search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்எஸ்எஸ்"

    • ரகிப் ஹமீத் நாயக் எனும் ஊடகவியலாளரால் தொடங்கப்பட்டது இண்டியா ஹேட் லேப்
    • பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் 11 சதவீத நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்றனர்

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை மையமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம், "இண்டியா ஹேட் லேப்" (India Hate Lab).

    ரகிப் ஹமீத் நாயக் (Raqib Hameed Naik) எனும் ஊடகவியலாளரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரை கொண்டு சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்ச்சி பேச்சுக்களையும், பொய் செய்திகளையும் பொதுவெளியில் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    கடந்த வருடம் இந்தியாவில் பதிவான வெறுப்புணர்ச்சியை தூண்டும் பேச்சுக்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த பதிவை தற்போது வெளியிட்டிருக்கிறது.

    அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

    2023ல் இஸ்லாமியர்களுக்கு எதிரான 668 வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

    இவற்றில் 498 (75 சதவீதம்) பொதுக்கூட்டங்கள் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடத்தப்பட்டன.

    இவை மகாராஷ்டிரா (118), உத்தர பிரதேசம் (104) மற்றும் மத்திய பிரதேசம் (65) ஆகிய மாநிலங்களில் அதிகம் நடைபெற்றுள்ளன.

    293 பேச்சுக்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைக்கு அழைப்பு விடப்பட்டது.

    307 வெறுப்புணர்ச்சியை தூண்டும் பேச்சுக்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருடன் தொடர்புடையவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவை.


    பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் 11 சதவீத நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. தலைவர்கள் இவற்றில் பங்கு பெற்றனர்.

    ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய 2023 அக்டோபர் 7 அன்று தொடங்கி 2023 டிசம்பர் 31 வரை இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை தூண்டும் 193 நிகழ்ச்சிகள் நடந்தன.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எது "வெறுப்புணர்ச்சியை தூண்டும் பேச்சு" என்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை (United நஷன்ஸ் Organization) வழங்கியுள்ள விளக்கத்தை மையமாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக இண்டியா ஹேட் லேப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • இதுபோன்ற எண்ணங்கள் நாட்டின் வலிமையை பலவீனப்படுத்திவிடும்.
    • அன்புடன் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்கின்றனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு யாத்திரையில் கலந்து கொண்ட ராகுல் காந்தி ராய்கரில் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "தற்போது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வெறுப்பு மற்றும் வன்முறை பரப்பப்படுகிறது. சிலர், மற்றவர்களின் மொழி காரணமாக அவர்களை பிடிக்கவில்லை என்றும், சிலர் அவர்கள் குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் பிடிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். இதுபோன்ற எண்ணங்கள் நாட்டின் வலிமையை பலவீனப்படுத்திவிடும்."

    "நம் நாட்டின் டி.என்.ஏ.-வில் அன்பு நிறைந்துள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். வெறுப்புணர்வை தூண்டுகின்றன. நம் நாட்டில் மக்களுக்கு பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன, எனினும் அவர்கள் அன்புடன் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்கின்றனர்," என்று தெரிவித்தார்.

    • ராகுல்காந்தி இன்று காலை பீகார் மாநிலம் கிஷன் கஞ்ச் பகுதியில் நடைபயணத்தில் ஈடுபட்டார்.
    • ஆர்.எஸ்.எஸ், பா.ஜனதா சித்தாந்தங்கள் நாட்டில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பரப்புகின்றன.

