search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BRS"

    • டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா திகார் சிறையில் உள்ளார்.
    • முன்னாள் முதல் மந்திரி மகளான கவிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தெலுங்கானா மாநிலத்தின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த இரண்டு வழக்குகளில் கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் திகார் சிறையில் உள்ளார்.

    கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கைது செய்தது. இவர் மீதான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், கவிதா திகார் சிறையில் இன்று திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவரை டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விசாரணையில், தீவிர காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என தெரிய வந்தது.

    • ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.
    • மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது என்றார் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர்.

    ஐதராபாத்:

    பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து 7 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.எல்.சி.க்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்.பி. ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்கு மாறினர்.

    இந்நிலையில், பி.ஆர்.எஸ். கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாரதி ராஷ்டிர சமிதி கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப் போராட்டத்திற்குத் தயாராகி வருகிறோம்.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளோம். சமீபத்திய கட்சித் தாவல்களின் பிரதிபலிப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களான அனைவரையும் சந்திப்போம்.

    ஒரு பக்கம் அரசியல் சாசனத்தின் நகலைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. மறுபுறம் அவரது கட்சி அதை இழிவுபடுத்துகிறது. அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதுபோல் ஆஸ்கார் லெவலில் செயல்படுகிறார்.

    பா.ஜ.க மற்றும் காங்கிரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் கட்சி மாறுதலுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக மார்ச் 15-ம் தேதி கவிதா கைது செய்யப்பட்டார்.
    • தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    மதுபான லைசென்ஸ் பெற 100 கோடி ரூபாய் அளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாக சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

    இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி கவிதா கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் கவிதாவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை மே 29-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின், கோர்ட் பிடிவாரண்டுகளை பிறப்பித்தது. குற்றவாளிகளான இளவரசன், தாமோதர் மற்றும் அரவிந்த் சிங் ஆகிய 3 பேருக்கு கோர்ட் ஜாமின் வழங்கியது.

    அமலாக்கத்துறை விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்படாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் இவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கவிதாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், இன்று ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கவிதா நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா அவரது காவலை ஜூலை 18-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    • பிஆர்எஸ் கட்சி எம்எல்சி-க்கள் ஆறு பேர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
    • இதற்கு முன்னதாக ஆறு எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த பிறகு இரண்டு முறை சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தார். 3-வது முறையாக மீண்டும் முதல்வர் ஆவேன் என சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ரேவந்த் ரெட்டி முதல்வராக உள்ளார்.

    தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே பிஆர்எஸ் கட்சியில் இருந்து முக்கியமான தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பு வழங்கியது.

    தேர்தல் முடிந்த பிறகு ஆறு எம்.எல்.ஏ.-க்கள் பிஆர்எஸ் கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு ஆறு எம்.எல்.சி.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். ரேவந்த் ரெட்டி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.

    இந்த நிலையில் பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ கே.டி. ராமராவ் ராகுல் காந்தியை சாடியுள்ளார்.

    இது தொடர்பாக பிஆர்எஸ் கட்சி எம்.எல்.ஏ. கே.டி. ராமராவ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதில் கூறியிருப்பவதாவது:-

    பிஆர்எஸ் எம்.பி. கேசவ ராவ் ராஜினாமா செய்தபின், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதை நான் வரவேற்கிறேன்.

    கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் சார்பில் லோக்சபாவில் போட்டியிட்ட பிஆர்எஸ் எம்எல்ஏ பற்றி?

    காங்கிரஸ் கட்சிக்கு மாறிய ஆறு பிஆர்எஸ் எம்.எல்.ஏ.க்கள் பற்றி?

    ராகுல் காந்தி, இப்படியா நீங்கள் அரசியலமைப்பை நிலைநாட்டப் போகிறீர்கள்?

    பிஆர்எஸ் எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்க உங்களால் முடியவில்லை என்றால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின்படி 10 திருத்தங்களைச் செய்ய நீங்கள் உறுதி கூறியதை நாடு எப்படி நம்பும்?

    • தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 64 இடங்களை கைபற்றி ஆட்சியை பிடித்தது.
    • முதல்வர் ரேவந்த் ரெட்டி சால்வை அணிவித்தார்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸுக்கு மாறிய 6வது பிஆர்எஸ் எம்எல்ஏ செவெல்லா காலே யாதய்யா ஆவார். தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 64 இடங்களை கைபற்றி ஆட்சியை பிடித்தது. அதில் பிஆர்எஸ் கட்சி 39 இடங்களை மட்டுமே வென்று தோல்வி அடைந்தது.

    இந்நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், அதன் எம்.எல்.ஏ.வான செவெல்லா காலே யாதய்யா இன்று ஆளும் காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி சால்வை அணிவித்தார். அவருடன் தெலுங்கானா கட்சி விவகாரங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ்முன்சி மற்றும் பிற தலைவர்கள் முன்னிலையில் யாதய்யா ஆளும் கட்சியில் இணைந்தார் என்று தெலுங்கானா காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    • காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திரசேகர ராவ் இழிவாக பேசியுள்ளார் என்று காங்கிரஸ் தேர்தல் ஆணையதிடம் புகார் அளித்தார்
    • சந்திரசேகர ராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 5-ம் தேதி தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் பி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது.

    இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திரசேகர ராவ் இழிவாக பேசியுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ஜி நிரஞ்சன் தேர்தல் ஆணையதிடம் புகார் அளித்தார்.

    இந்த புகார் தொடர்பாக சந்திரசேகர ராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த புகாரின் விசாரணையில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் காங்கிரஸ் தொண்டர்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் என்று தேர்தல் ஆணையம் கண்டறிந்தது.

    இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இன்று இரவு 8 மணி முதல் இந்த தற்காலிக தடை அமலுக்கு வருகிறது.

    இந்த 48 மணி நேர தடையில் பொதுக் கூட்டங்கள், பொது ஊர்வலங்கள், பொது பேரணிகள், நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்கள், ஊடகங்களில் (மின்னணு, அச்சு, சமூக ஊடகங்கள்) பகிரங்கமாக பேச கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தல் ஆணையம், அரசியலமைப்பின் 324 வது பிரிவை மேற்கோள் காட்டி இந்த தடையை விதித்துள்ளது.

    • தெலுங்கானா தனி மாநிலம் என்பது என்னுடைய கனவு.
    • தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

    பிஆர்எஸ் கட்சியின் தலைவரும், தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் கூறியதாவது:-

    தெலுங்கானா தனி மாநிலம் என்பது என்னுடைய கனவு. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது மக்கள் உணர்ந்துள்ளனர். காங்கிரஸ் மீது பயங்கர கோபமாக உள்ளனர். நாங்கள் 17 தொகுதிகளில் குறைந்தது 12 இடங்களிலாவது வெற்றி பெறுவோம்.

    இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பற்றி கூறுவது, மிகவும் முன் செயலாகும். தேர்தல் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி முழு மெஜாரிட்டியை பெறாது. பா.ஜனதா 272 இடங்களை பிடிக்காது.

    இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

    • காலேஷ்வரம் திட்டம் அல்லது நில மோசடி தொடர்பாக டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் விசாரணை மேற்கொள்ளவில்லை.
    • டிஆர்எஸ்- காங்கிரஸ் கட்சிகள் கூட்டு வைத்துள்ளன.

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான அமித் ஷா தெலுங்கானா மாநிலத்தின் மேடக் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ரகுநந்தன் ராவை ஆதரித்து தேர்தல் பேரணியில் பேசினார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    இந்த குறைந்த நாட்களுக்குள் (தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த டிசம்பர் மாதத்தில் இருந்து) காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவை டெல்லியின் ஏடிஎம் ஆக்கியுள்ளது. காலேஷ்வரம் திட்டம் அல்லது நில மோசடி தொடர்பாக டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் விசாரணை மேற்கொள்ளவில்லை. டிஆர்எஸ்- காங்கிரஸ் கட்சிகள் கூட்டு வைத்துள்ளன. நீங்கள் வாக்களித்து பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமர் ஆக்கினால், அவர் ஊழலில் இருந்து தெலுங்கானாவை விடுவிப்பார்.

