search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prime Minister Modi"

    • பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மத்திய அரங்கில் தொடங்கிய கூட்டத்தில் 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளவர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர்,சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார்

    நடந்து முடித்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 543 இடங்களில் 240 தொகுதிகளை மட்டுமே அந்த கட்சியால் கைப்பற்ற முடிந்தது. அதேநேரம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றியை பதிவு செய்தது.

    பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பிரதமர் மோடியே 3-வது முறையாக ஆட்சியமைக்க தங்கள் ஆதரவை அளித்தனர். அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடியை ஒரு மனதாக தேர்வு செய்தனர்.

    இதற்கிடையே புதிய மந்திரி சபையில் யார் யாருக்கு இடமளிப்பது குறித்து கட்சி தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.

    பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மத்திய அரங்கில் தொடங்கிய கூட்டத்தில் 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் மோடி பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார். இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்க பழைய பாராளுமன்றத்துக்கு வந்த மோடி அனைவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு நேராக இந்திய அரசியலமைப்பு புத்தகம் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று, அதை கையில் எடுத்து நெற்றியில் ஒத்திக்கொண்டார். பின் அதை தலைவணங்கி  தொட்டுக் கையெடுத்துக் கும்பிட்டு அதன்பின்னரே தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தார்.

    இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர்,சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சிகளாக கருதப்படும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய 2 கட்சிகளும் முறையே 16 மற்றும் 12 எம்.பி.க்களை வைத்திருக்கின்றன. எனவே கூட்டணி ஆட்சியை சுமுகமாக தொடர்வதற்கு இந்த இரு கட்சிகளின் ஆதரவும் பா.ஜ.க.வுக்கு முக்கியமானதாகும்.

    • மத்திய அமைச்சரவையில் நான் சேருவது குறித்து கட்சி முடிவு செய்யும்.
    • நான் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நடந்த மக்களவை தேர்தலில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது.

    மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளிலுமே பா.ஜ.க. தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பா ளர்கள் களமிறக்கப்பட்டனர். இந்த தேர்தல் மூலமாக கேரளாவில் கால்பதிக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய பாரதிய ஜனதா, அதற்கு தகுந்தாற் போல் வேட்பாளர்களை போட்டியிட செய்தது.

    மத்திய மந்திரிகள் ராஜீவ் சந்திரசேகர், முரளீதரன், நடிகர் சுரேஷ் கோபி, கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் உள்ளிட்ட வர்களை களமிறக்கியது. அவர்களது வெற்றிக்காக பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

    இந்நிலையில் கேரள மாநில மக்களவை தொகுதி களில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி மட்டுமே வெற்றி பெற்றார். இதன்மூலம் கேரளாவில் பாரதிய ஜனதா கால் பதித்தது. அந்த நிலையை தனது வெற்றியின் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு நடிகர் சுரேஷ் கோபி பெற்றுத் தந்திருக்கிறார்.

    தேர்தல் பிரசாரத்தின் போதே நடிகர் சுரேஷ்கோபி வெற்றிபெற்றால், அவருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டார்.

    மேலும் கேரள மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட வர்களில் அவர் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் அவருக்கு நிச்சயமாக மத்திய மந்திரி பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் கேபினட் மந்திரி அந்தஸ்தில் அவருக்கு பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.

    இந்நிலையில் பிரதமர் மோடியை நடிகர் சுரேஷ்கோபி இன்று நேரில் சந்திக்க உள்ளார். மத்திய மந்திரி பதவி பற்றி நடிகர் சுரேஷ்கோபியிடம் கேட்ட போது, "மத்திய அமைச்சரவையில் நான் சேருவது குறித்து கட்சி முடிவு செய்யும். நான் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்" என்றார்.

    • 10 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி அமைகிறது.
    • ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி இருக்கி றது. இதன் காரணமாக மத்தியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி அமைகிறது.

    மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

    ஆனால் இந்த மேஜிக் நம்பரை இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியாலும் எட்ட இயலவில்லை. 400 இடங்க ளுக்கு குறி வைத்த பாரதீய ஜனதா கட்சி 240 தொகுதி களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. இதனால் ஆட்சி அமைக்க தேவையான மேலும் 32 இடங்களுக்கு அந்த கட்சி தனது தோழமை கட்சிகளையே நம்பி இருக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    பாரதீய ஜனதா தலை மையிலான கூட்டணியில் இடம் பெற்று இருந்த சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 எம்.பி. இடங்களையும், நிதிஷ்கு மாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 12 எம்.பி. இடங்களையும், ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி 7 எம்.பி. இடங்களையும், சிரக்பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி 5 எம்.பி. இடங்களையும் வைத்து உள்ளன.

    மேலும் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 2 எம்.பி.க்களையும், ஜனசேனா, ராஷ்டீரிய லோக்தளம் கட்சிகள் தலா 2 எம்.பி.க்களையும் வைத்துள்ளன. தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய மக்கள் கட்சி, அசாம் கணபரிஷத், அப்னா தளம், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், மதசார்பற்ற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகியவை தலா ஒரு எம்.பி. பதவிகளையும் வைத்துள்ளன. மொத்தத்தில் பாரதீய ஜனதா தலை மையிலான கூட்டணிக்கு 293 இடங்கள் கிடைத்து உள்ளன.

    எனவே பா.ஜ.க. கூட் டணி ஆட்சி அமைக்க தேவையான பலத்துடன் உள்ளது. இதனால் 3-வது முறையாக ஆட்சி அமைக் கும் முயற்சிகளில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதற்கான நட வடிக்கைகள் இன்று காலை டெல்லியில் தொடங்கின.

    இன்று பகல் 11.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் 17-வது பாராளுமன்றத்தை கலைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்போதைய பாராளுமன்றம் கலைக்கப் படும்.

    அதன் பிறகு புதிய பாரா ளுமன்றத்தை அமைப்ப தற்கான ஏற்பாடுகள் தொடங்கும். இதை கருத்தில் கொண்டு பா.ஜ.க. தலை மையிலான கூட்டணி கட்சி யினர் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு ஆலோ சனை நடத்த உள்ளனர். அதில் முக்கிய முடிவுகள் எட்டப்படுகிறது.

    பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலைக்கு தள்ளப் பட்டதால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவும், 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரும் கிங்மேக்கர்களாக மாறி உள்ளனர். டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் நடக் கும் கூட்டத்தில் அவர்கள் இருவரும் பங்கேற்க உள்ள னர்.

    ஏக்நாத் ஷிண்டே, குமாரசாமி, சிரக்பஸ்வான் மற்றும் கூட்டணியில் உள்ள தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். அப்போது ஆட்சி அமைப்ப தற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பார்கள்.

    கடந்த 10 ஆண்டுகளாக பாரதீய ஜனதா தனி செல்வாக்குடன் இருந்ததால் முக்கிய இலாக்காக்கள் அனைத்தையும் தன்வசம் வைத்திருந்தது. ஆனால் இந்த தடவை முக்கிய இலா காக்களில் பெரும்பாலான வற்றை நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் தங்களுக்கு கேட்டு பெறு வார்கள் என்று கூறப்படு கிறது.

    மேலும் பாராளுமன்ற சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சிக்காக சந்திரபாபு நாயுடு கேட்பார் என்று தகவல்கள் வெளி யாகி உள்ளது. வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி அரசு இருந்த போது தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் சபா நாயகராக இருந்தார். அதே போன்று தற்போதும் சபாநா யகர் பதவியை தங்களுக்கு ஒதுக்க சந்திரபாபு நாயுடு வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

    இது தவிர ஆந்திர மாநி லத்துக்கு சிறப்பு அந்தஸ்தை யும் சந்திரபாபு நாயுடு தொடக்கத்திலேயே கேட்டு வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி அந்த கோரிக்கையை ஏற்கும் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சந்திரபாபு நாயுடுவை போலவே நிதிஷ்குமாரும் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு வலியு றுத்துவார் என்று தெரிய வந்துள்ளது. இன்று மாலை இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று கூறப்படுகிறது.

    கூட்டத்தில் இவற்றுக்கு விடை கிடைத்ததும் பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் பிரதமர் மோடி ஜனாதி பதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதன் அடிப்படையில் ஜனாதிபதி அழைப்பு விடுத்ததும் பிரதமர் மோடி 3-வது முறையாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பதவி ஏற்பு விழா எப்போது எங்கு நடக்கும் என்ற விவரங்கள் இன்று மாலை ஆலோசனை கூட்டத்துக்கு பிறகுதான் தெரிய வரும். இதனால் பா.ஜ.க. நிர்வாகி கள் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

    இதற்கிடையே நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக வருகிற 8-ந் தேதி பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    • கொலை-கொள்ளை, சட்டம் ஒழுங்கு சரியில்லை.
    • கஞ்சா போதை கூலிப்படையை வைத்து கொலை செய்வது அதிகரித்துவிட்டது.

    வேலூர்:

    வேலூர்மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் சித்த மருத்துவமனையில் தெலுங்கானாவின் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி ஆனந்தன் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இன்று பிறந்தநாள் காணும் தமிழிசை சவுந்தரராஜன், தந்தையை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்க முடிவு செய்தார். இதனால் தந்தையை பார்ப்பதற்காக தமிழிசை சவுந்தரராஜன் ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்தார். காட்பாடி ரெயில் நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    என்னுடைய பிறந்தநாளும் ஜுன் 2 தான், தெலுங்கானாவும் பிறந்தது ஜூன் 2 தான். மீண்டும் மோடி பிரதமராக நன்றியுடன் வாக்களித்த மக்களுக்கு நன்றி. தமிழகத்திலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, வாக்கு சதவிகிதமும் அதிகரிக்கும். வேங்கை வயல் பிரச்சினைக்கு தீர்வில்லை.

    கொலை-கொள்ளை, சட்டம் ஒழுங்கு சரியில்லை. கஞ்சா போதை கூலிப்படையை வைத்து கொலை செய்வது அதிகரித்துவிட்டது.

    காங்கிரசின் மாவட்டத்தலைவர் கொலைக்கு தடயமும், தீர்வும் கிடைக்கவில்லை. இவ்வளவு தோல்விகளை வைத்துகொண்டும் ரேஷன் அரிசி கடத்தல், மின் கட்டணம் பால், பத்திரபதிவு கட்டணம் உயர்வு. இலாகா இல்லாத ஒரு அமைச்சர் ஊழலால் சிறையில் உள்ளார். மக்கள் இதனால் வெறுப்படைந்துள்ளனர்.

    வருங்காலத்தில் இதனை உணர வேண்டும். பாரத தேச மக்கள் வளர்ச்சிக்காகவும், ஊழலுக்கும் எதிராக வாக்களித்துள்ளனர். நாங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக வாக்களிக்கிறோம் என மக்கள் மகிழ்ச்சியாக சொல்கின்றனர்.

    மக்கள் நாட்டின் பாதுகாப்பை உணர்ந்தே பா.ஜ.க.வுக்கு வாக்களி த்துள்ளனர். பிரதமர் மீது, மக்கள் அபரிவிதமான அன்பை வைத்திருகின்றனர்.

    தமிழகத்தில் இன்னும் அதிகமான எண்ணிக்கையை எதிர்பார்த்தோம். தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது. ஆனால் எதிர் வாக்கு சிதறுகிறது.

    இருந்தாலும் தமிழக கருத்து கணிப்பை விட அதிக எண்ணிக்கையை பெறுவோம். திராவிட மாயையுடன் தவறுகள் நடக்கிறது. இதனை மக்கள் புரிந்துகொள்வார்கள். கன்னியாகுமரிக்கு மோடி தியானம் செய்ய வந்தார். ஆனால் ஸ்டாலின் கொடைக்கானால் கோள்ப் விளையாடினார். இதையெல்லாம் கேமரா இல்லாமலே படம் எடுத்தனர். மோடி எங்கு சென்றாலும் தியானம் செய்யலாம்.

