என் மலர்
நீங்கள் தேடியது "Neet PG"
- SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு, இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் சுமார் 65,000 முதல் 70,000 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன.
நீட் முதுகலை தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கு தொடர்பாக மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வு இன்று இந்த வழக்கை விசாரித்தது. அப்போது தேர்வே எழுதாதவர்கள் கூட இந்த கட்-ஆஃப் முறையால் சிறந்த நிலையில் இருக்கும் சூழல் உருவாவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து பூஜ்ஜியம் மற்றும் மைனஸ் 40 (-40) போன்ற மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களையும் மருத்துவ மேற்படிப்பிற்குத் தகுதியானவர்களாக அறிவிப்பது நோயாளி பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தரத்தை பாதிக்கும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் காலியாக உள்ள 18,000-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக கட்-ஆஃப் குறைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் பொதுப்பிரிவு மற்றும் EWS (பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்) மாணவர்களுக்கான தகுதித் தேர்ச்சி சதவீதம் 50-லிருந்து 7-ஆகவும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 45-லிருந்து 5-ஆகவும், SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு. இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதில் எதிர்மறை மதிப்பெண் முறை உள்ளதால், அவர்களுக்கான தகுதி மதிப்பெண் 800-க்கு -40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்வை எழுதாதவர்கள் கூட இதைவிட சிறந்த நிலையில் இருப்பார்கள் என்று குறிப்பிட்டு, -40 மதிப்பெண் தகுதியை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. மறுபுறம் இந்த விவகாரம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும், தற்போதைய நீட் பிஜி 2025-26 கவுன்சிலிங் செயல்முறைக்கு உச்சநீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை.
- 9,000 முதல் 10,000 வரையிலான மருத்துவ மேற்படிப்பு இடங்கள் வீணாவதை நாம் அனுமதிக்க முடியாது
- SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு, இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவும் சூழலில், மருத்துவ மேற்படிப்புக்கான காலியிடங்கள் ஏராளமாக இருப்பதால் NEET-PG 2025-க்கான தகுதி மதிப்பெண்களை (Cut-off) மத்திய அரசு செவ்வாய்க்கிழமை குறைத்துள்ளது.
"மாற்றியமைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி, பொதுப்பிரிவு மற்றும் EWS (பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்) மாணவர்களுக்கான தகுதித் தேர்ச்சி சதவீதம் 50-லிருந்து 7-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 45-லிருந்து 5-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு, இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்மறை மதிப்பெண் முறை உள்ளதால், அவர்களுக்கான தகுதி மதிப்பெண் 800-க்கு -40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வு மற்றும் சேர்க்கைக்கான தகுதியை விரிவுபடுத்துவதற்காக, மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வுகள் வாரியம் அனைத்துப் பிரிவினருக்குமான தகுதித் தேர்ச்சி சதவீதத்தை மாற்றியமைத்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு சுமார் 2.4 லட்சம் மாணவர்கள் NEET-PG தேர்வெழுதிய போதிலும், தகுதி மதிப்பெண் அதிகமாக இருந்த காரணத்தால் ஆயிரக்கணக்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சுமார் 65,000 முதல் 70,000 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன. இதில் ஏழில் ஒரு பங்கு இடங்கள் காலியாக விடப்பட்டால், அது போதனா மருத்துவமனைகளை (மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து செயல்படும் மருத்துவமனைகள்) பலவீனப்படுத்தும் என்றும், குறிப்பாகப் பயிற்சி மருத்துவர்களை பெரிதும் நம்பியுள்ள அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவையைப் பாதிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெருமளவிலான இடங்கள் காலியாவதைத் தவிர்க்க, தகுதி மதிப்பெண்களை முறையாக மாற்றியமைக்கக் கோரி இந்திய மருத்துவச் சங்கம் கடந்த ஜனவரி 12-ம் தேதி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியிருந்தது. அதனையொட்டி தொடர்ந்தே இந்தத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்த தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரிய அதிகாரிகள், "இந்த நுழைவுத் தேர்வு ஒரு தரவரிசைப் பட்டியலை உருவாக்குவதற்காகத்தானே தவிர, ஏற்கனவே MBBS மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களின் தகுதியை மறுமதிப்பீடு செய்வதற்காக அல்ல" என்று கூறினர்.
மேலும், "9,000 முதல் 10,000 வரையிலான மருத்துவ மேற்படிப்பு இடங்கள் வீணாவதை நாம் அனுமதிக்க முடியாது" என்றும் தெரிவித்தார். தகுதிச் சதவீதத்தை இவ்வளவு அதிகமாகக் குறைப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்பதை ஒப்புக்கொண்ட அதிகாரி, அதே சமயம் மாணவர் சேர்க்கை சுழற்சி ஏற்கனவே தாமதமாகிவிட்டதைச் சுட்டிக்காட்டினார்.
"முன்பெல்லாம் தகுதி மதிப்பெண்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டன. ஆனால் இந்த முறை நாம் தாமதமாக இருக்கிறோம். இப்போது எங்களின் முக்கிய நோக்கம் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதும், நாட்டின் மருத்துவ வளங்கள் வீணாவதைத் தடுப்பதும் தான்" என்று அவர் தெரிவித்தார்.
"தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம்", தகுதி மதிப்பெண் மாற்றம் என்பது தேர்வு மதிப்பெண்களையோ அல்லது தரவரிசையையோ மாற்றாது என்றும், யார் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்கள் என்பதை மட்டுமே தீர்மானிக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கனவே தகுதி பெற்ற மருத்துவர்களை வரிசைப்படுத்தவே இந்த 'பெர்சென்டைல்' முறை பயன்படுத்தப்படுகிறது. அனைத்து மேற்படிப்பு இடங்களையும் நிரப்புவதற்கு போதுமான விண்ணப்பதாரர்கள் இருப்பதை உறுதி செய்யவே தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 140 மாணவர்களுக்கும் தனியார் கல்லூரிகளில் NRI ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது
- இந்த தகவல் உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் நம்பகத் தன்மையை இது கேள்வி எழுப்புகிறது
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு அறிவித்தது.
