என் மலர்tooltip icon

    இந்தியா

    விபி-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிரான பாராளுமன்றத்தில் இரவு முழுவதும் எம்.பி.க்கள் தர்ணா
    X

    விபி-ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிரான பாராளுமன்றத்தில் இரவு முழுவதும் எம்.பி.க்கள் தர்ணா

    • விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
    • புதிய திட்டம் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அம்சங்களை கொண்டுள்ளதாகவும் கூறி மசோதா நகலை கிழித்தெறிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் புதிய மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது. புதிய மசோதாவின் கீழ் வேலைவாய்ப்பு உறுதி 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்துதல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய திட்டம் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அம்சங்களை கொண்டுள்ளதாகவும் கூறி மசோதா நகலை கிழித்தெறிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மசோதா நிறைவேறியது.

    இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பாராளுமன்றத்தில் அமர்ந்து பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×