    ஆனால் கன்னியாகுமரி ஒரு தியாக பூமி. அது பார்வதி மாதா தவம் செய்த இடம். விவேகானந்தர் தவம் செய்த இடம். இப்படிப்பட்ட ஆன்மீக இடமாக கன்னியாகுமரி உள்ளது என்பதை எடுத்து சொல்ல தான் மோடி அங்கு தியானம் செய்து திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    பிரதமர் அங்கு தியானம் செய்ததால் அதன் முக்கியத்துவம் அதிகமாக தெரிகிறது. பிரதமர் செல்லும் போது தியானம் செய்த இடம் குறித்து மக்களுக்கு அதற்கான முக்கியத்துவம் தெரியவரும்.

    பிரதமர் மோடி தினமும் காந்தி சிலைக்கு பூதூவி தான் அலுவலகத்தில் பணியை தொடங்குகிறார்.

    மோடி எதை செய்தாலும் அது திணிக்கப்படுகிறது .ஒரு நடிகர் சொல்கிறார் மோடி ஷுட்டிங்க் நடத்துகிறார் என்று. தி.மு.க. அலுவலகத்தில் எல்லாம் இப்போது தான் தேசிய கொடியை ஏற்றுகின்றனர்.

    முரசொலியில் காந்தியை பற்றி தலையங்கம் எழுதுகின்றனர். இதற்கு அவர்களை எழுத வைக்க மோடி தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பிரதமர் மோடி பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்தை பதிவு செய்தார்.
    • சுவாமி விவேகானந்தரும் இந்த பாறையில் தியானம் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி:

    3 நாட்கள் தியானம் முடித்து புறப்பட்ட பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்தை பதிவு செய்தார்.

    இந்தியாவின் கடைசி முனையான கன்னியாகுமரியில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமான உணர்வை அனுபவித்து வருகிறேன். பார்வதியும், சுவாமி விவேகானந்தரும் இந்த பாறையில் தியானம் செய்திருந்தனர். பின்னர் ஏக்நாத் ரானடே அவர்கள் இந்த கல் நினைவகத்தை அமைத்து விவேகானந்தரின் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்தார்.

    ஆன்மீக வளர்ச்சியின் முன்னோடியான சுவாமி விவேகானந்தர் எனது லட்சியமாகவும், எனது ஆற்றலின் மூலமாகவும், எனது ஆன்மிக பயிற்சி யாகவும் இருந்துள்ளார். சுவாமிஜியின் கனவுகள், மதிப்புகள் மற்றும் லட்சியங்களை பின்பற்றி வடிவம் பெறுவது எனது அதிர்ஷ்டம்.

    இந்த பாறை நினைவு சின்னத்தில் நான் இருக்கும் இந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும், எனது வாழ்வின் ஒவ்வொரு கணமும் என் உடலில் ஒவ்வொரு துகளும் தேச சேவைக்காக அர்ப்பணிக்கப்படும் என்ற எனது உறுதியை பாரத அன்னையின் காலடியில் அமர்ந்து இன்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.

    தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாரதத்திற்காகவும் நமது மரியாதையை செலுத்து கிறோம் என்று அவர் கருத்து பதிவிட்டுள்ளார். 

    • சஸ்பெண்டு செய்யப்படுவதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம்.
    • பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்று பொறுப்பேற்க வேண்டும்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று அதிகாலை வந்தார். அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு வழிபட்டார்.

    சாமி தரிசனம் செய்த அண்ணாமலைக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும். 3-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்று பொறுப்பேற்க வேண்டும் என அருணாசலேஸ்வரரை வேண்டி வணங்கினேன்.

    போலீஸ் அதிகாரிகள் ஓய்வு பெறும் கடைசி நாளில் சஸ்பெண்டு செய்யப்படுவதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் காரணம்.

    இந்தியா கூட்டணியின் கூட்டத்திற்கு கூட்டணியில் உள்ள கட்சிகளின் 2-ம் கட்ட தலைவர்கள் தான் செல்கின்றனர்.

    தேர்தலில் தோல்வி அடைவோம் என்று அவர்களுக்கே தெரிந்ததால் தான் இன்றைய கூட்டத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 2-ம் கட்ட தலைவர்களை அனுப்பு கிறார்கள்.

