என் மலர்
நீங்கள் தேடியது "NeetExam"
- 140 மாணவர்களுக்கும் தனியார் கல்லூரிகளில் NRI ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது
- இந்த தகவல் உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் நம்பகத் தன்மையை இது கேள்வி எழுப்புகிறது
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு அறிவித்தது.
இதையடுத்து நீட் தேர்வு எழுதினாலே மருத்துவ மேற்படிப்பில் சேரமுடியும் என்ற நிலை உருவானது.
இந்நிலையில், EWS (ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம்) பிரிவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்த 140 மாணவர்கள், ஆண்டுக்கு ரூ.25 லட்சம் - ரூ.1 கோடி வரை கட்டணம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த 140 மாணவர்களுக்கும் தனியார் கல்லூரிகளில் NRI ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது. இதற்கு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் - ரூ.1 கோடி வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த தகவல் உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் நம்பகத் தன்மையை இது கேள்வி எழுப்புகிறது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கும் குறைவான வருவாய் கொண்ட உயர்சாதி ஏழைகளே, EWS பிரிவில் வருவார்கள் என மத்திய அரசின் சட்டம் கூறும் அவர்களால் எப்படி வருடத்திற்கு 1 கோடி கட்டணம் செலுத்தமுடியும் என்று நெட்டிசன்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- நீட் விலக்கு மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது
- குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநர் மீண்டும் அனுப்ப வேண்டும்.
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தராமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவர் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் மார்ச் 3ம் தேதி நிராகரித்தார்.
இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில், "இளநிலை நீட் விலக்கு மசோதாவை நிராகரித்து திருப்பி அனுப்பியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதாவை ஆளுநர் மீண்டும் அனுப்ப வேண்டும். அரசியல் சாசனப் பிரிவு 254 கீழ் மசோதாவை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நீட் தேர்வில் -40, -25 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.
- ஜீரோ பர்சன்டைல் முறையால் நீட் தேர்வின் நோக்கமே சீரழிந்துவிட்டது.
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு அறிவித்தது.
நீட் தேர்வில் தேர்ச்சிக்கு 50 பர்சன்டைல் பெற்றாக வேண்டும் என இருந்ததை மாற்றி 0 பர்சன்டைல் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. ஜீரோ பெர்சண்டைல் என்பது ஜீரோ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண். அதாவது கடைசி மதிப்பெண் நெகடிவில் இருந்தாலும் அதுதான் ஜீரோ பெர்சண்டைல். எனவே முட்டை மதிப்பெண்ணுக்கும் கீழ் நெகடிவ் மதிப்பெண் எடுத்தாலும் சீட் கிடைக்கும்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் 2025 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 0 மற்றும் மைனஸ் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வில் -40, -25 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி நீட் முதுநிலை தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்த 27 பேருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
தரமான மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் ஜீரோ பர்சன்டைல் முறையால் நீட் தேர்வின் நோக்கமே சீரழிந்துவிட்டதாக கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.
- வரும் 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை:
மருத்துவப் படிப்பிற்காக நீட் நுழைவுத் தேர்வு (இளநிலை) 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதையடுத்து, தங்களுக்கு மறு தேர்வு தேவை என ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், கவனச்சிதறலால் முழு திறமையுடன் தேர்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தேர்வு தேவை எனவும் மாணவர்கள் தங்களது மனுவில் தெரிவித்து இருந்தனர். இதனால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் மறுதேர்வு நடத்தமுடியாது என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, வரும் 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
- NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN இணையதளங்களின் வாயிலாக புகார்களை அளிக்கலாம்
- ஆதாரத்துடன் புகார்களை பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற மோசடி தொடர்பான புகார்களை தெரிவிக்க தேசிய தேர்வு முகமை அமைப்பு புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது.
NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN இணையதளங்களின் வாயிலாக புகார்களை அளிக்கலாம் என்றும் ஆதாரத்துடன் புகார்களை பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மேலும், ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவோரை நம்பி ஏமாற வேண்டாம் என தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.
- அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.
- நீட் விவகாரத்தில் திமுக அரைக் கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுக மாணவர் அணி அஞ்சலி செலுத்தினர்.
அதன்படி, சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் சொல்லி திமுக ஆட்சிக்கு வந்ததாக குறிப்பிட்டு அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீட் விவகாரத்தில் திமுக அரைக் கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
- மொத்தம் 2988 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்:
நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு (நீட்) நாளை நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
பார்வதீஸ் கல்லூரியில் 936, என்.பி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் 840, என்.பி.ஆர். கலைக்கல்லூரியில் 696, அனுகிரகா பள்ளியில் 168, பிரசித்தி வித்யாலயா பள்ளியில் 348 பேர் என மொத்தம் 2988 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தேசிய தேர்வு முகமையால் அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து அதனை தங்கள் தேர்வு எழுதும் மையத்துக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி இல்லாத பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு வரக்கூடாது எனவும், தேர்வு நடப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகவே வளாகத்திற்குள் வந்து விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 20-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
- திருப்பூர் குமரன் சிலை முன் நடக்கும் போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர்:
நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய பா.ஜனதா அரசையும், அதற்கு துணை போகும் தமிழக கவர்னரை கண்டித்தும் தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 20-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்தநிலையில் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். வருகிற 20-ந் தேதி திருப்பூர் குமரன் சிலை முன் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், மருத்துவர் அணி அமைப்பாளர் கோபு, இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி, மாவட்ட, மாநகர, தொகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
- அரசு பள்ளிகளில் பயின்ற 84 பேர் நீட் தேர்வு எழுதினர்.
- 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தது.
