என் மலர்
நீங்கள் தேடியது "Vijay Sethupathi"
- நடிகர் விஜய் சேதுபதி பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
- விஜய் சேதுபதி நடித்த ‘உப்பென்னா’ திரைப்படம் தேசிய விருது பெற்றது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.
விஜய் சேதுபதி கடந்த 2021-ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குனர் பிச்சிபாபு சனாவின் இயக்கத்தில் 'உப்பென்னா' என்ற திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. மேலும், தேசிய விருதையும் பெற்றது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் வெளியான 'லாபம்' திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டியை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்துவிட்டார். இது குறித்து அவர் அப்போது விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, "லாபம் படத்தில் கீர்த்தி ஷெட்டியை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என பட நிறுவனம் கூறியது. அதே நேரத்தில் தெலுங்கில் உப்பென்னா படத்தில் அவருக்கு தந்தையாக நடித்துக் கொண்டிருந்தேன். அப்பாவாக நடிக்கும் போது எப்படி என்னால் ரொமான்ஸ் செய்ய முடியும் என்று கூறி மறுத்துவிட்டேன்.

'உப்பென்னா'பட கிளைமேக்ஸ் காட்சியில் நான் கீர்த்தியிடம், என்னை உங்களின் தந்தையாக நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். கீர்த்திக்கு என் மகன் வயது தான் இருக்கும். கீர்த்தியை என் மகளாகதான் நான் பார்த்தேன். என்னால் அவருடன் நிச்சயமாக என்னால் ரொமான்ட்டிக்காக நடிக்க முடியாது" என்று பேசினார்.
- இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மகாராஜா’.
- இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படமான 'மகாராஜா' திரைப்படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதி செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, என்னை திட்டியும் வாழ்த்தியும் இந்த உயரத்திற்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொறுமையும் அனுபவமும் ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அத்தகைய அற்புதமான அனுபவத்தை கொடுத்த என் இயக்குனர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. இந்த படம் உங்களுக்கு பிடித்தது போல வந்திருக்கிறது. ஐம்பதாவது படம் என்பது நிச்சயம் என் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல். அது ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது.

என் சினிமா வாழ்க்கையின் மிக முக்கிய புள்ளியை அருள் தாஸ் அண்ணன் வைத்துள்ளார். அவரைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மீண்டும் வந்துள்ளது. நட்டி சாரை பார்க்கும் பொழுது ரஜினி சாரின் அதே வேகம், ஈர்ப்பு அவரிடம் இருந்தது. பிலோமின், தினேஷ், அபிராமி, மம்தா என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர். நிதிலன் தயாரிப்பாளர்களின் பணத்தை எடுத்து தருவேன் என்று சொன்னது திமிர் கிடையாது, அவர் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை. அந்த அளவுக்கு சிறப்பாக படம் வந்திருக்கிறது. பாய்ஸ் மணிகண்டன் அவரின் சமீபத்திய பேட்டி ஒன்று பார்த்தேன்.

மகாராஜா போஸ்டர்
மாடர்ன் சாமியார் போல அவ்வளவு நம்பிக்கையாக பேசியிருந்தார். அவர் இன்னும் நிறைய உயரம் அடைய வேண்டும். அனுராக் சாரின் தயாரிப்பில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது. ஆனால் இந்த படத்திற்காக அவர் செய்த வேலை மிகப்பெரியது. நானும் அவரும் இணைந்து இன்னும் நிறைய படங்கள் பணிபுரிய வேண்டும் என விருப்பம்" என்றார்.
- நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.
- இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50-வது படமான 'மகாராஜா' திரைப்படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மகாராஜா போஸ்டர்
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதி செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'மகாராஜா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் நாளை வெளியாகவுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
#MaharajaFirstLook is releasing on Sep 10th. #Maharaja @Dir_nithilan @PassionStudios_ @TheRoute @Jagadishbliss @Sudhans2017 @anuragkashyap72 @Natty_Nataraj @mamtamohan @ThinkStudiosInd @jungleeMusicSTH #VJS50FirstLook #VJS50 #PassionAndRoute pic.twitter.com/W3pSARFR8O
— VijaySethupathi (@VijaySethuOffl) September 8, 2023
- நடிகர் ஷாருக்கான் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜவான்' படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கவுரி கான் தயாரிப்பில் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நாளை (வியாழக்கிழமை) உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
'ஜவான்' படக்குழுவினர் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி கேள்விகளுக்கு பதில் அளிப்பது போல் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி-பதில் வருமாறு:-
கேள்வி : அட்லீயும், நீங்களும் நீண்ட நாட்களாக இணைந்து பணியாற்ற விரும்புவது உண்மையா?
ஷாருக்கான்:- "பிகில் பட தயாரிப்பின் போது நான் அட்லீயை சந்தித்தேன். அவர் சிஎஸ்கே மற்றும் கே.கே.ஆர் போட்டிகளுக்கு சென்றி ருந்தார். இதற்கு முன் அட்லீ என்னிடம் ஜவான் பற்றிய மூலக்கதையை சொன்னார். உங்களுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும்' என்றார். அப்படித்தான் ஜவான் தொடங்கியது.

