search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஆர்எஸ்"

    • குல்தீப் யாதவ் ஓவரில் பட்லர் எல்பிடபிள்யூ ஆவார்.
    • இதற்கு களநடுவர் அவுட் இல்லை என தெரிவித்து விடுவார்.

    ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கேப்பிட்டல்ஸ் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி ரியான் பராக்கின் அதிரடியால் 185 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து விளையாடிய டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிபட்டியலில் 2-வது இடத்தை ராஜஸ்தான் அணி பிடித்துள்ளது.

    முன்னதாக இந்த போட்டியின் போது குல்தீப் யாதவ் ஓவரில் பட்லர் எல்பிடபிள்யூ ஆவார். அதற்கு களநடுவர் அவுட் இல்லை என தெரிவிப்பார். இதனை பார்த்த கேப்டன் ரிஷப் யோசித்துக் கொண்டே வருவார். பந்து வீசிய குல்தீப் யாதவ் வேகமாக ரிஷப் பண்டை நோக்கி வந்து ரிவ்யூ எடுங்கள் என கூறியது மட்டுமல்லாமல் அவரது கையை பிடித்து ரிவ்யூ சைகையை காட்டுவார். 

    உடனே ரிஷப் பண்ட் சிரித்துக் கொண்டே ரிவ்யூ எடுப்பார். பந்து வீச்சாளர் கேப்டனிடம் சென்று ரீவ்யூ எடுங்கள் என்று சொல்வது இயல்பு. ஆனால் குல்தீப் யாரும் செய்யாத வகையில் இப்படி ஒரு ரிவ்யூவை எடுத்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    சந்தேகத்துடன் 3-வது நடுவரிடன் சென்றது. இறுதியில் அது 3-வது நடுவரால் அவுட் என வந்தது. இதனால் ரிஷப் பண்ட் மகிழ்ச்சியடைந்தார். இந்த தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதற்கு ரசிகர்கள் கேப்டனை கட்டாயப்படுத்தி ரிவ்யூ எடுக்க வைக்குராங்க என்றும் சிலர் ஐபிஎல் வரலாற்றில் இப்படி ரிவ்யூ-வை நான் பார்த்ததில்லை எனவும் காமெடியாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • ஜடேஜா இந்தப் போட்டியில் 5 விக்கெட் எடுத்து, தன் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து இருக்கிறார்.
    • டிஆர்எஸ் முடிவில் இந்திய அணி ஏமாற்று வேலை செய்து விக்கெட் எடுத்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா குற்றச்சாட்டி உள்ளார்.

    கொல்கத்தா:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்த போது ஜடேஜா வீசிய பந்தில் வான் டேர் டுசென் டிஆர்எஸ் ரிவ்யூ கேட்கப்பட்டு அவுட் ஆனார். முதலில் ஜடேஜா வீசிய பந்து அவர் காலில் பட்ட போது அவுட் கேட்கப்பட்டது. அப்போது நடுவர் அவுட் தர மறுத்து விட்டார். பின்னர் ஜடேஜா ரிவ்யூ கேட்குமாறு கேப்டன் ரோகித்திடம் கேட்டார். அதன் பின் ரிவ்யூ கேட்கப்பட்டது. அப்போது ரீப்ளேவில் பந்து லெக் திசையில் வருவது போல இருந்தது. ஆனால், மிடில் ஸ்டம்ப்பில் பந்து படுவதாக ரீப்ளேவில் காட்டப்பட்டது.

    இந்நிலையில் டிஆர்எஸ் முடிவில் இந்திய அணி ஏமாற்று வேலை செய்து விக்கெட் எடுத்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா குற்றச்சாட்டி உள்ளார்.

