NEET-PG தேர்வை ஷிஃப்ட் அடிப்படையில் நடத்தக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வை இரண்டு ஷிப்ட் அடிப்படையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.இரண்டு வினாத்தாள் ஒரே மாதிரியான சிரமம், எளிமையை கொண்டிருக்காது என்பதால் எதிர்த்து மனுத்தாக்கல்
NEET-PG தேர்வை ஷிஃப்ட் அடிப்படையில் நடத்தக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
Published on

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஜூன் 15ஆம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்பட இருக்கிறது. தேர்வை இரண்டு முறையாக (two shifts) அதாவது காலை மற்றும் மாலை என இரண்டு முறை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டு முறை நடத்தப்பட்டால் சிலருக்கு எளிதாகவும், சிலருக்கு கடினமானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஒரே நேரத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது நீட் தேர்வு ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எந்த இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரியான சிரமம் அல்லது எளிமையைக் கொண்டவை என்று ஒருபோதும் கூற முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com