search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    LIVE

    மேற்கு வங்க ரெயில் விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்... லைவ் அப்டேட்ஸ்...

    • சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே ரெயில் விபத்தில் பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் 15பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயமடைந்த 60 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Live Updates

    • 17 Jun 2024 5:15 PM IST

      விபத்து நடந்த இடத்தில் மத்திய மந்திரி ஆய்வு.

    • 17 Jun 2024 3:43 PM IST

      ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மத்திய மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இதற்காாக அவர் மேற்கு வங்காளம் சென்றுள்ளார்.

    • 17 Jun 2024 3:03 PM IST

      ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

      https://www.maalaimalar.com/news/national/modi-govt-should-take-responsibility-for-train-accident-rahul-gandhi-724060

    • 17 Jun 2024 2:53 PM IST

      மேற்கு வங்காள மாநிலம் டார்ஜீலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜூங்கா எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது. இதனால் அந்த வழியாக செல்லும் 19 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • 17 Jun 2024 2:50 PM IST

      ஒடிசா மாநில ஆளுநர் ரகுபர் தாஸ், முதல்வர் மோகன் சரண் மாஜி, முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் மேற்குவங்காள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    • 17 Jun 2024 2:21 PM IST

      "மேற்குவங்க ரெயில் விபத்து, மோடி அரசின் அலட்சியத்தை காட்டுகிறது. ரெயில்வே துறையை அழிப்பதில் மோடி அரசு மும்முரமாக செயல்படுகிறது. இதன்மூலம் ரெயில்வே துறையை அவரின் நண்பர்களுக்கு விற்கப் பார்க்கிறது" என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    • 17 Jun 2024 1:47 PM IST

      டார்ஜிலிங் எம்பி ராஜூ பிஸ்டா விபத்து நடந்த பகுதியில் நேரில் ஆய்வு.

    • 17 Jun 2024 1:37 PM IST

      ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி- மத்திய மந்திரி அறிவிப்பு

      மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று நடந்த ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2½ லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண நிதி வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    • 17 Jun 2024 1:22 PM IST

      மேற்கு வங்க முதல்வர் மம்தா பனர்ஜி இரயில் விபத்து நடந்த இடத்திற்கு விரைகிறார். மீட்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார்.

    • 17 Jun 2024 12:57 PM IST

      ஜூன் மாதம் கதிகலங்க வைக்கும் ரெயில் விபத்துகள். கடந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி ஒடிசா மாநிலத்தில் அரங்கேறிய ரெயில் விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். மேலும், 1200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் மற்றொரு ரெயில் விபத்து அரங்கேறி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×