமாறு நகராட்சி மற்றும் உள்துறை முதன்மை செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

    இறைச்சி விற்பனை மையங்களைத் திறப்பதற்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்கான விதியைச் சேர்க்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது. இந்த செயல்முறையை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • பஞ்சாயத்துத் தேர்தலின் போது "தெருநாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லையை ஒழிப்போம்" என்று வாக்குறுதி அளித்தனர்.
    • கிராமங்களின் பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மீது வழக்குபதியப்பட்டது.

    தெலுங்கானாவில் உள்ள கிராமங்களில் சுமார் 300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    ஹனுமகொண்டா மாவட்டத்தில் உள்ள ஷியாம்பேட் மற்றும் அரேபள்ளி கிராமங்களில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

    பஞ்சாயத்துத் தேர்தலின் போது "தெருநாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லையை ஒழிப்போம்" என்று வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, பஞ்சாயத்து தலைவர்கள் இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது.

    பஞ்சாயத்து தலைவர்கள் இருவரை வாடகைக்கு அமர்த்தி, தெருநாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி அவற்றைக் கொன்றுள்ளனர். பின்னர் அந்த உடல்களை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் குழிதோண்டிப் புதைத்துள்ளனர்.

    விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், இதில் ஷியாம்பேட் மற்றும் அரேபள்ளி கிராமங்களின் பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களின் கணவர்கள், பஞ்சாயத்துச் செயலாளர்கள் மற்றும் நாய்களைக் கொன்ற கூலி ஆட்கள் ஆகிய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த ஒரு மாதத்தில் மட்டும் தெலுங்கானா முழுவதிலும் உள்ள பல்வேறு கிராமங்களில் இதேபோல 900 நாய்கள் கொல்லப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

    • பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லறை காட்டினார்.
    • மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.

    தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் இந்திரய்யா (வயது 80). இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.

    தனது மரணத்திற்கு பிறகு தனது பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதற்காக தனக்குத்தானே கல்லறை கட்ட முடிவு செய்தார்.

    இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கொத்தனார் மூலம் தனது மனைவியின் கல்லறை அருகே பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லறை காட்டினார் .

    இந்திரய்யா தினமும் தனது கல்லறைக்கு சென்று சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு சிறிது நேரம் அங்கேயே தங்கி இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    இந்நிலையில் இந்திரய்யா உடல்நலக்குறைவால் நேற்று முன் தினம் (ஜனவரி 11) காலமானார். அவரது இறுதி விருப்பப்படியே, தான் பார்த்து பார்த்துச் செதுக்கிய கல்லறையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

    முன்னதாக தனக்குத் தானே கல்லறை கட்டியது குறித்து இந்திரய்யா ஊடகங்களிடம் பேசியவை அவர் இறந்த பின், மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

    அதில் அவர், எனக்கு நானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 5 வீடுகள், ஒரு பள்ளி மற்றும் ஒரு தேவாலயம் கட்டி இருக்கிறேன்." என்று பேசியிருந்தார்.

    மேலும் தனது கல்லறையில் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.  

    • கட்சிக்குள் தனது கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
    • தந்தையை சுற்றி தீயசக்திகள் இருப்பதாக கவிதா கூறியிருந்தார்.

    தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான கவிதா அக்கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

    கேசிஆரின் மகனான கே.டி. ராமராவ் கட்சியில் அதிக அதிகாரத்துடன் வலம் வந்ததும், மகள் கவிதா ஓரங்கட்டப்பட்டதும் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்தது.

    கவிதா, அண்ணன் ராமராவை மறைமுகமாக பலமுறை விமர்சித்து வந்தார். தந்தையை சுற்றி தீயசக்திகள் இருப்பதாக கவிதா கூறியிருந்தார்.

    கவிதாவின் நடவடிக்கைகளுக்காக கேசிஆர் கடந்த ஆண்டு செப்டம்பரில் அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருந்தார். அதற்கு அடுத்தநாளே கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவித்தார்.

    இந்நிலையில் புதிய அரசியல் கட்சியை தொடங்கும் முடிவை கவிதா அறிவித்துள்ளார்.

    நேற்று தெலுங்கானா சட்ட மேலவையில் கவிதா பேசும்போது, "சுயமரியாதைக்காகவே எனது தந்தையின் கட்சியை விட்டு வெளியேறினேன்" என்று கண்கலங்கியபடி தெரிவித்தார்.

    தனது பங்களிப்புகள் இருந்தபோதிலும், கட்சிக்குள் தனது கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் தனது முடிவுக்கு காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் சொத்து தகராறு காரணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும், தெலுங்கானா பெண்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து உழைக்கப்போவதாகவும் அவர் கூறினார்.   

    இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, ''நாங்கள் மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கப் போகிறோம். ஜனநாயக ரீதியாக களத்தில் பணியாற்ற விரும்பும் மக்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்கும்.

    எங்களின் கட்சி என்றும் தெலுங்கானா மக்களின் கட்சி என்றும் நாங்கள் நினைத்த பிஆர்எஸ், பல விஷயங்களில் எங்களை கைவிட்டுவிட்டது. எங்கள் லட்சியங்களை அது நிறைவேற்றவில்லை. புதிய கட்சி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்'' என தெரிவித்தார்.