    இது குறித்து ஹசன் ராசா கூறியதாவது:-

    ஜடேஜா இந்தப் போட்டியில் 5 விக்கெட் எடுத்து, தன் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து இருக்கிறார். இங்கே நாம் டிஆர்எஸ் கேட்கப்பட்டது பற்றி பேச வேண்டும். டுசென் பேட்டிங் செய்யும் போது, பந்து லெக் ஸ்டம்ப் திசையில் பிட்ச் ஆகி மிடில் ஸ்டம்ப்பில் படுகிறது. அது எப்படி சாத்தியம்? அந்த பந்து லைனில் பிட்ச் ஆகி லெக் ஸ்டம்ப் நோக்கி தான் போனது. எல்லோரையும் போல நானும் என் கருத்தை சொல்கிறேன். இதை நாம் கவனிக்க வேண்டும். டிஆர்எஸ்-இல் ஏமாற்று வேலை நடந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த சீசனில் முதன்முதலாக டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்பட உள்ளது.
    • இந்த முறை டிஜிட்டல் தளத்திலும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 7-வது சீசன் வருகிற ஜூன் 12-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஜூலை 12-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிகள் அனைத்தும் கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லையில் நடக்கிறது.

    கோவையில் வருகிற 12-ந்தேதி நடக்கும் முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், ஐ டிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி உள்பட கோவையில் 6 ஆட்டங்களும், திண்டுக்கல்லில் 7 ஆட்டங்களும், சேலத்தில் 8 ஆட்டங்களும் நடத்தப்படுகிறது. நெல்லையில் 9 போட்டிகள் நடத்தப்படுகிறது.

    நெல்லையில் ஜூலை 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திருச்சி அணியும் மோதுகின்றன.

    இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் கழக உதவி செயலாளர் ஆர்.என்.பாபா நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிராமப்புறங்களில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. டி.என்.பி.எல். போட்டியின் ப்ளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டி உள்பட 32 போட்டிகள் 25 நாட்களில் நடத்தப்படுகிறது. குவாலிபையர்- 1 மற்றும் எலிமினேட்டர் சுற்று சேலத்திலும், குவாலிபையர்- 2 மற்றும் இறுதிப்போட்டி நெல்லையிலும் நடத்தப்படுகிறது.

    இந்த சீசனில் முதன்முதலாக டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்பட உள்ளது. போட்டிக்கான சாதாரண டிக்கெட் ரூ.200-க்கும், உணவு வசதியுடன் கூடிய டிக்கெட் ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 90 சதவீதம் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. கவுண்டர்களில் குறைந்தபட்ச டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முறை டிஜிட்டல் தளத்திலும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    மழையினால் நாக்-அவுட் மற்றும் இறுதிப்போட்டிகள் தடைபடாமல் இருக்க ரிசர்வ் டே முறை வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளை போல் ரிசர்வ் டே வழிமுறையும் இந்த ஆண்டு முதல் கடைபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை டி.ஆர்.எஸ். நடைமுறையும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போட்ஸ் 1 ஹச்.டி. ஆகிய சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நெல்லை கிரிக்கெட் கழக தலைவர் சரவணமுத்து, செயலாளர் ராம்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நேற்றைய ஆட்டத்தில் டெல்லி வீராங்கனை டி.ஆர்.எஸ்.-ன்படி நோ-பால் கேட்டு அப்பீல் செய்ததை பார்க்க முடிந்தது.
    • இதே போல் இரவில் நடந்த உ.பி. வாரியர்ஸ்- குஜராத் இடையிலான ஆட்டத்தில் கடைசி ஓவரில் இரண்டு முறை வைடுக்கு டி.ஆர்.எஸ். கேட்கப்பட்டது.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் நடுவர் வழங்கும் வைடு, நோ-பால் தொடர்பான தீர்ப்பில் ஆட்சேபனை இருந்தால் அதை எதிர்த்து டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    நேற்றைய டெல்லி-பெங்களூரு இடையிலான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்கட் இடுப்பு உயரம் அளவுக்கு வீசிய பந்துக்கு டெல்லி வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் டி.ஆர்.எஸ்.-ன்படி நோ-பால் கேட்டு அப்பீல் செய்ததை பார்க்க முடிந்தது.

    ரீப்ளேவுக்கு பிறகு அது நோ-பால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதே போல் இரவில் நடந்த உ.பி. வாரியர்ஸ்- குஜராத் இடையிலான ஆட்டத்தில் கடைசி ஓவரில் இரண்டு முறை வைடுக்கு டி.ஆர்.எஸ். கேட்கப்பட்டது.

    20 ஓவர் வடிவிலான லீக் கிரிக்கெட்டில் வைடு, நோ-பாலுக்கு டி.ஆர்.எஸ். பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    ×