    பாட்னா:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 2-வது கட்ட பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவர் இன்று காலை பீகார் மாநிலம் கிஷன் கஞ்ச் பகுதியில் நடைபயணத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

    மத்தியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய கூட்டணி ஆட்சியில் பல்வேறு மதங்கள் மற்றும் ஜாதிகளை சேர்ந்தவர்கள் போராடி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ், பா.ஜனதா சித்தாந்தங்கள் நாட்டில் வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பரப்புகின்றன.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    • கவுகாத்தியில் நடைபயணம் மேற்கொள்ள அசாம் மாநில அரசு தடை.
    • தடையை மீற நடைபயணம் மேற்கொள்ள முயன்றதால் தடுத்தி நிறுத்தம். வழக்குப்பதிவு.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் அசாம் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கவுகாத்தியில் நுழைய அம்மாநில அரசு தடைவிதித்த நிலையில், ராகுல் காந்தி நடைபயணம் கவுகாத்தியில் நுழைய முயன்றது. அப்போது போலீசார் நடைபயணத்தை தடுத்து நிறுத்தினர்.

    அதன்பின் மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக ராகுல் காந்தி மீது அசாம் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் இன்று அவர் பார்பெட்டா மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    வழக்குகள் பதிவு செய்து என்னை மிரட்ட முடியும் என்ற யோசனை ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கு எப்படி தோன்றியது என எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என்மீது பல வழக்குகள் பதிவு செய்ய முடியும். 25-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யுங்கள். ஆனால், என்னை மிரட்ட முடியாது. பிஜேபி- ஆர்எஸ்ஸ் ஆகியவற்றால் என்னை மிரட்ட முடியாது.

    பா.ஜனதா- ஆர்.எஸ்.எஸ். மொழி, கலாச்சாரம், அசாமின் வரலாற்றை அழிக்க விரும்புகிறது. நாக்பூரில் இருந்து அசாமை வழிநடத்த விரும்புகிறார்கள். அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அசாமில் இருந்து மட்டுமே அசாம் இயக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    • ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளைமறுதினம் திங்கட்கிழமை நடைபெறுகிறது.
    • காங்கிரஸ் கட்சி தலைவர்கள் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. நாளைமறுதினம் கும்பாபிஷேக விழா நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கமாட்டார்கள் என கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது.

    அரசியல் ஆதாயத்திற்காக அரசியல் திட்டமாக இதை பா.ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் உருவாக்கியுள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மணிப்பூர் முதல் மும்பை வரையிலான நடை பயணத்தை தொடங்கியுள்ளார்.

    ராமர் கோவில் கும்பாபிஷேக தினமான 22-ந்தேதி ராகுல் காந்தி எங்கே இருப்பார். அவரது நடைபயணம் எங்கே என்று கேள்வி எழுகிறது. அதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் பதில் அளித்து கூறியதாவது:-

    ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெறும் 22-ந்தேதி ராகுல் காந்தி மற்றும் அவரது நடைபயணம் எங்கே? என ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 22-ந்தேதி காலை ஸ்ரீ ஸ்ரீ சங்கர்தேவா பிறந்த இடமான அசாம் மாநிலம் படாத்ராவா தன் என்ற இடத்தில் இருப்பார் என்பதை சொல்ல விரும்புகிறேன். ஸ்ரீ ஸ்ரீ சங்கர்தேவா பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இருந்தபோதிலும் இன்றும் பொருந்தக்கூடிய அவருடைய சித்தாந்தங்கள் கோடிக்கணக்கான மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது."

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    15-ம் மற்றும் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி, அறிஞர் உள்ளிட்ட பன்முக தன்மை கொண்டவரும், அசாம் காலாசாரத்தின் முக்கியத்துவம் வாய்ந்தவருமாக கருதப்பட்டவர் ஸ்ரீ ஸ்ரீ சங்கர்தேவா. அவர் பிறந்த இடத்தில் ராகுல் காந்தி வழிபாடு செய்கிறார்.

    ராகுல் காந்தியின் 3-வது நாளான நடைபயணம் இன்று அசாமில் தொடங்கியது. ராகுல் காந்தியுடன் ஜெய்ராம் ரமேஷும் நடைபயணத்தில் கலந்து கொண்டார்.

    • ஆளும் பா.ஜ.க.வின் பல நடவடிக்கைகளை ஆதரித்து வருபவர் கங்கனா
    • எந்த தொகுதி என்பது முடிவாகவில்லை என்றார் கங்கனாவின் தந்தை

    இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத் (36). இவர் 4 தேசிய விருதுகள், 5 பிலிம்ஃபேர் விருதுகள் வென்றவர்.

    நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பதிவு செய்து வரும் கங்கனா, ஆளும் பா.ஜ.க.வினரின் பல நடவடிக்கைகளையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஆதரித்து வருபவர்.

    அடுத்த வருடம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    கங்கனாவிடம் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் உள்ளதா என கேட்கப்பட்ட போது, "பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆசி இருந்தால் போட்டியிடுவேன்" என தெரிவித்திருந்தார்.

    தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

    இந்நிலையில், "அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வின் சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிடுவார். அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது தற்போது உறுதியாகவில்லை" என கங்கனாவின் தந்தை அமர்தீப் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன் ஹிமாச்சல் பிரதேச மாநில பிலாஸ்பூர் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சியில் கங்கனா கலந்து கொண்டார். தனது கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் ஒத்து போவதாக அப்போது அவர் தெரிவித்தார்.

    கடந்த 2008ல் தமிழில் வெளியான "தாம் தூம்" எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் காங்கிரசில் 50 சதவீத பெண்களை முதல்-மந்திரிகளாக ஆக்குவோம்.
    • பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு இடையேயான போராட்டம்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி வயநாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

    மூன்றாம் நாளான நேற்று எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் கடந்த காங்கிரஸ் மாநில மகளிர் மாநாட்டை ராகுல் காந்தி தொடங்கிவைத்தார். அந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:-

    நமது கட்சியில் இன்று ஒரு பெண் முதல்-மந்திரி கூட இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரிகளாகும் நற்பண்புகள் கொண்ட பல பெண்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் தனது கட்டமைப்புக்குள் பெண்களை தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும். நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் காங்கிரசில் 50 சதவீத பெண்களை முதல்-மந்திரிகளாக ஆக்குவோம்.

    பெண்கள் தாழ்ந்தவர்கள் அல்ல என்று காங்கிரஸ் அடிப்படையில் நம்புகிறது.ஆண்களை விட பெண்கள் பல வழிகளில் உயர்ந்த வர்கள். ஆண்களை விட அவர்களுககு பொறுமை அதிகம். அதிக உணர்திறன் மற்றும் இரக்கமுள்ளவர்கள். அதிகார கட்டமைப்பின் ஒரு பகுதியாக பெண்கள் இருக்க வேண்டும்.

    பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு இடையேயான போராட்டம். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற போதிலும், அதை அமல்படுத்தாமல் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். அதன் முழு வரவலாற்றிலும் பெண்களை அதன் அணிகளில் அனுமதிக்கவில்லை. இதற்கு முன் இதை நான் இருமுறை கூறியபோது, தங்களிடம் பெண்கள் அமைப்புகள் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். கூறியது. ஆனால் அவர்களிடம் பெண்கள் அமைப்புகள் இருக்கிறதா இல்லையா? என்பது கேள்வி அல்ல.

    ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறார்களா? என்பது தான் கேள்வி. அந்த கேள்விக்கு முழுமையாக இல்லை என்பதே பதில். இந்திய அரசியலை ஆழமாக பார்த்தால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் காங்கிரசுக்கு இடையேயான உண்மையான சண்டை, அரசியலில் பெண்களின் பங்கை பற்றியது என்பதை நீங்கள் காணலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.
    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது.

    சென்னை:

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.

    ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டையொட்டி, ஜாதி வேறுபாடுகளை களைந்து, சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, குடும்ப அமைப்பை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி வாழ்க்கை முறை, சமூக ஒழுக்கத்தை ஏற்படுத்துவது ஆகிய ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது. அதை முன்னிட்டு ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரை, வீடு, வீடாகச் சென்று ஸ்ரீராம ஜென்மபூமி படம், அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதையுடன் அழைப்பிதழ் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

    உலகம் தழுவிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்துள்ளது. தமிழகத்தில் பயிற்சி பெற்ற ஊழியர்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

    ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்புக்கு, கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அனுமதி அளித்தார். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி, கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடந்தது.