    பிரதமர் கன்னியா குமரிக்கு வந்துள்ளது ஒரு தனிப்பட்ட நிகழ்வு. அதனால் தான் பா.ஜ.க.வின் ஒரு தொண்டர்கள் கூட அங்கு செல்லவில்லை.

    விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு அரசின் அனுமதியோ அல்லது தேர்தல் ஆணையத்தின் அனுமதியோ தேவையில்லை. விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் செய்தாலும் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் மக்கள் தடுக்கப்படவில்லை.

    எதில் எல்லாம் அரசியல் செய்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியின் தியானம் குறித்து விஷமத்தனமான அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சாமி தரிசனம் செய்ய காத்திருந்த அண்ணாமலையுடன் வரிசையில் நின்ற பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    அப்போது ஒரு சிறுமி இன்று எனது பிறந்த நாள் என்னை ஆசீர்வதியுங்கள் என கேட்டார். அந்த சிறுமியை வாழ்த்திய அண்ணாமலை சிறுமியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். 

    • மோடி மீண்டும் பிரதமராக 3-வது முறையாக பொறுப்பேற்பார்.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்.

    தூத்துக்குடி:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய இணை மந்திரி எல்.முருகன் குடும்பத்துடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கான ஆதரவு அலை வீசுகிறது. நாட்டில் நடை பெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 3-வது முறையாக பொறுப்பேற்பார்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும். விவேகானந்தர் தியானம் செய்த குமரி முனையில் பிரதமர் தியானம் செய்து கொண்டிருக்கிறார்.

    மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவுநீர் ஓடையை சுத்திகரிப்பது குறித்து காங்கிரஸ் கவுன்சிலரிடம் கேள்வி எழுப்பிய வாலி பரை அவதூறாக பேசி தாக்கி உள்ளனர். அந்த சம்பவத்திற்கு தமிழக காவல் துறையினர் 2 நாட்களாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மாறாக கேள்வி கேட்ட இளைஞர் மீதும், தாய் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    சமூகவலைதளத்தில் ஏதாவது தகவல் வெளியிட்டால் அதிகாலை 2 மணிக்கு கைது செய்யும் காவல்துறை இந்த சம்பவத்தில் இன்னும் கைது செய்யாமல் உள்ளனர்.

    2014-ம் ஆண்டு 10-வது இடத்தில் இருந்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்து தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். 2027-க்குள் 3-வது இடத்தை அடைந்து விடுவோம் என பிரதமர் மோடி கேரண்டி கொடுத்துள்ளார். அதனை நாம் நிச்சயம் அடைவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு கன்னியாகுமரி வந்து சேர்ந்தார்.
    • நெற்றியில் திருநீற்று பட்டையுடன், சந்தனம்-குங்குமம் அணிந்திருந்தார். ருத்ராட்ச மாலையை கையில் வைத்து கண்களை மூடி வேத மந்திரங்களை கூறியபடி தியானம் செய்தார்.

    பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு கன்னியாகுமரி வந்து சேர்ந்தார். பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு மாலையில் விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கிய அவர் அதிகாலை 5.30 மணி வரை மொத்தம் 11 மணி நேரம் தியானத்திலேயே இருந்தார். தியானத்தின்போது காவி வேட்டி, காவி சட்டை, காவி துண்டுக்கு மாறினார். நெற்றியில் திருநீற்று பட்டையுடன், சந்தனம்-குங்குமம் அணிந்திருந்தார். ருத்ராட்ச மாலையை கையில் வைத்து கண்களை மூடி வேத மந்திரங்களை கூறியபடி தியானம் செய்தார். மண்டபத்தில் ஓம் என்ற ஒலி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. இது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

    பிரதமர் மோடி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தியானத்தை முடித்தபடி வெளியே வந்தார். 5.55 மணிக்கு சூரிய உதயத்தை விவேகானந்தர் மண்டபத்தில் இருந்தபடி கண்டுகளித்தார். அப்போது சூரிய வழிபாடு செய்த அவர் மீண்டும் மண்டபத்தை வலம் வந்தார். அந்த சமயத்தில் ஸ்ரீ பாதம் மண்டபத்திலும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திலும் சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார்.

