search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழகம்"

    • சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது.

    செங்கல்பட்டு:

    சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளிட்டுள்ளது. கட்டண உயர்வு வரும் ஏப்.1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

    ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரை உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
    • கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

    மணகெதி, கல்லக்குடி, வல்லம், இனம்கரியாந்தல், தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    ஒரு முறை பயணம் செய்வது, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஏன்?
    • 10 ஆண்டுகால ஆட்சியில் மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

    ரூ.4,181 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித்திட்ட விரிவாக்கப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பின்னர், தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    திமுக துவங்கப்பட்டது வட சென்னையில் தான். எம்எல்ஏவாக, மேயராக, துணை முதல்வராக, இப்போது முதல்வராக ஆக்கியதும் வட சென்னை தான்.

    சென்னையை மிக சிறந்த மாநகரமாக மாற்ற வேண்டிய பொறுப்பை அமைச்சர்களிடம் கொடுத்துள்ளேன். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமை எனக்கு உண்டு. சென்னையில் உள்ள பல்வேறு வளர்ச்சி பணிகளையும் திமுக அரசு ஏற்படுத்தியது தான். மேயராக இருந்தபோது மட்டுமில்லாமல், முதல்வரான போதும் மக்கள் சேவகனாக தான் செயல்படுகிறேன்.

    சென்னையை சிங்கார சென்னையாக மாற்றினோம். அமைச்சர் நேரு, மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

    சென்னை புதுப்பொலிவு பெற்று வருகிறது. வட சென்னை வளர்ச்சி திட்டங்களுக்காக முதலில் ரூ.1000 கோடி ஒதுக்கினோம். 10 ஆண்டுகால ஆட்சியில் மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

    குஜராத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதும், உடனடியாக ஹெலிகாப்டரில் சென்றார். நிதி கொடுத்தார். நான் முதல் முறையாக பிரதமரை சந்தித்தபோது, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி கேட்டேன். அவர்கள் தரவில்லை.

    மத்திய அரசுக்கு நம்மிடம் இருந்து தான் அதிக நிதி போகிறது. ஒரு ரூபாய் கொடுத்தால், 25 காசுகள் தான் திருப்பி தருகின்றனர்.

    நாட்டுப்பற்று பற்றி யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஏன்?

    வெள்ளத்தின்போது மக்களை பார்க்க வராதவர், ஓட்டு கேட்க மட்டும் வரலாமா ? இந்தியாவை காக்க நாங்கள் எப்போதும் பணியாற்றி வருகிறோம் என்பதை மக்கள் அறிவர். தமிழகத்திற்கு எதுவும் செய்யாமல் ஓட்டு மட்டும் வேண்டுமா ?

    அதிமுக,பாஜகவை மக்கள் புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    • தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    டாடா மோட்டார்ஸ் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ரூ.9 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிற்சாலையை அமைக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    டாடா மோட்டார்ஸ் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில், ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.

    இதுபோன்ற ஒரு முதலீடு தொடர்ச்சியாக தமிழகத்திற்கு இதற்கு முன் வந்ததா என்று தெரியவில்லை.

    தொழில் முதலீட்டாளர்களை தமிழகம் ஈர்க்க பல்வேறு காரணங்கள் உள்ளன.

    தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகம் நோக்கி வரத் தொடங்கி உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலிறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியைவீழ்த்தி, 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி
    • தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

    கோவையில் நடந்த ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியை வீழ்த்தி, 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு அணி முன்னேறியது

    இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதி போட்டியில் தமிழக அணி சவுராஷ்டிராவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுராஷ்ட்ரா அணி கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    முதல் இன்னிங்சில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக ஹர்விக் தேசாய் 83 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள், அஜித் ராம் 3 விக்கெட், சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் தமிழக அணி 155 ரன்கள் முன்னிலையில் இருந்தது. தமிழக அணி சார்பில் பாபா இந்திரஜித் 80 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 155 ரன்கள் பின்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை சவுராஷ்டிரா அணி தொடங்கியது.

    2-வது இன்னிங்க்சை தொடங்கிய சவுராஷ்டிரா வீரர்கள் தமிழகத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் சவுராஷ்டிரா அணி 75.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 122 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால தமிழக அணி 33 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது

    இப்போட்டியில் 9 விக்கெட்டுகள் எடுத்து, முதல் இன்னிங்ஸில் 60 ரன்களையும் குவித்து அதிரடி காட்டிய தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    • முதலில் ஆடிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தமிழகம் சார்பில் இந்திரஜித் 80 ரன், பூபதி குமார் 65 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

    கோவை:

    89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

    ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

    இந்நிலையில், 3-வது காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி சவுராஷ்டிராவை கோவையில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஓரளவு தாக்குப்பிடித்த ஹர்விக் தேசாய் அரை சதம் அடித்து 83 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தமிழகம் சார்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டும், அஜித் ராம் 3 விக்கெட்டும், வாரியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய தமிழகம் முதல் நாள் முடிவில் 1 விக்கெட்க்கு 23 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தமிழகத்தின் ஜெகதீசன் 37 ரன்னும், சாய் கிஷோர் 60 ரன்னும், பிர்தோஷ் பால் 13 ரன்னும் எடுத்தனர். பாபா இந்திரஜித், பூபதி குமார் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதமடித்தனர்.

