search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வு:    கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் 73 பேர் தேர்ச்சி
    X

    நீட் தேர்வு: கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் 73 பேர் தேர்ச்சி

    • அரசு பள்ளிகளில் பயின்ற 84 பேர் நீட் தேர்வு எழுதினர்.
    • 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தது.

    கோவை

    கோவையில் இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களில் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதுதொடர்பாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் கடந்த கல்வி ஆண்டு அரசு பள்ளிகளில் பயின்ற 84 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் 73 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த கல்வி ஆண்டில் கலந்தாய்வில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற கோவையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களில் 6 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்கவும், 3 பேருக்கு பி.டி.எஸ். ( பல் மருத்துவம்) படிக்கவும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்தது.

    நடப்பாண்டு கலந்தாய்வு முடியும்போது தான், அரசு பள்ளி மாணவர்களில் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×