பிரதமர் இல்லத்தில் சுடச்சுட இரவு விருந்து.. ஒரே காரில் ஒன்றாக சென்ற புதின் - மோடி

டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்தனர். மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் இல்லத்தில் சுடச்சுட இரவு விருந்து.. ஒரே காரில் ஒன்றாக சென்ற புதின் - மோடி
Published on

நாளை டெல்லியில் நடைபெற உள்ள 23வது இந்தியா-ரஷியா உச்சிமாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக இன்று மாலை ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை தந்தார்.

டெல்லியில் வந்திறங்கிய அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார்.

டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்து, கலைஞர்களை வாழ்த்தினர். பின்னர், இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார்.

பிரதமர் மோடி தனது இல்லத்தில் புதினுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறப்பு இரவு விருதுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து புதினின் முதல் இந்திய வருகை இதுவாகும். எனவே இந்த வருகை சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமெரிக்கா இந்தியா மீது பல தடைகளை விதித்துள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, புதின் ராஷ்டிரபதி பவனில் வரவேற்பு, பின்னர், ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை, பின்னர், மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் புதின் பங்கேற்பார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com