அகஸ்தீஸ்வரம் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவில் திருக்கல்யாண விழாவிற்கு 91 தட்டில் சீர்வரிசை எடுத்து வந்த பெண்கள்

கோவிலில் திரு ஏடு வாசிப்பு விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.17-ஆம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டா பிஷேக விழா நடைபெறு கிறது.
சீர்வரிசை எடுத்து வந்த பெண்களை படத்தில் காணலாம்
சீர்வரிசை எடுத்து வந்த பெண்களை படத்தில் காணலாம்
Published on

கன்னியாகுமரி:

அகஸ்தீஸ்வரம் அருள் மிகு குலசேகர விநாயகர் அறநிலையத்திற்குட்பட்ட ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் திரு ஏடு வாசிப்பு விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 15 நாளான நேற்று வெள்ளிக்கிழமை திருக்கல்யாண விழா நடை பெற்றது.

இதையொட்டி மாலை 5 மணிக்கு குலசேகர விநாயகர் ஆலயத்தில் இருந்து 91 தட்டுகளில் பழங்கள், இனிப்பு, பலகாரங்கள், முறுக்கு, தேங்காய் வைத்து திருக்கல்யாண சீர்வரிசைச் சுருள் கொண்டு வரும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு ஊர்வல மாக எடுத்து வந்தனர்.

பின்னர் 6 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், இரவு 8 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. 16-ஆம் நாளான இன்று சனிக்கிழ மை மாலை 6 மணிக்கு திரு ஏடு வாசிப்பும், இரவு 9.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவடையும் நடக்கிறது. 17-ஆம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டா பிஷேக விழா நடைபெறு கிறது.

இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடையும், பகல் 11.30 மணிக்கு உச்சிப்படிப்பும், நண்பகல் 12.மணிக்கு பணிவிடையும், பிற்பகல் 2 மணிக்கு பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பும், மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு அலங்கார பட்டாபிஷேக பணிவிடையும் மாலை 6 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமி பூச்சப்பரத்தில் எழுந்தருளி ஊர்வலமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் கே.எஸ். மணி, எஸ். கருணாகரன், ராேஜந்தர பாண்டியன், ஸ்ரீனிவாசன், கோகுல கிருஷ்ணன், கணக்கர் ராஜ சேகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com