    இந்த ஆண்டு காவல் துறை அனுமதி மறுத்ததால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி, வருகிற 19-ந் தேதி அணிவகுப்பு நடக்கவுள்ளது. இது தொடர்பாக, டி.ஜி.பி.,யை சந்தித்து பேசியுள்ளோம்.

    ஆகம பயிற்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும், எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.,சின் நிலைப்பாடு. ஆனால், அவர்கள் முறையான ஆகம பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

    அதுபோல, கலப்பு திருமணத்தையும் ஆதரிக்கிறோம். ஆனால், திருமணத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுவதை எதிர்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது, ஆர்.எஸ்.எஸ்., மாநிலச் செயலாளர் ஜெகதீசன், மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கோர்ட்டு உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று வக்கீல் ரபு மனோகர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார்.
    • வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தார்.

    சென்னை:

    தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி கடந்த 16-ந்தேதி காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில், கோர்ட்டு உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று வக்கீல் ரபு மனோகர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக இன்றே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தார்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய தேதிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி பின்னர் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • கோர்ட்டு அனுமதித்தும் நீலகிரி மாவட்டத்தில் பேரணி நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • 4 பேர் மீதும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இன்று மற்றும் 29-ந்தேதிகளில் 33 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நடத்துவதற்கு அனுமதித்தது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.

    கோர்ட்டு அனுமதித்தும் நீலகிரி மாவட்டத்தில் பேரணி நடத்த அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் உள்துறை செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், எருமாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த நோட்டீசில் பேரணிக்கு அனுமதி வழங்காததை ஐகோர்ட்டின் உத்தரவை மீறும் செயல் என்றும், உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால் 4 பேர் மீதும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவை பொறுத்தவரைக்கும், இங்குள்ள மதம், கலாசாரம் அனைத்து மதத்திற்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது
    • இது இந்துக்களின் நாடு. இதனால் மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல

    நாக்பூரில் ஒரு பள்ளியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 350-வது முடிசூட்டு விழா தொடர்பான நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.

    அப்போது மோகன் பகவத் பேசியதாவது:-

    இந்தியாவை பொறுத்தவரைக்கும் இங்குள்ள மதம், கலாசாரம் அனைத்து மதங்களுக்கும், நம்பிக்கைக்கும் மரியாதை அளிக்கிறது. அந்த மதம் இந்து. இது இந்துக்களின் நாடு. இதனால் மற்ற மதத்தினர் புறந்தள்ளப்படுகிறார்கள் என்று அர்த்தம் அல்ல. ஒருமுறை நீங்கள் இந்து என்று சொன்னவுடன், முஸ்லிம்கள் பாதுகாக்கப்பட்டார்கள் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. இந்துக்கள் மட்டும் இதை செய்கிறார்கள். இந்தியா மட்டுமே இதைச் செய்கிறது. மற்றவர்கள் இதை செய்யவில்லை.

    எங்கு பார்த்தாலும் சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் போர், ஹமாஸ்- இஸ்ரேல் போர் குறித்து நீங்கள் கேள்விபட்டு இருப்பீர்கள். இதுபோன்ற பிரச்சினை காரணமாக இந்தியாவில் ஒருபோதும் சண்டை நடைபெற்றதில்லை. மன்னர் சிவாஜி காலத்தில் நடந்த படையெடுப்பு இந்த வகையில்தான். ஆனால் இந்த பிரச்சினையில் நாங்கள் யாருடனும் சண்டை போட்டதில்லை. அதனால்தான் நாங்கள் இந்துக்கள்.

    இவ்வாறு மோகன் பகவத் குறிப்பிட்டார்.

    • சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம்
    • அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியபோது கூறியதாவது:-

    சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம். 2000 ஆண்டுகளாகத் இந்த நிலை தொடர்கிறது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும்வரை, ஒதுக்கீடு போன்ற சில சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும்.

    எனவே, இத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    ×