என் மலர்
நீங்கள் தேடியது "Impersonation"
- நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது.
- சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார்.
நாகப்பட்டினம்:
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நடராஜன்-தமயந்தி பள்ளியில் நேற்று காலை ஆங்கில பாடத்திற்கான தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கியவுடன் தேர்வு அறை கண்காணிப்பாளர் வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வு எழுதுபவர்களிடம் கொடுத்துவிட்டு கையொப்பம் பெற்றார்.
அப்போது அங்கு தனித்தேர்வராக தேர்வு எழுதிய ஒரு பெண் முககவசம் அணிந்து இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணிடம் முககவசத்தை அகற்றும்படி கூறினார். பின்னர் நுழைவு சீட்டை சோதனை செய்து பார்த்தார்.
அப்போது நுழைவு சீட்டில் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு அறை கண்காணிப்பாளர் வைத்திருந்த வருகை பதிவு குறிப்பேட்டில் வேறு ஒரு நபரின் புகைப்படம் இருந்தது.
இதனால் மேலும் சந்தேகம் அடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர், அந்த பெண்ணை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றார். இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(தனித்தேர்வு) முத்துச்சாமி, தேர்வு கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள், தேர்வு மையத்தில் பாதுகாப்பிற்கு இருந்த வெளிப்பாளையம் போலீசார் விரைந்து வந்தனர்.
தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை வெளிப்பாளையத்தைச் சேர்ந்த செல்வாம்பிகை(வயது 25) என்பது தெரிய வந்தது.
திருமணமான அவர் தனது தாய் சுகந்தி என்பவருக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்தது தெரிய வந்தது. இதேபோல அவர் கடந்த 28-ந் தேதி நடந்த தமிழ் பாடதேர்வை முககவசம் அணிந்து எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தாய் சுகந்தி 10-ம் வகுப்பு தனித்தேர்விற்காக விண்ணப்பம் செய்துள்ளபோது, மகள் எதற்காக தேர்வு எழுத வந்தார்? என அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர். தாய்க்காக ஆள்மாறாட்டம் செய்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய பெண் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தேர்வில் மாணவருக்கு பதிலாக மற்றொருவரை தேர்வு எழுதச்செய்யும் ஆள்மாறாட்டத்துக்கு தனி ரேட்டை சால்வர் கேங் நிர்ணயித்துள்ளது.
- வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசன் கிரேஸி மோகனை படத்தில் மார்கபந்து மிரட்டி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதவைக்கும் காட்சியாக அது அமைத்திருக்கும்.
நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் இளநிலைத் தேர்வில் பலவேறு குளறுபடிகளும் முறைகேடுகளும் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் பூதகரமாகத் தொடங்கியுள்ளது.
பீகார், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு நடந்து இருந்தது. ஒரு வினாத்தாள் ரூ.30 லட்சம் வரையில் விற்னையானது. நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். அரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பெற்றனர். இந்த சம்பவங்களால் நீட் தேர்வில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

இந்த முறைகேடுகளில் முக்கிய மூளையாக செயல்பட்ட சால்வர் கேங்கை சேர்ந்த நபர்கள் கைது செயயப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்வில் மாணவருக்கு பதிலாக மற்றொருவரை தேர்வு எழுதச்செய்யும் ஆள்மாறாட்டத்துக்கு தனி ரேட்டை சால்வர் கேங் 'Solver gang' நிர்ணயித்துள்ளது. முன்னா பாய் சர்வீஸ் என்ற பெயரில் இந்த பேக்கேஜ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹிந்தியில் கடந்த 2003 ஆம் ஆண்டு சஞ்சய் தத் நடப்பில் வெளியாகி ஹிட் ஆன படம் 'முன்னா பாய் எம்பிபிஎஸ்'. இதில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வில் தனக்கு பதிலாக வேறொருவரை மிரட்டி அந்த பரீட்சையில் ரவுடியான முன்னா பாய் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிக்குள் நுழைவார். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசன் கிரேஸி மோகனை படத்தில் மார்கபந்துவை மிரட்டி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதவைக்கும் காட்சியாக அது அமைந்திருக்கும்.


இதை பிரதி செய்யும் வகையில், தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யும் முன்னா பாய் சர்வீஸை சால்வர் கேங் அறிமுகப்படுத்தி முறைகேடு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் வட மாநிலங்களில் இயங்கி வந்த சால்வர் கேங்கின் முக்கிய மூளை ரவி ஆத்ரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ இன்று வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

- தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
- ஆசிரியர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
பள்ளிக்கூடம் கல்வியை மட்டுமல்ல... நல் ஒழுக்கம், பண்பாடு, நீதிபோதனை போன்றவற்றை கற்றுத்தரும் இடம். அங்கு மாணவர்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உருவாக்கும் போற்றுதலுக்குரிய பணியை செய்து வருபவர்கள் ஆசிரியர்கள்.
எல்லோரும் அவ்வாறு ஆசிரியப்பணியை அறப்பணியாக செய்கிறார்களா என்றால் பதில் கேள்விக்குறிதான்.
எங்காவது ஒருவர் தங்களது பணிக்கு இழுக்கை தேடிக்கொண்டு விடுகிறார்கள். அப்படியொரு ஆசிரியர் செய்த காரியம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகள் முறையாக வகுப்புகளுக்கு வரவேண்டும், சிறப்பாக படிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. அதில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், காலை உணவுத்திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது? அவர்களுக்கான உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் எந்த அளவில் உள்ளது? மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கீழ் உள்ள கல்வி அலுவலர்கள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் முறையாக ஆய்வு செய்யாத வட்டாரக் கல்வி அலுவலர்களின் பட்டியலையும் கல்வித் துறை வெளிப்படையாக வெளியிட்டது.
இந்த நிலையில் ஆய்வின்போது, கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள் மீது கடந்த சில மாதங்களாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, கற்பித்தல் பணிக்கு செல்லாமல் நீண்டநாட்கள் விடுப்பில் இருப்பது, பள்ளிக்கு வந்தது போல் கணக்கு காண்பிப்பது என்பது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர்களை கல்வித்துறை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறது.
அந்த வரிசையில் தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட காரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கே.பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, ஆசிரியர் பாலாஜி மீது தமிழ்நாடு அரசுப் பணி (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) 17-வது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் பல அரசு பள்ளிகளில் இதுபோன்ற நிலைதான் நீடிக்கிறது எனவும், கல்வித்துறை சார்பில் ஆய்வு, கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பாரபட்சம் காட்டக் கூடாது எனவும் கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கின்றனர்.






