என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultative meeting"

    மத்திய அரசின் சாதனைகளை விளக்கி மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் சாதனை விளக்க நிகழ்ச்சி நடத்த பா.ஜனதா ஓ.பி.சி., அணி முடிவு செய்துள்ளது.
    புதுச்சேரி:

    பா.ஜனதா மாநில ஓ.பி.சி., அணி ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினர். 

    இக்கூட்டத்தில் பிரதமர்  நரேந்திர மோடி தலைமையில் கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களை மக்களிடம் ெகாண்டு செல்வது சம்பந்தமாக விவாதிக்கப் பட்டது. மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் சாதனை விளக்க நிகழ்ச்சிகளை நடக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

    ஓ.பி.சி., அணி பொதுச் செயலாளர்கள் சரவணகுமார். கிருஷ்ணராஜ், துணைத் தலைவர்கள் சதாசிவம், செல்வராஜ், செயலாளர்கள் வேல்முருகன், பாலபாஸ்கர், ராமஜெயம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேலும், மாவட்டத் தலைவர்கள் வெங்கடேசன், பிரபாகர், லட்சுமி சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    கடத்தூரில் கறிக்கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
    பாப்பிரெட்டிப்பட்டி, 

    தருமபுரி மாவட்ட கறி கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கறி கோழி வளர்ப்புக்கு உரிய தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடத்தூரில் வேலைநிறுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் பொருளாளர் சுரேஷ்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் டாக்டர் பன்னீர், பொறுப்பா ளர்கள் கோவிந்தசாமி, சேகர், சென்னப்பன், ராம கிருஷ்ணன், கென்னடி, முருகேசன், பெரியசாமி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கறிக்கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். 

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்பொழுது வழங்கிவரும் கறி கோழி வளர்ப்பிற்கான  6 ரூபாய் 50 பைசா தொகையை உயர்த்தி 12 ரூபாய் 50 பைசாவாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்றும் வரை கறி கோழிக் குஞ்சுகள் வளர்க்க பண்ணை களில் கோழிகள் இறக்க போவதில்லை என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழக அரசு கம்பெனி யாளர்களை அழைத்து பண்ணையாளர்களுக்கு உரிய தொகை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
    • காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம் சங்கராபுரத்தில் நடந்தது.
    • கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமை தாங்கி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் களுக்கு பல்வேறு ஆலோ–சனைகளை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள சங்கராபுரம், மூங்கில் துறைப்பட்டு, வடபொன் பரப்பி, பகண்டை கூட்டு ரோடு ஆகிய போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ஆலோசனை கூட்டம் சங்கராபுரத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமை தாங்கி, போலீஸ் இன்ஸ்பெக் டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் களுக்கு பல்வேறு ஆலோ–சனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர், குற்ற சம்பவங்களில் கைது செய்யப்படும் நபர்களை போலீஸ் நிலை–யங்களில் வைத்து விசாரிக்க வேண்டும்.

    கைது செய்யப்படும் குற்றவாளிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால், சிகிச்சைக்காக அவரை உடனடியாக ஆஸ்பத்தி–ரிக்கு அழைத்துச் செல்ல–வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபடு–பவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லக்கூடாது. குறிப்பாக குற்றவாளிகளை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அனைவரும் கடைபிடிக்க–வேண்டும் என பேசினர்.

    இதில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, சங்கரா–புரம் இன்ஸ்பெக்டர் பால–கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், முருகன், சூர்யா மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டம் பழனியில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

    பழனி:

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டம் பழனியில் நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்துக்கு கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    தீபாவளியையொட்டி தமிழகத்தில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். இதனால் பட்டாசு வியாபாரம் பெரும் சரிவு ஏற்படும். அதை நம்பியுள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். தற்போது நிலையில் ஆன்லைன் வணிகத்தை தடுக்க முடியாது. அதே நேரத்தில் சிறு வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வணிகத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

    வியாபாரிகளின் கோரிக்கையை அரசுக்கு கொண்டு செல்லவே தமிழகம் முழுவதும் வியாபாரிகள் சந்தித்து வருகிறோம். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்ப்பரேட் கைகளில் வணிகம் சிக்க கூடாது. அரிசி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விதிக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

    • அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் 50-வது ஆண்டு பொன்விழா நிறைவு விழா மற்றும் 51-வது ஆண்டு துவக்க விழா முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில்:-

    வரும் 17-ந்தேதி அதிமுக 51-வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்.

