என் மலர்
நீங்கள் தேடியது "ராமா ராவ்"
- சந்திரசேகர ராவ் கடவுள் போன்றவர், இப்போது அவரை சாத்தான்கள் சூழ்ந்துள்ளன
- காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சொந்தக் கட்சியை உருவாக்கப் போவதாக செய்தி பரவியது.
2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவானதில் இருந்து தொடர்ந்து 9 வருடங்கள் முதலமைச்சராக இருந்தவர் சந்திரசேகர ராவ். இவரின் கட்சி பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்).
கடந்த வாரம் இந்த கட்சியின் வெள்ளி விழா நடைபெற்றது. எம்எல்சியாக உள்ள சந்திரசேகர ராவின் மகள் கவிதா அப்போது தந்தைக்கு எழுதிய கடிதம் பொது வெளியில் கசிந்தது. அதில் சந்திரசேகர ராவ் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கவில்லை என கவிதா அதிருப்தி தெரிவித்தார்.
இதுகுறித்த பேட்டியில், சந்திரசேகர ராவ் கடவுள் போன்றவர், இப்போது அவரை சாத்தான்கள் சூழ்ந்துள்ளன என்று கவிதா பேசினார். அவர் எம்.பியாக உள்ள தனது அண்ணன் கே.டி.ராமா ராவை மறைமுகமாக விமர்சித்ததாக ஊகங்கள் எழுந்தன.
இந்நிலையில் நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த கவிதா, 'கட்சியில் உள்ள சில தலைவர்கள் பிஆர்எஸ்-ஐ பாஜகவுடன் இணைக்க விரும்புகிறார்கள். நான் சிறையில் இருந்தபோது கட்சியில் இதுபோன்ற விவாதம் நடந்தது. நான் சிறையில் இருந்திருக்கலாம், ஆனால் கட்சியை பாஜகவுடன் இணைக்கக்கூடாது என்று நான் சொன்னேன்' என்று தெரிவித்தார்.
மேலும் தந்தை சந்திரசேகர் ராவை தன்னிடமிருந்து பிரிக்க வேலைகள் நடந்து வருவதாகவும் கவிதா குற்றம்சாட்டினார். அதேசமயம் ஆட்சியில் உள்ள காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சொந்தக் கட்சியை உருவாக்கப் போவதாக வந்த செய்தியை கவிதா மறுத்தார்.
கவிதா தொடர்ந்து போர் கொடி தூக்கி வருவது பிஆர்எஸ் கட்சி மற்றும் அண்ணன், தங்கை இடையே பூசலை அதிகரித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஆதாயம் அளித்ததாக கூறப்படும் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்களுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கவிதா கடந்த வருடம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆம் ஆத்மி வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது
- பாஜகவுக்காக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்
டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குக் கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில கூட வெற்றி பெறவில்லை.
10 வருடங்களாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி தோல்வியை தழுவியுள்ளது. பல தொகுதிகளில் பாஜகவிடம் தோல்வி அடைந்த ஆம் ஆத்மி வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஒருவேளை ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தால் மீண்டும் டெல்லியில் ஆட்சியை பிடித்திருக்கலாம் என்று தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரங்கள் நமக்கு கூறுகின்றன.
இந்நிலையில் டெல்லி தேர்தலில் பாஜக வெற்றிக்கு ராகுல் காந்தியை வாழ்த்தியுள்ளார் கேடி ராமா ராவ்.
காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநில எதிர்க்கட்சியான பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த கேடி ராமா ராவ் கூறுகையில், ராகுல் காந்தி பாஜக மற்றும் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர்.
பிரதமர் மற்றும் பாஜக கையில் உள்ள ராகுல் இப்போது செய்துகொண்டிருப்பதை தொடர்ந்து செய்து வருவது கே.சி.ஆர். கெஜ்ரிவால், மம்தா, பினராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் போன்ற வலுவான மாநில தலைவர்களை பலவீனப்படுத்துகிறது.
டெல்லி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, குறைந்தபட்சம் இப்போதாவது காங்கிரஸ், அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதையும், நாட்டிற்கு, குறிப்பாக பாஜகவைத் தடுத்து நிறுத்தும் வலுவான மாநில சக்திகளுக்கு ஏற்படுத்திய சேதத்தையும் உணர்ந்துள்ளது என்று கூறினார்.
மேலும் "பாஜகவுக்காக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்!" என்று தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.







