search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amit Shah"

    • காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் இன்னும் ஆஜரா கவில்லை.
    • நோட்டீஸ் அனுப்ப டெல்லி போலீசார் முடிவு.

    திருப்பதி:

    மத்திய மந்திரி அமித்ஷாவின் போலி வீடியோ வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த சுமார் 22 பேருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    இந்த வழக்கில் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி சார்பில் அவருடைய வக்கீல் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் இன்னும் ஆஜரா கவில்லை. அவர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பா.ஜனாவின் நிலை மிகவும் தெளிவானது. நாங்கள் நாட்டின் தாய்மார்கள் அல்லது பெண்களுடன் நிற்கிறோம்.
    • கர்நாடகா மாநிலத்தில் யாருடைய அரசு என்பதை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன்.

    தேவகவுடா பேரனும், மக்களவை எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா பெண்களை பலாத்காரம் செய்து அவற்றை வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.

    இந்த விவகாரம் நாடு தழுவிய அளவில் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். தற்போது கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதசார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் பா.ஜனதாவையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

    காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி "10 நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளை குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடக பிரசார கூட்டத்தில் புகழ்ந்து பேசிய நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடி தலைமறைவாக இருக்கிறார். நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த மோடி ஆதரித்த வேட்பாளரின் குற்றங்களை கேட்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது. இந்த கொடூரத்துக்காவது பிரதமர் மோடி வாய் திறப்பாரா?" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டுக்கு மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷா பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

    பா.ஜனாவின் நிலை மிகவும் தெளிவானது. நாங்கள் நாட்டின் தாய்மார்கள் அல்லது பெண்களுடன் நிற்கிறோம். கர்நாடகா மாநிலத்தில் யாருடைய அரசு என்பதை காங்கிரசிடம் கேட்க விரும்புகிறேன். அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது வரை அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது மிகவும் முக்கியமான விசயம். நாம் இதை சகித்துக் கொள்ள முடியாது. ஆட்சியில் இருந்தும் கூட இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இதைத்தான் நாங்கள் காங்கிரசிடம் கேட்க விரும்புகிறோம். பிரியங்கா காந்தி அவர்களுடைய முதல்-மந்திரி, துணை முதல்வரிடம் கேட்க வேண்டும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது வெட்கக் கேடான பிரச்சனை. நான் யாரையும் பாதுகாக்கவில்லை என்றார்.
    • கள யதார்த்தத்தை வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கமே அன்றி நான் அல்ல எனவும் குமாரசாமி கூறினார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, தேவகவுடா பேரனின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாங்கள் அவரைப் பாதுகாக்கப் போவதில்லை. கடும் நடவடிக்கை எடுப்போம். இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் பொறுப்பு அதிகம்.

    உறவினராக மட்டுமல்ல, நாட்டின் சாமானியனாகவும் நாம் மேலும் முன்னேறவேண்டும்.

    இது வெட்கக்கேடான பிரச்சனை. நான் யாரையும் பாதுகாக்கவில்லை. இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நாங்கள் போராடினோம். இது ஒரு தீவிரமான பிரச்சனை.

    ஆட்சியை யார் நடத்துகிறார்கள், அவர்கள் உண்மையான நிலவரத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

    கள யதார்த்தத்தை வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கமே அன்றி நான் அல்ல என தெரிவித்தார்.

    • முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது.
    • இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாட்டின் மாத்ரு சக்தியுடன் நாங்கள் நிற்கிறோம் என்பதில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.

    காங்கிரசிடம் நான் கேட்க விரும்புவது அங்கு யாருடைய ஆட்சி நடைபெறுகிறது? காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. அவர்கள் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

    இது மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விசாரணைக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என எங்கள் கூட்டாளியான மதசார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது. இன்று அவர்களது குழு கூட்டம் கூடி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டதும், பலத்த காற்று காரணமாக தடுமாறியது.
    • விமானியால் ஹெலிகாப்டரை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

    மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இன்று தேர்தல் பிரசாரம் செய்தவற்காக பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார். அமித் ஷா செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் புறப்பட்டதும், பலத்த காற்று காரணமாக ஹெலிகாப்டர் தடுமாறியது. சமநிலை இழந்து அங்கும் இங்குமாக அசைந்தது. விமானியால் ஹெலிகாப்டரை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

    இருந்த போதிலும், விமானி சாமர்த்தியமாக ஹெலிகாப்டரை தொடர்ந்து மேல் நோக்கி இயக்க முயன்றார். அவரது முயற்சியால் ஹெலிகாப்டர் கொஞ்சம் தூரம் மேலே சென்ற பிறகு சமநிலை பெற்று, சரியான முறையில் பறந்தது. இதனால் அமித் ஷா விபத்தில் இருந்து தப்பினார். ஹெலிகாப்டர் சமநிலை இழந்த அந்த சில நொடிகள் அப்பகுதியில் பரப்பப்பு ஏற்படுத்தியது.