    இந்திரஜித் 80 ரன்னும், பூபதி குமார் 65 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது.

    இரண்டாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை தமிழகம் 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. விஜய் சங்கர் 14 ரன்னும், முகமது அலி 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • காவிரி மேலாண்மை கூட்டம் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது.
    • 3 மாதத்துக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடந்தது.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கடைசியாக காவிரி மேலாண்மை கூட்டம் கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. இதன்பிறகு 3 மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறவில்லை. 3 மாதங்களுக்கு பிறகு இன்று இக்கூட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில், இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு பிப்ரவரி மாதத்திற்கான 2.5 டி.எம்.சி. தண்ணீரை விநாடிக்கு 998 கன அடி வீதம் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையமும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தொடர்ந்து கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும் அது குறைவான அளவையே திறந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Sivagangai News Tamil Nadu is becoming the 2nd largest economic state - Minister

    சிவகங்கை

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடர்பாக, சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட தனியார் மண்ட பத்தில் மாவட்ட அளவி லான பெருந்திரள் கூட்டம் நடந்தது. அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்று, சிவகங்கை மாவட்டத்தில் நிறுவனங்களின் புரிந்து ணர்வு ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்து, தொழில் முனைவோர்களுக்கு தொழிற்கடனுதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் பொருட்டு, ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டு களில், 85 சதவீதம் வாக்கு றுதிகளை நிறைவேற்றி உள்ளார்.

    முதல்-அமைச்சரின் லட்சிய கனவான வருகிற 2030-ம் ஆண்டுக்குள் தமிழ் நாட்டினை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பொருளாதார ரீதியில் உயர்த்தும் விதமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 வருகிற ஜனவரி 7, 8 ஆகிய தேதி களில் சென்னையில் நடை பெற உள்ளது. அம்மாநாடு தொடர்பாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் வழிகாட்டு தலின்படி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீ டுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, லட்சிய கனவினை நோக்கி, இம்மாநாடு பெருந்திரள் கூட்டங்கள் நடத்தப்படு கின்றன.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கு இலக்காக ரூ.300 கோடி நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.305.00 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 3162 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு இவை அடிப்படையாகவும் அமையும். அதன்படி இந்நிகழ்ச்சியின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 31 நிறுவனங்களின் ரூ.305 கோடி மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந் தங்களை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில், தொழில் முனை வோர்கள் 6 நபர்களுக்கு ரூ.4.65 கோடி மதிப்பீட்டி லான தொழிற்கடனு தவிகளும் வழங்கப்பட் டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜீத்,, மாங்குடி எம்.எல்.ஏ., மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், சிவகங்கை நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பால சந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னர்கள் சாந்தா சகாயராணி, உதவி பொறியாளர் (மாவட்ட தொழில் மையம்) காளிதாஸ் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், தொழில் முதலீட்டாளர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் இருப்பது வேதனைக்குரியது.
    • தீபாவளிக்கு பிறகு மண்டல கூட்டங்கள் நடத்தப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் த.மா.கா. மூத்த தலைவர் தெட்சிணாமூர்த்தி உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது வீட்டுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி சென்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

    காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் இருப்பது வேதனைக்குரியது.

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை வீழ்த்த அ.தி.மு.க.-பா.ஜனதா உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதுவே எனது விருப்பம்.

    தீபாவளிக்கு பிறகு மண்டல கூட்டங்கள் நடத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சியை வலுப்படுத்த உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ தஞ்சை மாவட்ட தலைவர் ரங்கராஜன், திருவாரூர் மாவட்ட தலைவர் தினகரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் காமராஜ், மாவட்ட துணை செயலாளர் ஜீவானந்தம், வட்டார தலைவர்கள் காந்தி நாராயணன், சாமிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர், ஜி.கே.வாசன் எம்.பி, ஜாம்புவானோடை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து கொள்ளையடிக்க வந்தவர்களை அரிவாளால் விரட்டிய முதியவர் வைரகண்ணுவை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

    • கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என கரூரில் நல்லசாமி கூறியுள்ளார்
    • தடையை நீக்கி அறிவிக்க தவறினால் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை

    கரூர்,

    கரூரில் நேற்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகம் காரணமாக கீழ் பவானி பாசனம் நடப்பு ஆண்டில் பாதிப்புக்கு ஆளாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் தற்போது வெகுவாக குறைந்ததற்கு மழை பொழிவு குறைந்ததுதான் காரணம். இதற்கு நீர்வளத்துறை அமைச்சரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.தேர்தலுக்கு முன்பு தேவையற்ற இலவசங்களை அறிவித்து அவற்றை நடைமுறை படுத்தி வந்தால் இலங்கைக்கு வந்த நெருக்கடியை விட மோசமான நிலை தான் வரும். 28 மாத கால ஆட்சியில் 8 முறை ஆவின் பால், பால் பொருட்களின் விலையை அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு நிர்வாகமின்மையே காரணம்.

