search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவேகானந்தா"

    • எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து வழிபட்டனர்
    • மலர் மாலைகள் அணிவித்து தேங்காய் பழம் படைத்து சுருள் வைத்து வழிபட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் பரிவேட்டை நிகழ்ச்சியில் வழி நெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் எலுமிச்சம் பழம் மாலை மற்றும் மலர் மாலைகள் அணிவித்தும் தேங்காய், பழம் படைத்து சுருள் வைத்தும் வழிபட்டனர்.

    விவேகானந்தபுரம் சந்திப்பில் ஊர்வலம் வந்த போது கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா சார்பில் பகவதி அம்மனுக்கு, எலுமிச்சம் பழம் மாலை மற்றும் மலர் மாலைகள் அணிவித்து தேங்காய் பழம் படைத்து சுருள் வைத்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திரத்தின் அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் அனுமந்தராவ், நிவேதிதா, கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன் மற்றும் கேந்திர ஆயுட்கால ஊழியர்கள், கேந்திர பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கசர்வதேச உரிமைகள் கழக நாகர்கோவில் தொகுதி மாவட்ட செயலாளர் வி.சி. செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
    • கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறுகிறது

    நாகர்கோவில் : கசர்வதேச உரிமைகள் கழக நாகர்கோவில் தொகுதி மாவட்ட செயலாளர் வி.சி. செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சர்வதேச உரிமைகள் கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கு சர்வதேச உரிமைகள் கழக தலைவரும் சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான அசோக்குமார் தலைமை தாங்குகிறார். எம்.செந்தில் குமார், தினேஷ் குமார், சந்திர செல்வம், நாகேந்திரன், பி. செந்தில் குமார், சிவா, செல்வகணேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில துணை பொதுச்செயலாளர் லாரன்ஸ் வரவேற்று பேசுகிறார்.

    சிறப்பு விருந்தினராக நிறுவனத் தலைவர் டாக்டர் சுரேஷ் கண்ணன் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் பச்சைமால், சுரேஷ்குமார், துணைத் தலைவர்கள் தாஸ், ரமேஷ் , நாகர்கோவில் தொகுதி மாவட்ட செயலாளர் வி.சி.செந்தில்குமார் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நஜிமுதீன், ஸ்டாலின், கிங்ஸ்லி ஜெரால்டு , ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழக அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்லூரி செயலாளர் ராஜன் கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
    • கல்லூரி அகதர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் மகேஷ் வாழ்த்தி பேசினர்.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் கணிதத்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி பொறுப்பு முதல்வரும், இயற்பியல் துறை தலைவருமான ஜெயந்தி தலைமை தாங்கினார். கணித துறை தலைவர் ஜெயலட்சுமி வரவேற்றார். கல்லூரி செயலாளர் ராஜன் கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    முன்னாள் பேராசிரியர் ராமச்சந்திரன், கல்லூரி அகதர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் மகேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    கேரள பல்கலைக்கழக தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் அனில்குமார், தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி கணிதத்துறை தலைவர் ஸ்டீபன்ஜான் ஆகியோர் கருத்து ரையாற்றினர். ஒருங்கி ணைப்பாளர் பேராசிரியர் சிவபாலன் நன்றி கூறினார். கணிதத்துறை உதவி பேராசிரியர் திருநாவுக்கரசு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். கருத்தரங்கில் கணிதத்துறை மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பிற துறை ஆசிரியர்களும் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கவுரி, ஜெயபுவனேஸ்வரி, ஹெரின்வைஸ்பெல், பிரியவதனா, அணு, செல்வகுமார், மகேஷ்வரன் மற்றும் பிரபாவதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • கேரளா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தூய்மை பாரதத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.
    • இவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 90 முதல் 140 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    கன்னியாகுமரி:

    கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் உன்னி (வயது 58). ஆடிட்டர். இவர் சீடு குருகுலம் சார்பில் தூய்மை பாரதத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி அவர் கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடத்தில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

    அங்கு உள்ள பாரத மாதா சிலைக்கு மலர் தூவி வணங்கினார். அதைத் தொடர்ந்து ராமர் லட்சுமணர் சீதை சிலைகளுக்கு மலர் தூவி வணங்கினார். பின்னர் சித்திரக் கண்காட்சி கூடம் முன்பு உள்ள 27 அடி உயர ஆஞ்சநேயர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி வணங்கினார்.

    அதைத் தொடர்ந்து சைக்கிள் பயணத்தை கன்னியா குமரி விவே கானந்த கேந்திர தலை வர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி விவே கானந்த கேந்திர மக்கள் தொடர்பு அதிகாரி ரகுநாதன் நாயர், கேந்திர பொறுப்பாளர் சுனில் ராமுலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பயணம் புறப்பட்ட கோவிந்தன் உன்னி தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலை அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி சென்றடைகிறார். மொத்தமுள்ள 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தை இவர் 48 நாட்களில் சைக்கி ளில் கடந்து செல்கிறார்.

    இவர் நாள்ஒன்றுக்கு சராசரியாக 90 முதல் 140 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2017- ம் ஆண்டு சபரி மலைக்கு பிளாஸ்டிக் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கன்னியாகுமரி, சென்னை வழியாக மீண்டும் பாலக்காடு சென்றடையும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    அப்போது இவர் மொத்தம் உள்ள 1860 கிலோ மீட்டர் தூரத்தை 28 நாட்களில் சைக்கிளில் கடந்து சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர் இந்த முறை சைக்கிள் பயணம் மேற்கொள்வதற்காக பொது மக்களிடம் இருந்து தலா ஒரு ரூபாய் வீதம் மொத்தம் ரூ 22 ஆயிரம் வசூல் செய்து சைக்கிள் விலைக்கு வாங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ×