என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rama Rao"

    • சந்திரசேகர ராவ் கடவுள் போன்றவர், இப்போது அவரை சாத்தான்கள் சூழ்ந்துள்ளன
    • காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சொந்தக் கட்சியை உருவாக்கப் போவதாக செய்தி பரவியது.

    2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து தொடர்ந்து 9 வருடங்கள் முதலமைச்சராக இருந்தவர் சந்திரசேகர ராவ். இவரின் கட்சி பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்).

    கடந்த வாரம் இந்த கட்சியின் வெள்ளி விழா நடைபெற்றது. எம்எல்சியாக உள்ள சந்திரசேகர ராவின் மகள் கவிதா அப்போது தந்தைக்கு எழுதிய கடிதம் பொது வெளியில் கசிந்தது. அதில் சந்திரசேகர ராவ் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கவில்லை என கவிதா அதிருப்தி தெரிவித்தார்.

    இதுகுறித்த பேட்டியில், சந்திரசேகர ராவ் கடவுள் போன்றவர், இப்போது அவரை சாத்தான்கள் சூழ்ந்துள்ளன என்று கவிதா பேசினார். அவர் எம்.பியாக உள்ள தனது அண்ணன் கே.டி.ராமா ராவை மறைமுகமாக விமர்சித்ததாக ஊகங்கள் எழுந்தன.

    இந்நிலையில் நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த கவிதா, 'கட்சியில் உள்ள சில தலைவர்கள் பிஆர்எஸ்-ஐ பாஜகவுடன் இணைக்க விரும்புகிறார்கள். நான் சிறையில் இருந்தபோது கட்சியில் இதுபோன்ற விவாதம் நடந்தது. நான் சிறையில் இருந்திருக்கலாம், ஆனால் கட்சியை பாஜகவுடன் இணைக்கக்கூடாது என்று நான் சொன்னேன்' என்று தெரிவித்தார்.

    மேலும் தந்தை சந்திரசேகர் ராவை தன்னிடமிருந்து பிரிக்க வேலைகள் நடந்து வருவதாகவும் கவிதா குற்றம்சாட்டினார். அதேசமயம் ஆட்சியில் உள்ள காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சொந்தக் கட்சியை உருவாக்கப் போவதாக வந்த செய்தியை கவிதா மறுத்தார்.

    கவிதா தொடர்ந்து போர் கொடி தூக்கி வருவது பிஆர்எஸ் கட்சி மற்றும் அண்ணன், தங்கை இடையே பூசலை அதிகரித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஆதாயம் அளித்ததாக கூறப்படும் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்களுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கவிதா கடந்த வருடம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பதவியேற்பதற்கு முன்பே அவர் ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார்.
    • முதல்வராக பதவியேற்றதிலிருந்து, அதை பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியாக விரிவுபடுத்தியுள்ளார்.

    தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பெயர் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய பிஆர்எஸ் கட்சியின் செயல்தலைவர் கே.டி. ராம ராவ், தெலுங்கானாவை காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம்.ஆக மாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், "தெலுங்கானாவின் நிர்வாகம் ஊழல் மற்றும் கமிஷன் ஒப்பந்தங்களால் நிறைந்துள்ளது என்ற பிஆர்எஸ் குற்றச்சாட்டை தற்போது மத்திய அமைப்பான அமலாக்கத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

    தெலுங்கானாவின் ஊழல் மோசடியை அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. பதவியேற்பதற்கு முன்பே அவர் ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினார். முதல்வராக பதவியேற்றதிலிருந்து, அதை பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியாக விரிவுபடுத்தியுள்ளார்" என்றார்.

    தனியார் நிறுவனத்திற்கு நன்கொடை வழங்கும்படி கேட்டதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மறைந்த அகமது படேல், பவன் பன்சால் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களாக குறிப்பிடப்படவில்லை.

    குற்றப்பத்திரிகையில் ரேவந்தின் பெயர் இருப்பதால் மத்திய அரசு இப்போது நடவடிக்கை எடுக்குமா அல்லது முந்தைய ஊழல்களைப் போலவே அவரைப் பாதுகாப்பார்களா? என்று ராம ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • கிஷன் ரெட்டி ஆம்பர்பேட்டை தொகுதிக்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை.
    • ஓட்டு போட்ட மக்களே காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிவார்கள்.

    தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகராவின் மகன் கே.டி.ராமராவ். இவர் பி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்து வருகிறார். பி.ஆர்.எஸ் கட்சியின் பொது கூட்டத்தில் கே.டி.ராமாராவ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    500 ரூபாய்க்கு கியாஸ் சிலிண்டர் தருவதாக வாக்குறுதி கொடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே தருவதாக ஏமாற்றி வருகின்றனர்.

    காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கொடுத்த 6 வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி நசுக்கப்படுவது உறுதி. ஓட்டு போட்ட மக்களே காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிவார்கள்.

    கடந்த 5 ஆண்டுகளாக மத்திய மந்திரியாக உள்ள கிஷன் ரெட்டி ஆம்பர்பேட்டை தொகுதிக்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை.

    மக்களவைத் தேர்தலில் எந்த வளர்ச்சியும் இல்லாமல் மோடியின் முகத்தைக் காட்டி ஓட்டு கேட்பது வெட்கக்கேடானது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பொதுக்கூட்டத்திற்கு வந்த ராமாராவிற்கு ஐதராபாத் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரோஹித் தலைமையில் காங்கிரசார் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காங்கிரசாரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    • தேசிய விருது பெற்ற நடிகரின் கைது, ஆட்சியாளர்களின் பாதுகாப்பின்மையின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.
    • இந்த விசயத்தில் உண்மையிலேயே தோல்வியடைந்தது யார்?.

    "புஷ்பா 2" படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. அப்படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜூன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சிக்கடபல்லியில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்ப்பதற்காக சென்றார்.

    அப்போது அல்லு அர்ஜூனை நேரில் பார்ப்பதற்காக அதிக அளவில் கூட்டம் கூடியது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குழந்தை காயம் அடைந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை திடீரென அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரை விசாரணை நடத்துவதற்கான அழைத்து சென்றனர். பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் இந்த கைது தேவையற்றது என பி.ஆர்.எஸ். தலைவர் ராம ராவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பி.ஆர்.எஸ். செயல்தலைவர் ராம ராவ் கூறியதாவது-

    தேசிய விருது பெற்ற நடிகரின் கைது, ஆட்சியாளர்களின் பாதுகாப்பின்மையின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும். அல்லு அர்ஜுனை பொதுவான குற்றவாளியாக நடத்துவது தேவையற்றது மற்றும் பொருத்தமற்றது.

    உயிரிழந்த பெண்ணிற்கான நான் அனுதாபம் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இந்த விசயத்தில் உண்மையிலேயே தோல்வியடைந்தது யார்?. நேரடியாகப் பொறுப்பேற்காத ஒரு விஷயத்திற்காக அல்லு அர்ஜுனை ஒரு சாதாரண குற்றவாளியைப் போல நடத்துவது தேவையற்றது.

    இவ்வாறு ராம ராவ் தெரிவித்துள்ளார்.

    • வெளிநாட்டு பணம் அனுமதி இல்லாமல் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
    • இது தொடர்பாக தெலுங்கான ஊழல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது, சந்திரசேகர ராவ் மகன் ராம ராவ் அமைச்சராக இருந்தார். தற்போது பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவராக உள்ளார்.

    தெலுங்கானாவில் "பார்முலா இ" கார்பந்த பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் ராம ராவ் முன்னெடுத்தார். அப்போது கார் நிறுவனத்திற்கு வெளிநாட்டு பணமாக 55 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

    பின்னர், சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றபின் "பார்முலா இ" கார் பந்தயம் நடத்துவது தொடர்பாக பணம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக ராம ராவ் மீது குற்றம்சாட்டப்பட்டது. அனுமதி பெறாமல் வெளிநாட்டு பணம் வழங்கப்பட்டது மற்றும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநில ஊழல் தடுப்பு போலீசார் கடந்த 19-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராம ராவ் முதன்மையை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அரவிந்த் குமார், ஓய்வு பெற்ற அதிகாரி பிஎல்என் ரெட்டி ஆகியோர் முறையே 2 மற்றும் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தனது மீது போடப்பட்ட எஃப்ஐஆர்-ஐ ரத்து செய்ய வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் ராம ராவ் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் தன்னை போலீசார் கைது செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    அப்போது நீதிமன்றம் கைது செய்ய தடைவிதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ராம ராவை கைது செய்ய விதித்த தடையை மேலும் நீடித்து உத்தரவிட்டது. அத்துடன் எஃப்ஐஆர்-ஐ ரத்து செய்யக் கோரிய ராம ராவ் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது.

    இன்றைய விசாரணையின்போது வணிக விதிகள் மற்றும் தேவையான ஒப்புதல்களைப் பின்பற்றாமல் ஃபார்முலா இ அமைப்புக்கு பணம் செலுத்தப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில் வழக்கில் எந்த குற்றமும் இல்லை என்று ராம ராவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.

    ×