    அதை தொடர்ந்து காலை 7.25 மணிக்கு மீண்டும் தியான மண்டபத்துக்குள் சென்று 2-வது நாள் தியானத்தை தொடர்ந்தார். விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டாலும், சுற்றுலா பயணிகள் படகு மூலம் அங்கு சென்று வர கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பிரதமர் மோடி இருந்த தியான மண்டப பகுதியில் செல்ல யாருக்கும் அனுமதி அளிக்க வில்லை.

    அங்கு பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், கமாண்டோ படையினர், தமிழக போலீசார், துணை ராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் ஒன்று குமரி மாவட்ட கடல் பகுதியை அடிக்கடி சுற்றி வந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. 3-வது நாளாக இன்று பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ள இருக்கிறார் . பிற்பகலில் தியானத்தின் நிறைவாக 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த தனிப்படகில் பிரதமர் மோடி செல்கிறார். அதன்பிறகு திருவனந்தபுரம் வழியாக டெல்லி திரும்புகிறார்.

    விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருவதையொட்டி கடலிலும், கடற்கரையிலும், வானிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பிரிவினர், கமாண்டோ படையினர், இந்திய கப்பல் படையினர், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக கடலோர காவல் படை, தமிழக போலீசார் ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொள்கிறார்.
    • கடைசிக்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.

    ஆலந்தூர்:

    'இந்தியா' கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து டெல்லியில் அந்த கூட்டணியின் கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு கலந்துகொள்கிறார்.

    நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) கடைசிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வருகிற 4-ந் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்பேரில் இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்துகொள்கிறார். இதற்காக அவர், சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    டெல்லி செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் டி.ஆர்.பாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கையில் 'இந்தியா' கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெறும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    அப்போது அவரிடம், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அவர் இந்தியாவின் பிரதமர். என்ன வேண்டுமென்றாலும் செய்வார்' என்று கூறிவிட்டு சென்றார்.

    • பிரதமர் மோடி குமரி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார்.
    • விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கன்னியாகுமரிக்கு 3 நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி நேற்று மாலையில் இருந்து குமரி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார்.

    இந்நிலையில், அவர் விவேகானந்தா! இவர் வெறுப்பானந்தா! என்று பிரதமர் மோடியை திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

    நரேந்திரா ×

    நரேந்திரமோடி

    அவர் விவேகானந்தா!

    இவர் வெறுப்பானந்தா!

    அவர் வெறுப்பை உமிழவில்லை!

    அதனால்-

    விவேகானந்தா ஆனார்.

    இவருக்கு வெறுப்பு அரசியல் தான் பெருமுதலீடு.

    அதனால்- 'வெறுப்பானந்தாவாக'

    வலம் வருகிறார்.

    வானுயர்ந்து நிற்கும் வள்ளுவனின் புகழ்நிலத்தில்..

    எளியோரை ஏய்க்கும் எத்தர்களின் வித்தைகள்

    ஒருபோதும் எடுபடாது!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இன்று முதல் 3 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து தியானம் செய்ய உள்ளார்.
    • பாதுகாப்பு பணியில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வந்தடைந்துள்ளார்.

    திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி இன்று மாலை கவன்னியாகுமரி வந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

    சாமி தரிசனத்திற்கு பிறகு, படகு மூலம் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.

    அங்கு, இன்று முதல் 3 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து தியானம் செய்ய உள்ளார்.

    பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும், கடல் பகுதி முழுவதும் இந்திய கடலோர பாதுகாப்பு படை, இந்திய கப்பல் படை, தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை
    • உங்கள் வாட்ஸ்அப் பல்கலைகழகத்தை தாண்டி கொஞ்சம் வளருங்கள்.

    1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.

    தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், "தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "மிஸ்டர் மோடிஜி நீங்கள் பள்ளிக்கு சென்றிருந்தால் எங்கள் மகாத்மாவை யாரென்று அறிந்திருப்பீர்கள். தயவு செய்து உங்கள் வாட்ஸ்அப் பல்கலைகழகத்தை தாண்டி கொஞ்சம் வளருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×