search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi"

    • தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது.
    • கூட்டத்தில் கோடை கால தண்ணீர் தேவையை முன்னிறுத்தி தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 29 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது. இந்நிலையில் வரும் மே 21 ஆம் தேதி 30 வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேறக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கோடை கால தண்ணீர் தேவையை முன்னிறுத்தி தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    முன்னதாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நடந்த காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் கூட்டத்தில் மே மாதத்தில் தமிழகத்துக்கு 2.5 தி.எம்.சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில், மே 16 ஆம் தேதி காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைநகர் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள பல பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து புகாரளித்த சில வாரங்களுக்குப் பிறகு, டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலம் வந்தன. டெல்லியில் உள்ள சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஜி.டி.பி. மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்தேவார் மருத்துவமனை, தீப்சந்தூர் மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவத்தால் டெல்லி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைகள், விமான நிலையம், டெல்லி வடக்கு ரெயில்வேயின் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அலுவலகம் ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேர் மீது கோத்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஏற்கெனவே நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகாரில் 13 பேர், ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    குஜராத் மாநிலம் பன்ச் மகால் மாவட்டம் கோத்ராவில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது

    நீட் தேர்வு முடிந்த பிறகு 26 மாணவர்களின் தேர்வுத்தாள்களை பதில் எழுதி அனுப்புவதாகக்கூறி ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் ரூ.10 லட்சம் பேரம் பேசி பெற்றதாக தேர்வு மைய துணை கண்காணிப்பாளர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேர் மீது கோத்ரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பீகாரில் 13 பேர், ராஜஸ்தானில் 4 பேர், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    • தேர்தல் முடிவை உலக நாடுகளே எதிர்பார்த்து காத்துள்ளன.
    • சூதாட்ட பண பரிமாற்றம் நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல்.கிரிக்கெட் சூதாட்டம் ஒரு புறம் களை கட்டி இருந்தாலும் மறுபுறம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பது தொடர்பான சூதாட்டமும் தற்போது இணையதளத்தை கலக்கி வருகின்றன.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் 3- வது முறையாக பாரதீயஜனதா கட்சி ஆட்சி அமைக்குமா? அல்லது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுமா? என்ற பரபரப்பு எகிறி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடிவை இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளே எதிர்பார்த்து காத்துள்ளன.

    பாராளுமன்ற தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவுகள் தொடர்ச்சியாக நடந்து வரும் சூழ்நிலையில் இணையதளத்தில் சூதாட்டமும் களை கட்டி உள்ளது. இதற்காக தனி செயலிகள் மற்றும் இணையதளங்கள் முளைத்து உள்ளது. பெரும்பாலானவை இந்தியாவை தாண்டி மற்ற நாடுகளில் இருந்து இந்த இணையதளங்கள் இயங்கி வருகின்றன.

    இதில் 2024 பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும், ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் கிடைக்கும், வேட்பாளர்கள் எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்பது போன்ற சூதாட்டம் நடந்து வருகிறது.

    இதைத்தவிர தொகுதி வாரியாகவும் சூதாட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறும், எந்த வேட்பாளர்கள் வெல்வார்கள் என இப்படி பல்வேறு வகைகளில் சூதாட்டம் நடக்கிறது. இந்த சூதாட்டம் பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    குறைந்தது 100 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை போட்டி போட்டுக்கொண்டு பலர் பணத்தை கட்டி வருகின்றனர். யு.பி.ஐ மூலமாகவும், வங்கி கணக்குகள் மூலமாகவும் இந்த சூதாட்ட பண பரிமாற்றம் நடந்து வருகிறது. வரும் நாட்களில் இந்த சூதாட்டம் மேலும் சூடு பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போதும் இது போன்ற இணையதள சூதாட்டங்கள் நடந்தது. ஆனால் அதை விட தற்போது அதிகளவில் இந்த சூதாட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பசுமையான மற்றும் குப்பைகள் நிறைந்த புது டெல்லிக்கு உங்களை வரவேற்கிறேன்.
    • இங்கே எங்களின் டென்மார்க் தூதரகம் உள்ளது, அங்கே கிரேக்க தூதரகம் உள்ளது.

