search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட்தேர்வு மையங்கள் குறித்த விபரங்களை இணையதளம்  மூலம் அறிந்து கொள்ளலாம்
    X

    கோப்புபடம்.

    நீட்தேர்வு மையங்கள் குறித்த விபரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்

    • நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற 17ந் தேதி நடக்கிறது.
    • திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளரின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

    திருப்பூர் :

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.இத்தேர்வினை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.,) ஆண்டுதோறும் நடத்துகிறது. நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற 17ந் தேதி நடக்கிறது.தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வெளியிடப்படும்.

    கூடுதல் தகவல்களை, www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.ஏதேனும் சந்தேகம் இருப்பின் திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளரின் 73734 48484 மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.திருப்பூர் நகரப்புற நீட் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கே.எம்.சி., பப்ளிக் பள்ளி முதல்வருமான நாகமணி கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் நீட் தேர்வினை ஒருங்கிணைத்து நடத்தி முடிக்கும் பொறுப்பு, பெருமாநல்லூர் கே.எம்.சி., பப்ளிக் பள்ளிக்கு என்.டி.ஏ., வழங்கியுள்ளது. இந்த முறை ஈரோடு மாவட்ட மையங்களையும் ஒருங்கிணைத்து நடத்த உள்ளோம்.

    திருப்பூரில் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லூரி, கூலிபாளையம் வித்யாசாகர் பப்ளிக் பள்ளியிலும், உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி சூரி என்ஜினீயரிங் கல்லூரி விஜயமங்கலம், கோபி கலை அறிவியல் கல்லூரி கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் மையம் அமைய உள்ளது.என்.டி.ஏ., அறிவுறுத்தலின் கீழ் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×