    இந்த முறை தெலுங்கானா மக்கள் பிரதமர் மோடியின் பக்கம் உள்ளனர். எல்லா இடங்களிலும் பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய தெலுங்கானா மக்கள் முடிவு செய்துள்ளனர். தெலுங்கானாவின் விரிவான வளர்ச்சிக்கு மத்தியில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • பிஆர்எஸ் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • வரும் 23-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா வீட்டில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இந்நிலையில், பி.ஆர்.எஸ். தலைவர் கே.கவிதாவை வரும் 23-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டுள்ளார்.

    • மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டனர்.
    • கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் ஆம் ஆத்மி ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகினர்.

    இதற்கிடையே, தெலுங்கானா முதல் மந்திரியும் பாரத ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான கே.சந்திரசேகரராவ் மகள் கவிதா மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை அதிகாரிகளும் கவிதாவிடம் 3 முறை விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரியின் மகளும், பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.சி.யுமான கவிதாவை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளனர் என தகவல் வெளியானது.

    இதையடுத்து, அவரது வீட்டின் முன் பி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அக்கட்சி எம்.எல்.ஏ. ஹரீஷ் ராவ் அங்கு வந்து தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கவிதா வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பி.ஆர்.எஸ். கட்சி எம்.பி. உள்பட 5 பேர் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளனர்.
    • ஒரே நாளில் எம்.பி. உள்பட 5 பேர் பா.ஜ.க.வில் இணைந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநிலத்தின் நகர்கர்னூல் தொகுதி பி.ஆர்.எஸ். கட்சி எம்.பி.யான பொதுகண்டி ராமுலு இன்று அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் டெல்லியில் பா.ஜ.க. அலுவலகத்தில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

    அவருடன் லோக்நாத் ரெட்டி, பொதுகண்டி பரத் பிரசாத், ஜக்கா ரகுநந்தன் ரெட்டி, மெண்டப்பள்ளி புருஷோத்தம் ரெட்டி ஆகியோரும் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

    ஒரே நாளில் பி.ஆர்.எஸ். கட்சி எம்.பி. உள்பட 5 பேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பண்ணை வீட்டில் கீழே விழுந்த கேசிஆருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது
    • ஜெகன் மோகன் ரெட்டியை கேசிஆர் இல்லத்தில் கேடிஆர் வரவேற்றார்

    கடந்த 2022 நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கானாவின் முன்னாள் முதல்வரும், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (BRS) கட்சியின் தலைவருமான கே சந்திரசேகர் ராவ் (KCR) தோல்வியடைந்தார்.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே 69 வயதான கேசிஆர், ஐதராபாத் நகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் கீழே விழுந்தார். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் பிரபல யசோதா மருத்துவமனைக்கு (Yashoda Hospital) மாற்றப்பட்டார்.

    அங்கு பல்வேறு பரிசோதனைகளில் கேசிஆருக்கு இடுப்பெலும்பில் முறிவு இருப்பதாக கண்டறியப்பட்டு முழு இடது இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. பின் நடை பயிற்சி மேற்கொண்ட அவருக்கு வலி வெகுவாக குறைந்து அனைத்து துறை மருத்துவ கண்காணிப்பில் சில நாட்கள் இருந்தார்.

    அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து கேசிஆர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனது வீட்டிலேயே ஓய்வெடுக்கிறார்.

    இந்நிலையில், ஓய்வில் உள்ள கேசிஆர்-ஐ ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவரது பஞ்சாரா ஹில்ஸ் (Banjara Hills) இல்லத்தில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

    முன்னதாக முதல்வர் ஜெகன் மோகனை பிஆர்எஸ் கட்சியின் தற்போதைய தலைவர் கேடி ராமா ராவ், எம்பி ஜே சந்தோஷ் ராவ் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

    விஜயவாடாவிற்கு திரும்பும் முன், கேசிஆர் இல்லத்தில் ஜெகன் மோகன் உணவருந்த உள்ளார் என தெரிகிறது.

    ×