search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி பயணம்"

    • விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
    • காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து நிஜாமுதீன் சம்பர் க்ராந்தி விரைவு ரெயிலில் நேற்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    இவர்கள் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் கர்நாடக அரசு மாதா மாதம் தண்ணீர் திறக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.

    • பா.ஜ.க. தேசிய தலைமையை சந்தித்து பேச்சுவார்த்தை.
    • மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார்.

    மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அங்கு, பா.ஜ.க. தேசிய தலைமையை சந்தித்து கூட்டணி குறித்து அண்ணாமலை பேசவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது

    • ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து.
    • கவர்னர் ஆர்.என். ரவி டெல்லியில் ஒரு வாரம் தங்கியிருந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்குமிடையே அவ்வபோது கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. செந்தில் பாலாஜி விவகாரத்திலும் கருத்து வேறுபாடு தொடர்ந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா வின் தலையீட்டால் பிரச்சனை தணிந்தது.

    இதற்கிடையே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு தமிழக ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் சி.பி.ஐ.யின் விசாரணையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான ஊழல் வழக்கில் விசாரணை கிடைத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் குறித்து மாநில அரசிடம் இருந்து விளக்கம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

    இதனால், ஆளுநர் ஆர்.என். ரவி, அ.தி.மு.க.வின் 2 முன்னாள் அமைச்சர்களைக் காப்பாற்ற நினைக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். மேலும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்றார்.

    இந்நிலையில், இதுபோன்ற சூழலில் ஆளுநர் ஆர்.என். ரவி நேற்றிரவு டெல்லி சென்றுள்ளார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் வரும் திங்கள் கிழமை டெல்லி செல்கிறார்.
    • டெல்லி பயணத்தில் காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.

    பாட்னா:

    பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் நாளை மறுதினம் டெல்லி செல்கிறார். இந்த டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் சந்திக்க உள்ளார்.

    வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.

    மேலும், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் நிதிஷ்குமார் சந்திக்க உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.

    பீகாரில் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு நிதிஷ்குமார் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க இருப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.
    • மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டுமென பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.

    சென்னை:

    மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28-ம் தேதி முதல் இம்மாதம் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.

    இதற்கு நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தோம்பலும், சுயமரியாதையும் தமிழர்களின் பிரிக்க முடியாத இரண்டு பண்புகள் ஆகும். தொடர்ச்சியாக உங்களது ஆதரவையும் இது போன்ற இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியை நாளை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளார்.

    தமிழகத்திற்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.

    மேலும், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

    ×