இதையடுத்து நீட் தேர்வு எழுதினாலே மருத்துவ மேற்படிப்பில் சேரமுடியும் என்ற நிலை உருவானது.
இந்நிலையில், EWS (ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம்) பிரிவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்த 140 மாணவர்கள், ஆண்டுக்கு ரூ.25 லட்சம் - ரூ.1 கோடி வரை கட்டணம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த 140 மாணவர்களுக்கும் தனியார் கல்லூரிகளில் NRI ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது. இதற்கு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் - ரூ.1 கோடி வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த தகவல் உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் நம்பகத் தன்மையை இது கேள்வி எழுப்புகிறது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கும் குறைவான வருவாய் கொண்ட உயர்சாதி ஏழைகளே, EWS பிரிவில் வருவார்கள் என மத்திய அரசின் சட்டம் கூறும் அவர்களால் எப்படி வருடத்திற்கு 1 கோடி கட்டணம் செலுத்தமுடியும் என்று நெட்டிசன்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- ஆகஸ்ட் 3ஆம் தேதி மருத்துவ முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற இருக்கிறது.
- தேர்வு நடைபெற இருக்கும் இடங்கள் குறித்த விவரம் இ-மெயில் மூலம் அனுப்பப்படும் என அறிவிப்பு.
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான NEET PG 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மருத்துவ அறிவியலில் தேசிய தேர்வு வாரியம் (NBEMS) முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தேர்வு எழுதுபவர்கள் தங்களுக்கு எந்த இடத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் இ-மெயில் மூலம் வருகிற 21ஆம் தேதி அனுப்பப்படும். விண்ணப்பத்தாரர்கள் தேர்வு நடைபெறும் இடத்தை மாற்றுவதற்கு ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூன் 17ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது.
ஹால் டிக்கெட் ஜூலை 31ஆம் தேதி வழங்கப்படும். அதில் தேர்வு எழுதக்கூடிய மையம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் தெரிந்து கொள்ளலாம்.
ஏதாவது சந்தேகம் இருந்தால் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை +91-7996165333 உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பாணை natboard.edu.in and nbe.edu.in ஆகிய இரண்டு இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு காலை 9 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவு செப்டம்பர் 3ஆம் தேதி வெளியிடப்படும்.
- நீட் தேர்வை இரண்டு ஷிப்ட் அடிப்படையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
- இரண்டு வினாத்தாள் ஒரே மாதிரியான சிரமம், எளிமையை கொண்டிருக்காது என்பதால் எதிர்த்து மனுத்தாக்கல்
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஜூன் 15ஆம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்பட இருக்கிறது. தேர்வை இரண்டு முறையாக (two shifts) அதாவது காலை மற்றும் மாலை என இரண்டு முறை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டு முறை நடத்தப்பட்டால் சிலருக்கு எளிதாகவும், சிலருக்கு கடினமானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஒரே நேரத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது நீட் தேர்வு ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எந்த இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரியான சிரமம் அல்லது எளிமையைக் கொண்டவை என்று ஒருபோதும் கூற முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
- உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
- தேசிய தேர்வு முகமையின் தலைவரை மத்திய அரசு மாற்றியது.
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வு இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. சமீபத்தில் இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியானது.
இதைத் தொடர்ந்து நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும், குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தை சேர்ந்த பலர் முழு மதிப்பெண் பெற்றார்கள் என்றும் சுமார் 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், நீட் முறைகேடு விவகாரம் சர்ச்சையான நிலையில், நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமையின் தலைவரை மத்திய அரசு மாற்றியது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதன் வரிசையில், இன்று நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நீட் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஏராளமான சர்ச்சைகள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அந்த வரிசையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தற்போது நீட் முதுநிலை தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இது நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் கல்வி அமைப்பு முழுமையாக சீரழிக்கப்பட்டதற்கு மற்றொரு சரியான எடுத்துக்காட்டு ஆகும்.
பா.ஜ.க. ஆட்சி காலத்தில் மாணவர்கள் படிக்க கட்டாயப்படுத்தப்படவில்லை, மாறாக தங்களின் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ள அரசுடன் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் மோடி, இந்த முறை வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை மாஃபியா விவகாரத்தில் எதையும் செய்ய முடியாமல் தவிக்கிறார்.
நரேந்திர மோடியின் தகுதியற்ற ஆட்சி மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. நாம் இந்த நாட்டின் எதிர்காலத்தை கட்டாயம் காப்பாற்றியே ஆகவேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.
- தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைப்பது என்பது முடியாத காரியம்.
- குறிப்பிட்ட சிலர் நீதிமன்றத்தை நாடியதால் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை சிக்கலில் தள்ள முடியாது.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் தேர்வை ஒத்திவைக்க மறுப்பு தெரிவித்ததுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தலைமை நீதபிதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "தற்போதைய சூழலில் தேர்வை ஒத்திவைப்பது என்பது முடியாத காரியம். குறிப்பிட்ட சிலர் நீதிமன்றத்தை நாடியதால் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை சிக்கலில் தள்ள முடியாது" எனத் தெரிவித்தது.
முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
எம்பிபிஎஸ் படிப்பிற்கான NEET-UG தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி மாணவர்கள் உள்ளிட்ட பலரை கைது செய்தது.