    தமிழகத்தில் கள், காவிரிநீர், நீட்ேதர்வு, சனாதனம் பற்றிய புரிதல் இல்லை. புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை. தமிழக அரசு கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். அதை செய்ய தவறினால் வருகிற 2024 ஜனவரி 21-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.2024 நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பு தமிழக அரசு கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். தவறினால் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் விளையாட்டுத்துறையில் வியத்தகு சாதனைகளை புரிகிறது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கையில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி (காரைக்குடி), தமிழரசி(மானாமதுரை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் பெரிய கருப்பன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற 1638 விளை யாட்டு வீரர்-வீராங்கனை களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ், ஊக்கத்தொகை களை வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில், அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடையும் வகையில், தமிழகத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணையர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலும், முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, விளையாட்டுத்துறையில் வியத்தகு சாதனைகளை மேற்கொண்டு, 60 ஆண்டுகளாக செய்ய வேண்டிய வேலையை ஆறே மாதங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இத்துறையை மேம்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநில அரசு, மாவட்டம் வாரியாக ஏற்றுமதி வர்த்தக விவரங்களை பராமரிக்கிறது.
    • தமிழகத்தின் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

    திருப்பூர் :

    மத்திய அரசின் தகவல் அடிப்படையில் மாநில அரசு, மாவட்டம் வாரியாக ஏற்றுமதி வர்த்தக விவர ங்களை பராமரிக்கிறது. இந்தநிலையில் கடந்த நிதியாண்டு க்கான(2022-23) ஏற்றுமதி வர்த்தக விவரம் வெளியிட ப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2021-22ம் ஆண்டில் 2லட்சத்து 62 ஆயிரத்து 323 கோடி ரூபாயாக இருந்த தமிழக த்தின் ஏற்றுமதி வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி ரூபாயாக உயர்ந்து ள்ளது. மாநில அளவில் காஞ்சிபுரம் முதலிடத்திலும், சென்னை இரண்டா மிடத்திலும் இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் 3-ம் இடத்தில் உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் ரூ.35 ஆயிரத்து 834 கோடி அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த நிதியாண்டில்(2022-23) ரூ.36 ஆயிரத்து 419 கோடி யாக உயர்ந்துள்ளது. இருப்பி னும் முந்தைய ஆண்டில் 13.70 சதவீதமாக இருந்த திருப்பூரின் மாநில அள விலான பங்களிப்பு 11.10 சதவீதமாக குறைந்துள்ளது.

    பருத்தி நூலிழை 'டி- சர்ட்' வகைகள் - ரூ.8,396 கோடி , குழந்தைகளுக்கான பருத்தி நூலிழை பின்னலாடைகள் - ரூ.3,790 கோடி , பாலியஸ்டர் உள்ளி ட்ட செயற்கை நூலிழை 'டி-சர்ட்'கள்-ரூ. 2,493 கோடி , இரவு அணியும் பருத்திபின்னலாடைகள் மற்றும் பைஜாமா ஆடைகள் - ரூ. 1,933 கோடி , இரவு அணியும் சட்டைகள் மற்றும் பைஜாமா- ரூ.1,288 கோடி , டி-சர்ட் அல்லாத பனியன் துணியில் தயாரித்த சட்டை வகைகள் ரூ.1,075 கோடி , உல்லன் மற்றும் உரோமத்தை பயன்படுத்தி தயாரிக்க ப்பட்ட மதிப்பு கூட்டிய குழந்தைகள் பின்ன லாடைகள் -ரூ. 806 கோடி ,பருத்தி நூலிழையில் தயாரித்த 'டிரவுசர்'கள், 'ஷார்ட்ஸ்' கள்-ரூ. 805 கோடி , பருத்தி நூலிழை யிலான இதர பின்ன லாடைகள் - ரூ.705 கோடி , செயற்கை நூலிழை உள்ளாடைகள் ரூ.688 கோடிக்கு ஏற்றுமதி செய் யப்பட்டுள்ளன.

    மேலும் 14 ஆயிரத்து 541 கோடி ரூபாய்க்கு இதர பின்ன லாடை ரகங்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் 'ஆக்டி வேட்டட் கார்பன்' வகைகள், வேளாண் பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

    ×