    • அமித்ஷா எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது
    • அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து பாஜக இடஓதுக்கீடை ரத்து செய்து விடுவார்கள் என குறிப்பிட்டனர்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வரும் 7-ந் தேதி 3-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பட்டியல் சாதியினர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது.

    மேலும் அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததோடு பா.ஜனதா 400 இடங்கள் வெற்றி பெற்றால் இடஓதுக்கீடை ரத்து செய்து விடுவார்கள் என குறிப்பிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அமித்ஷாவின் பேச்சை திரித்து தவறான வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அமித் மாலவிகா கூறுகையில், தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான இடஓதுக்கீடு விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்துக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் வீடியோ மாற்றப்பட்டுள்ளது. காங்கிரசார் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பரப்பி வருகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனையடுத்து, அமித்ஷாவின் வீடியோவை திருத்தி வெளியிட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக கூறி தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

    மே 1-ம் தேதி ரேவந்த் ரெட்டி பயன்படுத்திய அனைத்து மின்னணு உபகரணங்களையும் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • எதிர்க்கட்சியினர் பிரதமர் பதவியை ஏலம் விடுவதில் மும்முரமாக உள்ளனர்
    • இந்தியா கூட்டணியில் ஒரு வருடத்திற்கு ஒரு பிரதமர் என்ற பார்முலாவை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்

    பீகாரின் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷா, "பாஜக 2014-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 30 ஆண்டுகளாக இந்த நாட்டில் ஸ்திரமற்ற அரசாங்கங்கள் இருந்தன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு வலுவான தலைமையைப் பெற்றுள்ளது, ஸ்திரத்தன்மையைப் பெற்றுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை மட்டுமல்ல, கொள்கைகளிலும் வளர்ச்சித் திட்டங்களிலும் ஸ்திரத்தன்மை பெற்றுள்ளது.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஸ்டாலின் பிரதமராக இருப்பார். அதேபோல மம்தா, சரத் பவாரும் தலா ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார்கள். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சமிருந்தால் ராகுல் பிரதமராவார்" என்று பேசியுள்ளார்.

    இதற்கு முன்னதாக, "எதிர்க்கட்சியினர் பிரதமர் பதவியை ஏலம் விடுவதில் மும்முரமாக உள்ளனர். இந்தியா கூட்டணி கட்சியினர் ஒரு வருடத்திற்கு ஒரு பிரதமர் என்ற பார்முலாவை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்" என்று பிரதமர் மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமித்ஷாவின் பேச்சை திரித்து தவறான வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.
    • மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வரும் 7-ந் தேதி 3-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பட்டியல் சாதியினர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது.

    மேலும் அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததோடு பா.ஜனதா 400 இடங்கள் வெற்றி பெற்றால் இடஓதுக்கீடை ரத்து செய்து விடுவார்கள் என குறிப்பிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அமித்ஷாவின் பேச்சை திரித்து தவறான வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அமித் மாலவிகா கூறுகையில், தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான இடஓதுக்கீடு விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்துக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் வீடியோ மாற்றப்பட்டுள்ளது. காங்கிரசார் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பரப்பி வருகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அமித்ஷாவின் வீடியோவை திருத்தி வெளியிட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அமல்படுத்த 400 இடங்களை கோருகிறது.
    • ஆர்எஸ்எஸ் திட்டங்களாக முத்தலாக், சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல், பொது சிவில் சட்டம், சிஏஏ ஆகியவற்றை செயல்படுத்துயுள்ளது.

    தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

    பா. ஜனதாவின் 400 இடங்களுக்கு மேல் என்ற இலக்கின் காரணம், அரசியலமைப்பை முற்றிலும் மாற்ற விரும்புவதற்காகத்தான். அதன் மூலம் அவர்கள் இடஒதுக்கீட்டை ஒழிக்கவும், இடஒதுக்கீடு இல்லாம இந்தியாவை உருவாக்கவும் விரும்புகிறார்கள்.

