என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவர்களுக்கு அ.தி.மு.க. அஞ்சலி
    X

    நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவர்களுக்கு அ.தி.மு.க. அஞ்சலி

    • அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.
    • நீட் விவகாரத்தில் திமுக அரைக் கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அதிமுக மாணவர் அணி அஞ்சலி செலுத்தினர்.

    அதன்படி, சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேலும், நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் சொல்லி திமுக ஆட்சிக்கு வந்ததாக குறிப்பிட்டு அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

    சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீட் விவகாரத்தில் திமுக அரைக் கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    Next Story
    ×