கோவை
கோவையில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களில் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவையில் கடந்த கல்வி ஆண்டு அரசு பள்ளிகளில் பயின்ற 84 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டில் கலந்தாய்வில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கோவையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 6 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்கவும், 3 பேருக்கு பி.டி.எஸ். ( பல் மருத்துவம்) படிக்கவும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தது.
நடப்பாண்டு கலந்தாய்வு முடியும்போது தான், அரசு பள்ளி மாணவர்களில் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்துறை அமைச்சகத்தின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
- திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தற்போது இந்த ஓமியோபதி கல்லூரியில் 300 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதால் கல்லூரி தாழ்வான பகுதியாகி விட்டது.
இதனால் மழைக்காலங்களில் மாதக்கணக்கில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கல்லூரி கட்டிடங்கள், வகுப்பறைகள், ஆய்வகம் ஆகியவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக, கலெக்டர் தலைமையில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு 10 தினங்களுக்குள் இந்த இடத்தில் ஆய்வு நடத்த உள்ளனர்.
ஆய்வறிக்கையின்படி மழை காலங்களில் தண்ணீர் தேங்கி கட்டிடத்திற்கு சேதம் ஏற்படும் என தெரிய வந்தால், புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்படும். இதற்கு கல்லூரி நிர்வாகம் மாணவப் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்பினர் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் பெற்று இந்த முடிவு செய்யப்படும்.
அவர்கள் அளிக்கும் அறிக்கையின் படி ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட வளாகம் கட்டப்படும். அந்தப் பணிகள் நிறைவடைய சுமார் 2 ஆண்டுகள் ஆகும்.
அதுவரை கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சில் ஆணையாளரின் அனுமதி பெறும்படி வலியுறுத்தியுள்ளேன்.
நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகளை கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர்வது குறித்து உதவ வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
- அனைத்து மாணவ- மாணவிகளும் முக கவசம் அணிந்தபடி தேர்வு எழுதினர்.மாணவிகளுடன் அவர்களது பெற்றோர் ஏராளமானோர் வந்திருந்தனர்.
கோவை :
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது.
கோவை மாவட்டத்தில் சவுரிபாளையம் கேந்திரிய வித்யாலயா, அன்னூர் நவபாரத் நேஷனல் பள்ளி, சூலூர் ஆர்.வி.எஸ். கலைக்கல்லூரி, ஈச்சனாரி கற்பகம் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம் சரஸ்வதி வித்யா மந்திர், குரும்ப பாளையம் ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கண்ணம் பாளையம் கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய 7 மையங்களில் தேர்வு நடக்கிறது. இதில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 229 மாணவர்கள் உள்பட மொத்தம் 5,400 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.
தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் முழுக்கை ஆடைகள் அணியக்கூடாது, கலாசார, பாரம்பரிய உடை அணிந்தால், சோதனை செய்ய ஏதுவாக இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு மையத்துக்குள் வர வேண்டும். செருப்புகள் குறைந்த குதிகால் கொண்ட செருப்புகள் அனுமதிக்க ப்படும். ஷூக்கள் அணிய அனுமதியில்லை.
ஆடைகள் தொடர்பான தேசிய தேர்வு முகமையின் அறிவுரைகளை தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தவிர அனைத்து வகை ஆபரணங்கள், கைக்கடிகாரம், காப்பு, புகைப்பட கருவி, பெல்ட், தொப்பி, மொபைல் போன், புளூடூத், ஹெட்போன், மைக்ரோ போன் போன்றவற்றை தேர்வு மையத்துக்குள் எடுத்து செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் காரணமாக மாணவ- மாணவிகள் தேர்வு மையங்களுக்கு முன் கூட்டியே வந்து சேர்ந்தனர். அவர்களை தேர்வு மைய அதிகாரிகள் பலத்த சோதனைக்கு பிறகு மையத்துக்குள் அனுமதித்தனர். தற்போது கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள தால் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி அனைத்து மாணவ- மாணவிகளும் முக கவசம் அணிந்தபடி தேர்வு எழுதினர்.மாணவிகளுடன் அவர்களது பெற்றோர் ஏராளமா னோர் வந்திருந்தனர்.
அவர்கள் தேர்வு மையத்துக்கு வெளியே காத்து இருந்தனர். காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க தேர்வு மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற 17ந் தேதி நடக்கிறது.
- திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளரின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
திருப்பூர் :
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.இத்தேர்வினை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.,) ஆண்டுதோறும் நடத்துகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற 17ந் தேதி நடக்கிறது.தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வெளியிடப்படும்.
கூடுதல் தகவல்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.ஏதேனும் சந்தேகம் இருப்பின் திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளரின் 73734 48484 மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.திருப்பூர் நகரப்புற நீட் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கே.எம்.சி., பப்ளிக் பள்ளி முதல்வருமான நாகமணி கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டம் முழுவதும் நீட் தேர்வினை ஒருங்கிணைத்து நடத்தி முடிக்கும் பொறுப்பு, பெருமாநல்லூர் கே.எம்.சி., பப்ளிக் பள்ளிக்கு என்.டி.ஏ., வழங்கியுள்ளது. இந்த முறை ஈரோடு மாவட்ட மையங்களையும் ஒருங்கிணைத்து நடத்த உள்ளோம்.
திருப்பூரில் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லூரி, கூலிபாளையம் வித்யாசாகர் பப்ளிக் பள்ளியிலும், உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி சூரி என்ஜினீயரிங் கல்லூரி விஜயமங்கலம், கோபி கலை அறிவியல் கல்லூரி கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் மையம் அமைய உள்ளது.என்.டி.ஏ., அறிவுறுத்தலின் கீழ் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.