    பிரதமர் மோடி, அமித் ஷா நாட்டின் பூர்வீகக்காரர்களாகிய தலித்கள், எஸ்டி-கள் மற்றும் ஓபிசிகள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் செய்கிறார்கள். இந்த தேர்தலை சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கான களமாக மாற்ற அவர்கள் (பாஜக) முடிவு செய்துள்ளனர்.

    ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அமல்படுத்த 400 இடங்களை கோருகிறது. ஆர்எஸ்எஸ் திட்டங்களாக முத்தலாக், சட்டப்பிரிவு 370-ஐ நீக்குதல், பொது சிவில் சட்டம், சிஏஏ ஆகியவற்றை செயல்படுத்துயுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி-க்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகளாக்க பாஜக முயற்சிக்கிறது.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • ரெயில்வேஸ், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.
    • பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து, அதை பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே இன்று அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது மல்லியாகர்ஜூன கார்கே கூறியதாவது:-

    ரெயில்வேஸ், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை அவர்கள் விற்பனை செய்து வருகிறார்கள். மோடி, அமித் ஷா ஆகிய இருவரும விற்பனையாளர்கள். அப்படி என்றால் வாங்குபவர்கள் யார்? அதானி, அம்பானி ஆகிய இரண்டு வாங்குபவர்கள். இப்படித்தான் நாடு வளர்ச்சி அடையும்?.

    அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக இல்லை. பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து, அதை பணக்காரர்களுக்கு கொடுத்துள்ளார். 16 லட்சம் கோடி ரூபாயை கோடீஸ்வரர்களுக்காக தள்ளுபடி செய்துள்ளனர். ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு அவர்கள் எதுவும் கொடுக்கவில்லை.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • காலேஷ்வரம் திட்டம் அல்லது நில மோசடி தொடர்பாக டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் விசாரணை மேற்கொள்ளவில்லை.
    • டிஆர்எஸ்- காங்கிரஸ் கட்சிகள் கூட்டு வைத்துள்ளன.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷா தெலுங்கானா மாநிலத்தின் மேடக் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ரகுநந்தன் ராவை ஆதரித்து தேர்தல் பேரணியில் பேசினார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    இந்த குறைந்த நாட்களுக்குள் (தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த டிசம்பர் மாதத்தில் இருந்து) காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவை டெல்லியின் ஏடிஎம் ஆக்கியுள்ளது. காலேஷ்வரம் திட்டம் அல்லது நில மோசடி தொடர்பாக டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் விசாரணை மேற்கொள்ளவில்லை. டிஆர்எஸ்- காங்கிரஸ் கட்சிகள் கூட்டு வைத்துள்ளன. நீங்கள் வாக்களித்து பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக்கினால், அவர் ஊழலில் இருந்து தெலுங்கானாவை விடுவிப்பார்.

    இந்த முறை தெலுங்கானா மக்கள் பிரதமர் மோடியின் பக்கம் உள்ளனர். எல்லா இடங்களிலும் பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய தெலுங்கானா மக்கள் முடிவு செய்துள்ளனர். தெலுங்கானாவின் விரிவான வளர்ச்சிக்கு மத்தியில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • மக்களவை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரன்ட்ஃஆப் இந்தியாவின் ஆதரவை பெறுகிறது.
    • சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பெறுவதற்காக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அந்த அமைப்புக்கு ஆதரவாக பணியாற்று வருகின்றன.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா, கேரள மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அமித் ஷா கூறுகையில் "மக்களவை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரன்ட்ஃஆப் இந்தியாவின் ஆதரவை பெறுகிறது. சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பெறுவதற்காக இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அந்த அமைப்புக்கு ஆதரவாக பணியாற்று வருகின்றன.

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான எல்.டி.எஃப், காங்கிரஸ் தலைமையலான யு.டி.எஃப். பல வருடங்களாக இந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கப்பட்டது.

    காங்கிரஸ் கூட்டணி பாப்புலர் பிரன்ட்ஆஃப் இந்தியா வெளிப்படையாக ஆதரவு எனத் தெரிவித்துள்ளது. அதன்மீதான தடை குறித்து இடது சாரி கூட்டணி அமைதி காத்து வருகிறது. அது வேளையில் பிரதமர் மோடி இதுபோன்ற அமைப்புகளிடம் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக பணியாற்றி கொண்டிருக்கிறார்" என்றார்.

    ×