என் மலர்
நீங்கள் தேடியது "rehearsal at Puduvai"
- நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது.
- தமிழகத்தில் இன்று சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் ஒத்திகை.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வேகப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது. சில வடமாநிலங்களில் ஏற்கனவே இந்த பயிற்சி தொடங்கிவிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் ஒத்திகை நடைபெறும் என்றும் இது இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒத்திகை நடைபெறும் எனவும் மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்தது.
இந்நிலையில், சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம், புதுச்சேரி ஆகிய இடங்களில் போர்க்கால ஒத்திகை தொடங்கியுள்ளது.
ஒத்திகையின்போது சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தினர்.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையம் தாக்கப்படும் சூழலில் நிலைமையைச் சமாளிப்பது குறித்து ஒத்திகை நடத்தப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணைய வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
புதுச்சேரி அருகே லாஸ்பேட்டையிலும் போர் சூழலில் பாதுகாப்பு ஒத்திவை நடைபெற்று வருகிறது.
- கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் புதுவையில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
- இந்திய கடலோர காவல்படை, புதுவை காவல் துறையுடன் இணைந்து புதுவை கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி:
கடற்கரை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் புதுவையில் கடற்கரை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு ஒத்திகை நடக்கிறது. ஒத்திகையின் போது கடல்வழியாக புதிய நபர்கள் மற்றும் புதிய படகுகள் வருவதை கண்காணிக்கும் பணியில் இந்திய கடலோர காவல்படை, புதுவை காவல் துறையுடன் இணைந்து புதுவை கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணியில் சீனியர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் கடலோர காவல்படை போலீஸ் சூப்பிரண்டு வம்சி ரெட்டி, இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் கடற்கரை பாதுகாப்பினை ஆய்வு செய்தனர்.






