search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகஸ்தீஸ்வரம்"

    • குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 15-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    தென்தாமரைகுளம்:

    அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலையத்துக்குட்பட்ட பாலசவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவில் நவராத்திரி விழாகடந்த 15-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. கடைசி நாளானநேற்று விஜயதசமியை முன்னிட்டு ஆலயத்தில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்பு குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை விவேகானந்தா கல்லூரியின்முன்னாள் தமிழ் துறை தலைவர் மரிய ஜூலியட் ஏடு தொடங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஆசிரியை ரேணுகா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சுமார் 20 குழந்தைகள் கலந்து கொண்டனர். பின்பு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அறங்காவலர்கள் கே.எஸ்.மணி, பேராசிரியர் கருணாகரன், ராஜசுந்தரபாண்டியன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கசர்வதேச உரிமைகள் கழக நாகர்கோவில் தொகுதி மாவட்ட செயலாளர் வி.சி. செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
    • கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறுகிறது

    நாகர்கோவில் : கசர்வதேச உரிமைகள் கழக நாகர்கோவில் தொகுதி மாவட்ட செயலாளர் வி.சி. செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சர்வதேச உரிமைகள் கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கு சர்வதேச உரிமைகள் கழக தலைவரும் சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான அசோக்குமார் தலைமை தாங்குகிறார். எம்.செந்தில் குமார், தினேஷ் குமார், சந்திர செல்வம், நாகேந்திரன், பி. செந்தில் குமார், சிவா, செல்வகணேஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில துணை பொதுச்செயலாளர் லாரன்ஸ் வரவேற்று பேசுகிறார்.

    சிறப்பு விருந்தினராக நிறுவனத் தலைவர் டாக்டர் சுரேஷ் கண்ணன் கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் பச்சைமால், சுரேஷ்குமார், துணைத் தலைவர்கள் தாஸ், ரமேஷ் , நாகர்கோவில் தொகுதி மாவட்ட செயலாளர் வி.சி.செந்தில்குமார் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் நஜிமுதீன், ஸ்டாலின், கிங்ஸ்லி ஜெரால்டு , ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட சர்வதேச உரிமைகள் கழக அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
    • ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக அவைக்கூடத்தில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். துணை தலைவி சண்முகவடிவு, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பரதி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அருண்காந்த், பிரேமலதா, ராஜேஷ், ஆரோக்கிய சவுமியா, பால்தங்கம், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் ஹெலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் சாலை, குடிநீர் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்டனர்.
    • கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள மறுகால் ஓடை மற்றும் பொதுமக்கள் குளிக்கும் படித்துறை உடைந்து சேதம் அடைந்த நிலையில் பல ஆண்டுகளாக பராமரிக்கப் படாமல் கிடந்தது. இதனால் பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்ட னர். இதைத் தொடர்ந்து குளத்தின் படித்துறை மற்றும் மறுகால் ஓடையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று சமூக ஆர்வலர் வக்கீல் சந்திர சேகரன் ஏற்பாட்டில் மறு கால் சீரமைப்பு பணி தொடங்கியது.

    இந்த பணியை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி துணை தலைவி விமலா, நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மதி, காங்கிரஸ் வட்டார துணை தலைவர் அரி கிருஷ்ண பெருமாள், தி.மு.க. நிர்வா கிகள் முருகன், சாமிநாதன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தலைமையில் நடந்தது
    • அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் பரமராஜா உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு பகுதியான கிட்டங்கி தெருவில் ரூ.7 லட்சம் செலவில் புதிதாக அலங்கார தரை ஓடுகள் பதிக்கப்பட உள்ளது. பணியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தலைமை தாங்கினார். கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி அலங்கார தரை ஓடுகள் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    துணை தலைவி விமலாமதி, மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் வினோத், தமிழ்மாறன், தி.மு.க. கிளை செயலாளர் மதி, மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன்ஜானி, மாவட்ட தி.மு.க.இளைஞர்அணி துணைஅமைப்பாளர் பொன்ஜாண்சன், பேரூராட்சி கவுன்சிலர் தங்ககுமார், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தே.மு.தி.க. செயலாளர் பரமராஜா உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
    • கன்னியாகுமரி டி.எஸ்.பி., திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டார்.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள சந்தையடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அகஸ்தீஸ்வரம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம் போல் செல்போன் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த விலை உயர்ந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 10 செல்போன்கள் திருட்டுபோய் இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஒரு பெரிய கல்லை எடுத்து கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் சென்று செல்போன்களை திருடி சென்றது தெரிய வந்தது.

    செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் கன்னியாகுமரி டி.எஸ்.பி., திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டார். இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க அவர் உத்தரவிட்டார்.

    • கோவிலில் திரு ஏடு வாசிப்பு விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 17-ஆம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டா பிஷேக விழா நடைபெறு கிறது.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் அருள் மிகு குலசேகர விநாயகர் அறநிலையத்திற்குட்பட்ட ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் திரு ஏடு வாசிப்பு விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 15 நாளான நேற்று வெள்ளிக்கிழமை திருக்கல்யாண விழா நடை பெற்றது.

    இதையொட்டி மாலை 5 மணிக்கு குலசேகர விநாயகர் ஆலயத்தில் இருந்து 91 தட்டுகளில் பழங்கள், இனிப்பு, பலகாரங்கள், முறுக்கு, தேங்காய் வைத்து திருக்கல்யாண சீர்வரிசைச் சுருள் கொண்டு வரும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு ஊர்வல மாக எடுத்து வந்தனர்.

    பின்னர் 6 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், இரவு 8 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. 16-ஆம் நாளான இன்று சனிக்கிழ மை மாலை 6 மணிக்கு திரு ஏடு வாசிப்பும், இரவு 9.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவடையும் நடக்கிறது. 17-ஆம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டா பிஷேக விழா நடைபெறு கிறது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடையும், பகல் 11.30 மணிக்கு உச்சிப்படிப்பும், நண்பகல் 12.மணிக்கு பணிவிடையும், பிற்பகல் 2 மணிக்கு பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பும், மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு அலங்கார பட்டாபிஷேக பணிவிடையும் மாலை 6 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமி பூச்சப்பரத்தில் எழுந்தருளி ஊர்வலமும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் கே.எஸ். மணி, எஸ். கருணாகரன், ராேஜந்தர பாண்டியன், ஸ்ரீனிவாசன், கோகுல கிருஷ்ணன், கணக்கர் ராஜ சேகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணைபேராசிரியர் ஆதித்தன் கையெழுத்து சுவடிகளும், வரலாற்று புனரமைப்பும் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
    • கத்தார் நாட்டின் பிர்லா பொதுப்பள்ளி ஆசிரியர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நாட்டார் கலைகள் குறித்து உரையாற்றினார்.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் தமிழ் நாட்டார் கலைகளும், வரலாற்று புனரமைப்பும் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் கே.எஸ். மணி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பொருளாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் இளம்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜசேகர் தலைமை உரை ஆற்றினார். கல்லூரி செயலாளர் ராஜன் மற்றும் கல்லூரி அகதர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டி.சி.மகேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணைபேராசிரியர் ஆதித்தன் கையெழுத்து சுவடிகளும், வரலாற்று புனரமைப்பும் என்னும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து கத்தார் நாட்டின் பிர்லா பொதுப்பள்ளி ஆசிரியர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நாட்டார் கலைகள் குறித்து உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் லட்சுமணன் கலந்து கொண்டார். கருத்தரங்கத்தை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ் துறை பேராசிரியை டாக்டர் பொன்மலர் தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள் டாக்டர் கவியரசு, செந்தில்குமார், ராமகுமார், ரத்னாகரன், கார்மல் சர்மிளா, சாந்தினி, சிவபிரசாத், சைலா , ஷீலா பெனடிக், ஜெஸ்ஸி, சுதர்சன் மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விஜய்வசந்த் எம்.பி. வழங்கினார்
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 171 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை விஜய் வசந்த் எம்.பி. வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ராமச் சந்திரன், உதவி தலைமை ஆசிரியர் எஸ்.என்.குமார், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி, 13-வது வார்டு கவுன்சிலர் ஆதிலிங்கபெருமாள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சீதாராமன், வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், பேரூர் தலைவர் கிங்ஸ்லின், பேரூர் அ.தி.மு.க. செயலர் சிவபாலன், மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×