என் மலர்
நீங்கள் தேடியது "Kavita"
- சந்திரசேகர ராவ் கடவுள் போன்றவர், இப்போது அவரை சாத்தான்கள் சூழ்ந்துள்ளன
- காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சொந்தக் கட்சியை உருவாக்கப் போவதாக செய்தி பரவியது.
2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து தொடர்ந்து 9 வருடங்கள் முதலமைச்சராக இருந்தவர் சந்திரசேகர ராவ். இவரின் கட்சி பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்).
கடந்த வாரம் இந்த கட்சியின் வெள்ளி விழா நடைபெற்றது. எம்எல்சியாக உள்ள சந்திரசேகர ராவின் மகள் கவிதா அப்போது தந்தைக்கு எழுதிய கடிதம் பொது வெளியில் கசிந்தது. அதில் சந்திரசேகர ராவ் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கவில்லை என கவிதா அதிருப்தி தெரிவித்தார்.
இதுகுறித்த பேட்டியில், சந்திரசேகர ராவ் கடவுள் போன்றவர், இப்போது அவரை சாத்தான்கள் சூழ்ந்துள்ளன என்று கவிதா பேசினார். அவர் எம்.பியாக உள்ள தனது அண்ணன் கே.டி.ராமா ராவை மறைமுகமாக விமர்சித்ததாக ஊகங்கள் எழுந்தன.
இந்நிலையில் நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த கவிதா, 'கட்சியில் உள்ள சில தலைவர்கள் பிஆர்எஸ்-ஐ பாஜகவுடன் இணைக்க விரும்புகிறார்கள். நான் சிறையில் இருந்தபோது கட்சியில் இதுபோன்ற விவாதம் நடந்தது. நான் சிறையில் இருந்திருக்கலாம், ஆனால் கட்சியை பாஜகவுடன் இணைக்கக்கூடாது என்று நான் சொன்னேன்' என்று தெரிவித்தார்.
மேலும் தந்தை சந்திரசேகர் ராவை தன்னிடமிருந்து பிரிக்க வேலைகள் நடந்து வருவதாகவும் கவிதா குற்றம்சாட்டினார். அதேசமயம் ஆட்சியில் உள்ள காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சொந்தக் கட்சியை உருவாக்கப் போவதாக வந்த செய்தியை கவிதா மறுத்தார்.
கவிதா தொடர்ந்து போர் கொடி தூக்கி வருவது பிஆர்எஸ் கட்சி மற்றும் அண்ணன், தங்கை இடையே பூசலை அதிகரித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஆதாயம் அளித்ததாக கூறப்படும் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்களுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கவிதா கடந்த வருடம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- 2010-ல் ராஜ்யசபாவால் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-ல் கூட மக்களவையில் ஒப்புதல் பெறவில்லை.
- பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக டிசம்பர் மாதம் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளேன்.
திருப்பதி:
தெலுங்கானா முதல்அமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்.எல்.சி.யாக உள்ளார். இவர் பெண்கள் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பி.ஆர்.அம்பேத்கர், சட்ட மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று வாதிட்டார், ஆனால் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்தப் பிரச்சினையை போதுமான அளவு கவனிக்கவில்லை. 2010-ல் ராஜ்யசபாவால் அங்கீகரிக்கப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-ல் கூட மக்களவையில் ஒப்புதல் பெறவில்லை.
அறுதிப் பெரும்பான்மையை வைத்துள்ள நரேந்திர மோடி அரசு ஏன் மசோதாவை நிறைவேற்றவில்லை. "ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் எனது வேண்டுகோள் என்ன வென்றால், அவர்கள் இதை பொது பிரச்சினை யாக பார்க்க வேண்டும்.
இது ஒட்டுமொத்த பெண்களுக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.இது நம் நாட்டில் உள்ள 70 கோடி பெண்களுக்கும் பொருந்தும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக டிசம்பர் மாதம் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளேன்.
போராட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, பாஜகவின் ஸ்மிருதி , டிகே அருணா ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலை அமைக்க முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அடிக்கல் நாட்டினார்.
இதற்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி சிலை வைக்க அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த இடத்தில் ராஜீவ் காந்தி சிலையை அமைக்க கூடாது. தெலுங்கானா அன்னை சிலை மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தை குறிக்கிறது. எனவே தலைமைச் செயலக வளாகத்தில் ராஜீவ் காந்தி சிலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
அந்த இடத்தில் தெலுங்கானா அன்னை சிலையை வைக்க வேண்டும் என சந்திரசேகர ராவின் மகள் கவிதா வலியுறுத்தி உள்ளார்.
- ஏ.ஆர். ரகுமானின் 'சிங்கப் பெண்ணே' பாடல் வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் கவிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மகளிர் தின விழாவையொட்டி சிறந்த மகளிருக்கான விருது வழங்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய மகளிர் கபடி பயிற்சியாளர் கவிதா செல்வராஜுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கவிதா பேசியதாவது :-
கடந்த 2013-ஆம் ஆண்டு கபடி போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்கள் பெற்றேன். மேலும் புகழின் உச்சியில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்டதால் கபடி விளையாட்டை தொடராமல் விட்டு விட்டேன். தொலைக்காட்சியில் கூட விளையாட்டை
பார்க்க மாட்டேன்., எல்லாவற்றையும் மறந்து இருந்தேன். 2019- ல் வெளிவந்த 'பிகில்' படத்தை ஒரு தியேட்டரில் பார்த்த போது ஏ.ஆர். ரகுமானின் 'சிங்கப் பெண்ணே' பாடல் வரிகள் என்னை ரொம்பவும் கவர்ந்தது.
அந்த பாடல் வரிகள் எனக்கு மேலும் ஊக்கத்தை அளித்தது. மீண்டும் கபடி விளையாட்டுக்கு சென்று சாதிக்க வேண்டும்., எனது திறமைகளை கபடி உலகில் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன்.
அதனை எனது கணவர், மாமியாரிடம் சொன்னேன். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன்பின் இந்திய மகளிர் கபடி பயிற்சியாளர் பதவி கிடைத்தது. அதன் மூலம் மகளிர் கபடி குழுவினருக்கு பயிற்சியளித்து வருகிறேன்.
எனது பயிற்சி மூலம் மகளிர் கபடி குழுவுக்கு பல பரிசுகள் கிடைத்தன. இதற்கு காரணம் 'சிங்கப்பெண்ணே' பாடல் தான். அந்த பாடல் எனக்கு ஒரு முன் உதாரணமாக அமைந்தது. இந்த பாடலை கொடுத்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு மிக்க நன்றி. இந்த தகவல் ஏ.ஆர் ரகுமானை சென்றடைய வேண்டும் என்று கூறினார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. அதனை பார்த்தஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையத்தில் கவிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் 'உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி கவிதா.. நீங்கள் உயர்வடைந்து கொண்டே இருங்கள் என அவர் பதிலளித்து உள்ளார்.
Thank you for your kind words Kavitha ..keep rising?????? https://t.co/G1s5xu86RO
— A.R.Rahman (@arrahman) March 11, 2024