    தெலுங்கானா ஜாக்ருதி என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் கவிதா, அந்த அமைப்பையே அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டிருக்கிறார். தெலுங்கானாவில் தற்போது முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில் அங்கு 3 ஆண்டுகள் கழித்து சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 

    • புதிய விபி-ஜி ராம்ஜி சட்டம் ஏழைகளுக்கு தீங்கு விளைவிக்கிறது.
    • முன்பு 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

    மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (MGNREGA)வை திரும்பப் பெற்று, VB GRAM G என்ற பெயரில் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில் காங்கிரஸ் ஆளும், தெலுங்கானா மாநில சட்டமன்றம் MGNREGA சட்டத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், அதற்குப் பதிலாக வந்த VB GRAM G ராம்ஜி சட்டத்தை ரத்து செய்யவும் நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    புதிய விபி-ஜி ராம்ஜி சட்டம் ஏழைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் அசல் நோக்கத்தை பலவீனப்படுத்தியதாகவும் சட்டமன்றத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

    முன்னதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் நடந்த நிகழ்வில் பேசுகையில், "மகாத்மா காந்தியை முதல்முறை கோட்சே கொன்றார். இப்போது இந்த அரசு அவரை இரண்டாம் முறையாகக் கொல்கிறது.

    இதன்மூலம் பஞ்சாயத்துகளுக்கு இருந்த அதிகாரங்களைப் பறித்துவிட்டு, இனி எந்த ஊருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை டெல்லியில் இருந்து மத்திய அரசே முடிவு செய்யும்.

    முன்பு 100% ஊதியத்தை மத்திய அரசு வழங்கியது. இப்போது மத்திய அரசு 60% மட்டும் வழங்கும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்கிறார்கள். இது அரசியலமைப்பிற்கு எதிரானது.

    பெண்கள், தலித்துகள் மற்றும் சூத்திரர்கள் கையில் பணம் புழங்கக்கூடாது, அவர்கள் சுயமரியாதையோடு வாழக்கூடாது என்று மனுஸ்மிருதி சொல்கிறது.

    ஆர்எஸ்எஸ் அந்த மனுஸ்மிருதியால் ஈர்க்கப்பட்டது. அந்த ஆர்எஸ்எஸ் தான் பாஜகவை வழிநடத்துகிறது. அதனால்தான் ஏழைகளின் வாழ்வாதாரமான இந்தத் திட்டத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள்." என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 12.72 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்தனர்.
    • சொத்துகளின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்ட துணை போக்குவரத்து ஆணையர் மூட் கிஷன். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது.

    இதைத் தொடர்ந்து தெலுங்கானா ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அவருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது அவர் ரூ.12.72 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்களை வாங்கி இருந்தது கண்டறியப்பட்டது. இந்த சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    இதனால் அவர் வாங்கிய சொத்துக்களின் மதிப்பு ரூ.100 கோடி வரை செல்லலாம் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் 13 (1), (பி) மற்றும் 13 (2) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • சாலைக்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ' என்று பெயரிடப்படும் என்று தெலுங்கானா அரசு தகவல்
    • பசுமை வழிச் சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா பெயரை சூட்ட அரசு முடிவு

    ஐதராபாத்தில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள சாலை ஒன்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரை சூட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அந்த சாலைக்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ' என்று பெயரிடப்படும் என்று தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ள RRR எனப்படும் பசுமை வழிச் சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா பெயரை சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக தகவல் தெரிவிக்க மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும், அமெரிக்க தூதரகத்திற்கும் தெலுங்கானா அரசு கடிதம் எழுதவுள்ளது.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெல்லியில் நடைபெற்ற USISPF மாநாட்டில் பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "ஐதராபாத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் பெயரைச் சூட்ட வேண்டும் தெரிவித்தார்.

    குறிப்பாக கூகிள் மற்றும் கூகிள் மேப்ஸின் உலகளாவிய தாக்கத்தையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் ஒரு முக்கிய பகுதிக்கு 'கூகிள் ஸ்ட்ரீட்' என்று பெயரிடப்படும் என்றும் மைக்ரோசாப்ட் மற்றும் விப்ரோ பெயரும் சாலைகளுக்கு வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டி ஷில்பராமமில் பெண்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய கடைகள்.
    • தனது தொகுதியை இன்னும் 16 மாதங்களுக்குள் கல்வி மையமாக மாற்ற திட்டம்.

    தெலுங்கானாவில் உள்ள பெண்கள் தயாரிக்கும் பொருட்கள் சர்வதேச சந்தைகளை எட்டும் வகையில் அமேசான் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    அக்சய பாத்திர பவுண்டேசன் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேவந்த் ரெட்டி "தனது தொகுதியை இன்னும் 16 மாதங்களுக்குள் கல்வி மையமாக மாற்ற மாநில அரச திட்டமிட்டுள்ளது.

    ஐதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டி ஷில்பராமமில் பெண்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் தயாரிக்கும் பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய அமேசானுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    குழந்தைகளின் கல்வி பெற்றோரின் வாழ்க்கையை மாற்றுவதால், கோடங்கல் தொகுதியில் உள்ள 312 அரசுப் பள்ளிகளில் 28,000 மாணவர்களுக்கு அக்ஷய பாத்திர அறக்கட்டளை மூலம் காலை உணவு வழங்கப்படுகிறது" என்றார்.

    ×