    இந்தியாவுக்கான டென்மார்க்கின் தூதரக அதிகாரி ஃப்ரெடி ஸ்வேன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில், 'பசுமையான மற்றும் குப்பைகள் நிறைந்த புது டெல்லிக்கு உங்களை வரவேற்கிறேன்'என்று தூதரக கட்டிடத்திற்கு வெளியே உள்ள குப்பைக் கிடங்கை அவர் காட்டுகிறார்.

    இங்கே எங்களின் டென்மார்க் தூதரகம் உள்ளது, அங்கே கிரேக்க தூதரகம் உள்ளது. இது ஒரு சர்வீஸ் ரோடாக இருக்க வேண்டும், ஆனால் அது குப்பைகளால் நிரம்பியுள்ளது. இது குறித்து யாராவது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

    தூதரக கட்டிடத்திற்கு வெளியே குப்பைக் கிடங்கு உள்ளதை காட்டிய அவர் யாராவது இதைக் கேட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

    அந்த வீடியோவில், டெல்லி முதல்வர் அலுவலகம் மற்றும் டெல்லி கவர்னர் ஆகியோரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்குகளை அவர் டேக் செய்துள்ளார்.

    • சிம்பு ஒரு சண்டை காட்சியில் கார் ஓட்டிக் கொண்டு துப்பாக்கியால் சுடுவது போன்று அமைந்துள்ளது
    • டெல்லியில் படப்பிடிப்பில், கமல், சிம்பு தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன

    நடிகர் கமல்ஹாசன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம் 'தக் லைப்'. இந்த படம் 'ஆக்ஷன்' படம் ஆகும்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .




    இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்கிறார்.

    தக்லைப்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், 2-ம் கட்ட படப்பிடிப்பு செர்பியாவிலும் நடந்தது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், திரிஷா பங்கேற்றனர்.இப்படத்தில் துல்கர் சல்மான் விலகியதால் அவருக்கு பதிலாக சிம்பு இணைந்ததாக கூறப்பட்டது.




    இந்நிலையில் 'தக் லைப்' படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு தற்போது இணைய தளத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்தது.

    அதில் நடிகர் சிம்பு ஒரு சண்டை காட்சியில் வேகமாக ஒரு கார் ஓட்டிக் கொண்டு துப்பாக்கியால் எதிரிகள் மீது சுடுவது போன்று அமைந்துள்ளது. இது தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.




    மேலும், டெல்லியில் தற்போது தொடங்கிய படப்பிடிப்பில், நடிகர் கமல், சிம்பு தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தில் கமலுக்கு மகனாக சிம்பு நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் 'தக்லைப்' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடந்து வருகிறது
    • இதில் கமல், சிம்பு, திரிஷா, கவுதம் கார்த்திக், நாசர், அபிராமி நடித்து வருகின்றனர்.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம் 'தக் லைப்'.இந்த படம் 'ஆக்ஷன்' படம் ஆகும்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .




    இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.

    கமல்ஹாசன் தேர்தல் பிரசசாரங்களில் ஈடுபட்டிருந்த போது, சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை மணிரத்னம்.படமாக்கி வந்தார்.




    இந்நிலையில் 'தக்லைப்' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடந்து வருகிறது. நடிகர் கமல் டெல்லிக்கு சென்று இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற சங்கத் மோட்சம் அனுமான் கோவிலில் கடந்த சில தினங்களாக 'தக்லைப்' படப்பிடிப்பு நடந்து வருகிறது.