    மேலும் 1972 முதல் தொடர்ந்து 50 ஆண்டுகளாக கட்சி பணி ஆற்றியவர்களுக்கு பொற்கிழி மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமியால் வழங்கப்பட உள்ளது.

    இவர் அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாராயணன், துணை செயலாளர் செல்வம், பொருளாளர் நைணாக்கண்ணு, இலக்கிய அணி செயலாளர் பர்குணகுமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் குணசேகரன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுனில் குமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பர்வதம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனி, மாவட்ட பேரவை துணைத் தலைவர் ஆறுமுகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் தரணி, நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயசுதா, கலியபெ ருமாள், சரவணன், கோவிந்தராஜ், ராமச்சந்திரன், தொப்புளான், ஸ்ரீதர்

    ராகவன், மாவட்ட பிரதிநிதி சில்பிசஹானா, உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள தனியார் அரங்கில் மாவட்ட பொறுப்புக் குழு தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மலேசியா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    பொறுப்பு குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, தெய்வேந்திரன், ராஜாராம் பாண்டியன், கோட்டைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும், ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட தலைவராக நிர்வாக திறமை உள்ள ஒருவரை அறிவிக்க வேண்டும், வரும் பாராளுமன்ற தேர்தலில் கடுமையாக பணியாற்றி காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறச் செய்ய வேண்டும், இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும், காங்கிரஸ் கட்சியின் நல்ல பல திட்டங்களை பொது மக்களிடம் எடுத்து கூற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் கூட்டத்தில் தெரி விக்கப்பட்டது.

    கூட்டத்தில் பேசிய முன்னாள் கவுன்சிலர் நிஜாம் அலிகான் மற்றும் சேவாதளம் மாநில தலைவர் பரமக்குடி அஜீஸ் ஆகியோர் பேசிய போது, முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா மிகச் சிறப்பாக காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றினார். ஆனால் தற்போது 5 பேர் கொண்ட நிர்வாக குழு கூட்டத்தில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு கொடுக்காதது மிகவும் வேதனையாக உள்ளது, வரும் காலகட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் அடையாறு பாஸ்கரன், முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தாமரைக் கண்ணன், சேவா தல தலைவர் அப்துல் அஜீஸ், ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, நகர் துணைத் தலைவர் ஜெயக்குமார், மகளிர் அணி தலைவர் ராமலட்சுமி, பெமிலா விஜயகுமார், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சேது பாண்டியன், ஜோதிபாலன் உள்ளிட்ட வட்டார தலைவர்கள், ராணுவ பிரிவு தலைவர் கோபால், மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக, கிளை நிர்வாகிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • பெட்ரோல் குண்டு வீசும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்டவைகளை சேர்ந்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தமிழகத்தில் முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞரணி சார்பில் ஆலோசனை கூட்டம் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதற்கு மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கி பேசினார். இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் சிவசங்கரி முன்னிலை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட தலைவர் தினேஷ் மற்றும் பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியம், பொருளாளர் நட்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதன் பின்னர் இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாநில இளைஞரணி சார்பில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளோம். பா.ஜ நிர்வாகிகள் வீடுகள், நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்டவைகளை சேர்ந்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்திற்கு அதிகமான வங்கி கடன் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் உதவிகள் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் தொழில் பெருகும். ஆர்.எஸ்.எஸ். பேரணி என்பது எப்போதும் நடந்து வரக்கூடிய ஒரு நிகழ்வாகும். இதற்கு முன்பெல்லாம் நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி வாங்க தேவையில்லை. ஆனால் தற்போது சிறிய போராட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாததால், நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி வாங்கும் நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மணமேல்குடி வட்டாரக்கிளை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    வட்டார தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத் துணை தலைவர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் கல்வியை மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் விதமாக பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2 மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை ஒதுக்கீடு செய்து, ஒன்று புதுக்கோட்டை தொடக்கக்கல்வி அலுவலகமாகவும், மற்றொன்று அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகமாவும் செயல்பட அரசாணை வெளியிட்டதற்கு நன்றி,

