search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினாத்தாள் கசிவு"

    • எழுத்துத் தேர்வில் சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர்.
    • தேர்வு எழுதுவதற்காக ரெயில்வே ஸ்டேஷனில் கூட்டம் குவிந்திருந்தது.

    உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 17ம் தேதி மற்றும் 18ம் தேதி நடைபெற்ற காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    60 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர்.

    தேர்வு எழுதுவதற்காக ரெயில்வே ஸ்டேஷனில் கூட்டம் குவிந்திருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்து சமூக வலைதளங்களில் பரவியதாக புகார் வெளியான நிலையில் உ.பி அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

    • குஜராத்தில் அரசுப்பணி தேர்வுக்கான வினாத்தாள் நேற்று கசிந்தது.
    • வினாத்தாள் கசிந்ததால் அரசுப்பணிக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநில பஞ்சாயத்து தேர்வு வாரியம் சார்பில் 1,181 கிளார்க் பணியிடங்களுக்கு நேற்று எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஒன்பதரை லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.

    ஆனால் இந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது நேற்று அதிகாலையில் தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் வினாத்தாள் நகலுடன் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தேர்வை மாநில அரசு ரத்து செய்தது. இந்த தேர்வு அடுத்த 100 நாட்களுக்குள் நடத்தப்படும் என பஞ்சாயத்து துறை மேம்பாட்டு கமிஷனர் சந்தீப் குமார் தெரிவித்தார். தொலைதூரங்களில் இருந்து தேர்வுக்காக மையங்களுக்கு வந்திருந்த தேர்வர்கள் பல இடங்களில் அதிகாரிகளுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

    வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் வதோதராவில் இருந்து 15 பேரை மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    ×