search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு
    X

    கோவை மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு

    • கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
    • அனைத்து மாணவ- மாணவிகளும் முக கவசம் அணிந்தபடி தேர்வு எழுதினர்.மாணவிகளுடன் அவர்களது பெற்றோர் ஏராளமானோர் வந்திருந்தனர்.

    கோவை :

    நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது.

    கோவை மாவட்டத்தில் சவுரிபாளையம் கேந்திரிய வித்யாலயா, அன்னூர் நவபாரத் நேஷனல் பள்ளி, சூலூர் ஆர்.வி.எஸ். கலைக்கல்லூரி, ஈச்சனாரி கற்பகம் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம் சரஸ்வதி வித்யா மந்திர், குரும்ப பாளையம் ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கண்ணம் பாளையம் கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய 7 மையங்களில் தேர்வு நடக்கிறது. இதில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 229 மாணவர்கள் உள்பட மொத்தம் 5,400 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.

    தேர்வில் பங்கேற்க வரும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் முழுக்கை ஆடைகள் அணியக்கூடாது, கலாசார, பாரம்பரிய உடை அணிந்தால், சோதனை செய்ய ஏதுவாக இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு மையத்துக்குள் வர வேண்டும். செருப்புகள் குறைந்த குதிகால் கொண்ட செருப்புகள் அனுமதிக்க ப்படும். ஷூக்கள் அணிய அனுமதியில்லை.

    ஆடைகள் தொடர்பான தேசிய தேர்வு முகமையின் அறிவுரைகளை தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தவிர அனைத்து வகை ஆபரணங்கள், கைக்கடிகாரம், காப்பு, புகைப்பட கருவி, பெல்ட், தொப்பி, மொபைல் போன், புளூடூத், ஹெட்போன், மைக்ரோ போன் போன்றவற்றை தேர்வு மையத்துக்குள் எடுத்து செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கட்டுப்பாடுகள் காரணமாக மாணவ- மாணவிகள் தேர்வு மையங்களுக்கு முன் கூட்டியே வந்து சேர்ந்தனர். அவர்களை தேர்வு மைய அதிகாரிகள் பலத்த சோதனைக்கு பிறகு மையத்துக்குள் அனுமதித்தனர். தற்போது கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள தால் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி அனைத்து மாணவ- மாணவிகளும் முக கவசம் அணிந்தபடி தேர்வு எழுதினர்.மாணவிகளுடன் அவர்களது பெற்றோர் ஏராளமா னோர் வந்திருந்தனர்.

    அவர்கள் தேர்வு மையத்துக்கு வெளியே காத்து இருந்தனர். காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க தேர்வு மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×