search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Rural Employment Guarantee Scheme"

    • 24.21 லட்சம் குடும்பங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டி உள்ளது.
    • மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் தனிப்பட்ட தலையீட்டை எதிர்பார்க்கிறோம்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    2023ம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் இருந்து திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்கப்படாததால் பொறுப்புத் தொகையும் ரூ.1,678.83 கோடியாக சேர்ந்துள்ளது.

    டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த 24.21 லட்சம் குடும்பங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டி உள்ளது.

    05.01.2024 வரை திரட்டப்பட்ட மொத்த ஊதிய பொறுப்புத் தொகையான ரூ.1,678.83 கோடியை தொழிலாளர்களுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் தனிப்பட்ட தலையீட்டை எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

     

    ×