    தொடர்ந்து அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் அறந்தாங்கியிலேயே செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக வட்டார செயலாளர் விஸ்வநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் பல்வேறு பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இறுதியில் பொருளாளர் பாண்டி நன்றியுரை கூறினார்.

    • தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது
    • அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் மண்டபத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை ஆலோசனை கூட்டம் போக்குவரத்து துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி கூட்டத்தில் இளைஞர்களுக்கு திராவிட மாடல் பற்றிய பல்வேறு கருத்துக்களை வழங்கினார். இதில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், மாநில சட்ட திருத்த குழு உறுப்பினர் சுபா சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா கலந்து கொண்டு இளைஞர்களுக்கு திராவிட மாடல் பயிற்சி பற்றி விளக்கி கூறினார்கள்.மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி நன்றி கூறினார்.

    • புதுவை எம்.ஜி.ஆர். பேரவையின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மகளிர் அணி தலைவி காமாட்சி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை எம்.ஜி.ஆர். பேரவையின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.

    ஆலோசனைக் கூட்டத்தில் பேரவையின் தலைவர் சுப்ரணியன், செயலாளர் ரத்தினக்குமார், பொருளாளர் ரங்கநாதன், இணைச் செயலாளர் எல்.ஐ.சி. சாம்ராஜ், துணைத் தலைவர்கள் ஜெயராம், பரமேஸ்வரி, மகளிர் அணி தலைவி காமாட்சி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற 15-ந் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது அண்ணா பிறந்த நாளில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவியருக்கு பரிசு வழங்குவது.

    75-வது சுதந்திரத்தை–யொட்டி விடுதலை போராட்ட தியாகளுக்கு பரிசு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • திருச்சி மாவட்டம் துறையூரில் தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், மாநில பொறியாளர் அணி செயலாளர் ஆனந்தராஜ், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் துறையூரில் தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், மாநில பொறியாளர் அணி செயலாளர் ஆனந்தராஜ், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    துறையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை, மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நகர செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கிளை, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு உட்பட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர், அவைத் தலைவர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் சொரத்தூர் சிவக்குமார், பகளவாடி மகேஸ்வரி துரைராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் உட்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • 12-ந் தேதி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா வருகை.
    • வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோட்டை விநாயகர் கோயில் திடலில் சங்க செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. நந்தகுமார் வரவேற்றார். கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட செயலாளர் லாலா கணேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் பொன்னுசாமி,ஆறுமுகபெருமாள், ரங்கசாமி,அய்யாசாமி, தங்கராஜ்,ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற 12-ந் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா பல்லடத்திற்கு வருகை தந்து சங்க பெயர் பலகை மற்றும் சங்க கொடியை ஏற்றி வைத்து வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது.

    பல்லடம் நகராட்சி கடைகள் ஏலம் விடும் போது வியாபாரிகளுக்கு தெரிவித்து ஏலம் விட வேண்டும். பல்லடத்தில் பல வணிக கடைகள் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் உள்ளது. இது தமிழக அரசின் ஆணைக்கு எதிரானது ஆகும். அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் .தேவைப்படும் போது ஆங்கிலத்திலும் சேர்ந்து பெயர் பலகை வைத்துக் கொள்ளலாம். இது குறித்து தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×