கேள்வி :- நீங்கள் வில்லனா? அல்லது ஹீரோவா அல்லது வில்லனிக் ஹீரோவா? உங்களின் ரகசியத்தைப் பற்றி சொல்லுங்களேன்..?
ஷாருக்கான்:- இதில் ஒரு சாதாரண மனிதர் எல்லோருடைய பொது நலனுக்காகவும் அசாதாரணமான விசயங்களை செய்கிறார்'' என்றார்.
கேள்வி :- ஷாருக்கானுடன் பணிபுரிந்த அனுபவம்?
விஜய் சேதுபதி- "ஷாருக்கான் நேர்காணலின் போது எப்படி புத்திசாலித்தனமாக கேள்விகளை எதிர்கொண்டு பதிலளிக்கிறார் என்பதை பார்த்து வியந்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி அறிந்து கொள்ள. அவரிடம் கேட்க பல கேள்விகள் உள்ளது'' என்றார்.
கேள்வி :- நீங்கள் ஒரு அதிரடி நாயகனா? அல்லது ஆயுள் காப்பீட்டுடன் உள்ள சாதாரண நபரா?
ஷாருக்கான்:- "என் இன்சூரன்ஸ் பாலிசி முடிந்துவிட்டது. பலமுறை காயம் அடைவதால் எனக்கு யாரும் காப்பீடு செய்ய விரும்பவில்லை. மேலும் ஆக்ஷன் படங்களை செய்வதை விரும்புவதற்கு ஒரே காரணம். என்னுடைய இளைய மகன் ஆப்ராம். அவர் ஆக்சன் -அனிமேஷன் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் கொண்ட படங்களை பார்க்க விரும்புவதால் அவருக்காக ஆக்சன் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்'' என்றார்.

கேள்வி:- இவ்வளவு அழுத்தமான வில்லன் வேடத்திற்கு நீங்கள் எப்படி தயாரானீர்கள்?
விஜய்சேதுபதி:- "திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் நான் வல்லவன் என்பது எனக்குத் தெரியும். வேறு எதையும் என் தலைக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை. நான் செய்ய விரும்பாத வேடத்தை செய்தால் அது என் மனதை கெடுத்து விடும் என்று நம்புகிறேன்'' என்றார்.
கேள்வி :- ஜவானில் நடிக்க ஒப்புக்கொண்ட தருணம் குறித்து...?
ஷாருக்கான்:- "நான் மொட்டை ஹீரோவாக அறிமுகப்படுத்தப்படும் ஒரு காட்சி இருக்கிறது. அப்போது இயக்குனர் அட்லீ என் கையில் நிறைய பவுடரைக் கொட்டியது எனக்கு நினைவிருக்கிறது. நான் அந்த காட்சியிலும் நடித்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் நான் இறுதியாக அந்த காட்சியை பார்த்தபோது மறக்க முடியாததாக இருந்தது. ஜவான் படத்திற்கான எனது தருணம் அதுதான். '' என்றார்.
- 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது.
- இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.
இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இதில், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- இயக்குனர் சேரன் பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

இயக்குனர் சேரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இவரிடம் விஜய் சேதுபதிக்கு படம் இயக்குவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "அது இனிமேல் பண்ண முடியாது. அவரோட நிலை உயர்ந்துவிட்டது. அவருக்கான கதை மாற்றப்பட வேண்டும் மற்றும் அவர் மிகவும் பிசியாக இருக்கிறார். அதனால் தற்போது அந்த படம் பண்ண முடியாது" என்று கூறினார்.
- 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன்.
- இவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது,
8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, ஏலே, ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மணிகண்டன். சமீபத்தில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தார்.

இந்நிலையில் மணிகண்டன் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் விஜய் சேதுபதி கிளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்தார்.
- ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் முன்னோட்ட வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

'ஜவான்' திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜவான் படத்தில் விஜய் சேதுபதியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான ஹேஷ் டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’.
- இப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

ஜவான் போஸ்டர்
இந்நிலையில், 'ஜவான்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் சேதுபதியின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், 'மரணத்தின் வியாபாரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வித்தியாசமான லுக்கில் விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- நடிகர் விஜய் சேதுபதி பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
- இவர் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பிற்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது மெரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதனை அந்தாதூன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என பேசப்பட்டது. பிறகு அதனை மறுத்து தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியது. மேலும் இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.

மெரி கிறிஸ்துமஸ் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். பல நாட்களுக்கு பின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.