    இந்த கோவிலில் நடைபெறும் படப்பிடிப்பில் கமல், சிம்பு, திரிஷா, கவுதம் கார்த்திக், நாசர், அபிராமி உள்பட பலரும் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் சிம்பு பற்றிய அறிமுக வீடியோவை படக்குழு நாளை  வெளியிட உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு டெல்லியில் உள்ள மதர் மேரி பள்ளி, துவாரகாவில் உள்ள டிபிஎஸ் பள்ளி மற்றும் சன்ஸ் கிரிதி ஆகிய பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூல் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து நொய்டாவில் உள்ள பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    டெல்லியில் உள்ள பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    ஒரே மின்னஞ்சல் மூலம் ஒரே விதமான முறையில் பல்வேறு பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    • டெல்லி தலித் மேயர் பதவியை பாஜக அனுமதிக்கவில்லை என கண்டித்து ஆம் ஆத்மி மாநகராட்சியில் போராட்டம் நடத்தியது
    • மேயர் தேர்தல் ரத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர ஆலோசித்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.

    டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். 10 எம்.பி.க்கள் (7 லோக்சபா மற்றும் 3ராஜ்யசபா) மற்றும் 14 எம்.எல்.ஏ.க்கள் (டெல்லி சட்டசபையில் உள்ள மொத்தமுள்ள 70 எம்.எல்.ஏ.க்களில் ஐந்தில் ஒரு பங்கு) மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

    இதன் மூலம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 274 ஆக உள்ளது. ஒரு வேட்பாளருக்கு மேயர் பதவிக்கு 138 வாக்குகள் தேவை .இதில் ஆம் ஆத்மி கட்சிக்கு 134 கவுன்சிலர்களும் பாஜக வுக்கு 105 கவுன்சிலர்கள் உள்ளனர்.



    ஆம் ஆத்மிக்கு 134 கவுன்சிலர்கள், 13 எம்எல்ஏக்கள் மற்றும் 3 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர் . இதில் 3 சுயேச்சை கவுன்சிலர்களில் ஒருவரின் ஆதரவு ஆம் ஆத்மிக்கு உள்ளது. இதனால் ஆம் ஆத்மிக்கு ஆதரவு 151 ஆக உயர்ந்தது.

    மேலும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளருக்கு 9 காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆதரவும் கிடைக்க இருந்தது.ஆம் ஆத்மிக்கு மொத்த ஆதரவு 160 ஆக உயரும் சூழ்நிலையால் மேயர் தேர்தலில் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது.




    டெல்லி மேயர்,துணை மேயர் பதவிக்கான தேர்தல் இன்று 26- ந் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில் மேயர் தேர்தலை கவர்னர் அலுவலகம் நேற்று ரத்து செய்தது. டெல்லி தலித் மேயர் பதவியை பாஜக அனுமதிக்கவில்லை என கண்டித்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

    ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் "தலித் விரோதி பாஜக" என்ற போஸ்டர்களை ஏந்தி கோஷமிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மேயர் தேர்தல் ரத்து தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாக ஆம் ஆத்மி தெரிவித்தது.

    • ராமர் படம் இருக்கும் பேப்பர் தட்டுகளில் பிரியாணி வழங்க கூடாது என்று பஜ்ரங் தள் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
    • மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே இதைச் செய்தார்களா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்

    டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ராமரின் படம் இருக்கும் பேப்பர் தட்டில், பிரியாணி பரிமாறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

    இதை அறிந்த உள்ளூர் மக்களும் பஜ்ரங் தள் உறுப்பினர்களும் கடையைச் சுற்றி, கும்பலாக திரண்டு ராமர் படம் இருக்கும் பேப்பர் தட்டுகளில் பிரியாணி வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்தனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உணவக உரிமையாளரை கைது செய்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா அல்லது மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே இதைச் செய்தார்களா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
    • காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து நிஜாமுதீன் சம்பர் க்ராந்தி விரைவு ரெயிலில் நேற்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    இவர்கள் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் கர்நாடக அரசு மாதா மாதம் தண்ணீர் திறக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.

    • டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது.
    • 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி ஒரு தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது.

    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 26-வது லீக் சுற்று ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது.

    நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (ராஜஸ்தானுக்கு எதிராக) என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறித்த லக்னோ அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையில் உள்ளது.

    டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது. லக்னோ ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழற்பந்து வீச்சின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×