search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்ஸ்டாகிராம்"

    • கேல் கேடட் 4-வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்
    • கர்ப்பம் என்பது எளிதானது அல்ல என தெரிவித்துள்ளார்.

    வொன்டர் வுமன் படத்தில் நடித்து புகழ்பெற்ற கேல் கேடட் 4-வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

    தனது 4-வது பெண் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் கர்ப்பம் என்பது எளிதானது அல்ல என தெரிவித்துள்ளார்.

    கேல் கேடட் தனது குழந்தைக்கு 'ஓரி' எனப் பெயரிட்டுள்ளார். இதற்கு எபிரேய மொழியில் என் 'ஒளி' எனப் பொருள் ஆகும்.

    2008-ம் ஆண்டு ஜரோன் வர்சனோ என்பவரை திருமணம் செய்து கொண்ட கேல் கேடட், 2011, 2017, 2021 ஆகிய ஆண்டுகளில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்நிலையில் இப்போது 4-வது பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்துள்ளார்.

    • விவசாயிகளின் குறைகளை அரசு தீர்க்க அரசுக்கு நேரமில்லை" என நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.
    • விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம், தற்போதைய சூழ்நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

    "தங்கம் விலை உயரும்போது, அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால், அவர்களின் குறைகளைத் தீர்க்க அரசுக்கு நேரமில்லை" என நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவின் வறட்சிப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் 'நாம்' என்ற அறக்கட்டளையை நடிகர் மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து நானா படேகர் நடத்தி வருகிறார். அதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

    இந்நிலையில், நாசிக்கில் நடைபெற்ற ஷேத்காரி சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பட்டேகர் விவசாயிகளின் குறைகளை அரசு தீர்க்கவில்லை என்ற விமர்சனங்களை முன் வைத்தார்.

    அப்படிப்பட்ட அரசிடம் விவசாயிகள் எதையும் கோரக் கூடாது. விவசாயிகள், நல்ல நேரத்துக்காகக் காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டுவர வேண்டும். எந்த அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

    இளம் தலைமுறைக்கு நீங்கள் என்ன மாதிரியான லட்சியத்தை முன்வைக்கிறீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள். என்னால் அரசியலில் சேர முடியாது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம். தற்போதைய சூழ்நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகர் கிஷோர் ஆதரவு தெரிவித்த இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது

    அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமானதா? குறைந்தபட்ச ஆதார விலை (MSP) வழங்குகிறோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான இந்த அரசியல்வாதிகளை கூட விட்டு விடுவோம். ஆனால், விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர்வாழும் இந்த தேசபக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களை எப்படி இந்தியர்கள் என சொல்லமுடியும்?

    விவசாயிகள் போராட்டத்தின்போது சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டன, சுவர்கள் எழுப்பப்பட்டன, குழிகள் வெட்டப்பட்டன, துப்பாக்கிகள் சுடப்பட்டன, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் அனைத்தையும் செய்தது. மற்றொரு பக்கம் தேசம் முழுவதற்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளின் மீது தேசவிரோதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது.

    மதவெறி கொண்ட கூட்டத்தின் உறுதியான வாக்குறுதிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியும், அவரது அரசும், அவர்களது பக்தர்களும், விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஆகவே அவர்களுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்.

    ஆனால் இந்த நன்றி கெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்... இந்த விவசாயிகள் தேசவிரோதிகள் எனும் முத்திரைக்கு தகுதியானவர்களா?" என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

    • மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்குகின்றன
    • இன்று அமெரிக்க பங்கு சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது

    2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜூக்கர்பர்க் (Mark Zuckerberg) என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக் (Facebook).

    உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.

    தற்போது மெட்டா (Meta) எனும் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் (Instagram) ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜூக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார்.

    நேற்று, உலகெங்கும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் முடங்கின.

    இதனால், அவற்றை பயன்படுத்தும் பயனர்கள், கருத்து பரிமாற்றம் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட அதன் அனைத்து சேவைகளையும் பெற முடியாமல் தவித்தனர்.

    சில மணி நேரங்கள் கடந்ததும் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.

    இந்நிலையில், இன்று அமெரிக்க பங்கு சந்தையில், மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது.

    இதனால் மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜூக்கர்பர்க், ரூ.25 ஆயிரம் கோடி ($3 பில்லியன்) சந்தை மதிப்பை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    • இன்றைய சூழலில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் செயலி எதுவென்றால் அது இன்ஸ்டாகிராம் தான்.
    • இன்றைய இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு தருவதில் இன்ஸ்டாகிராம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இன்றைய சூழலில் பெரும்பாலானோர் உபயோகிக்கும் செயலி எதுவென்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இன்றைய இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு தருவதில் இன்ஸ்டாகிராம் முக்கிய பங்கு வகுக்கிறது.

    தற்போது இரவு 8.30 மணியில் இருந்து உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு இன்ஸ்டாகிராம் மெதுவாக உள்ளதாகவும், பலரும் அப்ளிகேஷனை ஓபன் செய்ய முடியாமலும் திணறிக் கொண்டு இருக்கின்றனர்.

    இதை அந்நிறுவனம் வேகமாக சரி செய்ய வேண்டும் என்று மக்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியவாறு உள்ளனர். 

    • நயன்தாரா இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைலில் இருந்து அவரின் கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவனை அன்ஃபொலோ செய்ததாக செய்திகள் பரவியது
    • நேற்று நள்ளிரவு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்

    நேற்று நயன்தாரா இன்ஸ்டாகிராம் ப்ரொஃபைலில் இருந்து அவரின் கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவனை அன்ஃபொலோ செய்ததாக செய்திகள் பரவியது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு இடையே எதாவது சண்டையா, இல்லை அவர்கள் விவாகரத்து செய்ய போகிறார்களா என்று சமூக ஊடகங்களில் ஏதேதோ வதந்திகள் பரவியது.

    இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று நள்ளிரவு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற வருடம் அவர்களின் திருமண நாளில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர்கள் மிகவும் இணக்கமாக காதலில் உருகி இருக்கும்படியான காட்சிகள் இருந்தது.

    ஃப்லூட் நவீன் "மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே"என்ற பாடலுக்கு இசையமைக்க, அதற்கு ஏற்ப நயன்தாரா விக்னேஷ் சிவனை கட்டிப்பிடித்து ரசித்தபடி இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    • டூத்லெஸ்.ஏஎம்ஜி எனும் ஐடி-யை கொண்ட பயனர் ஒரு வீடியோவை பதிவிட்டார்
    • இன்ஸ்டாகிராம் ஹேண்டிலை பிஎம்டபிள்யூ_சுகமான டிரைவிங் என மாற்றுவீர்களா என BMW கேட்டது

    சமூக வலைதளங்களில் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பல "டிரெண்டிங்" ஆகி பிரபலமாக உள்ளன.

    அவ்வகையில் சில மாதங்களாக, தாங்கள் பதிவிடும் வீடியோக்களை சில பிரபலங்கள் அல்லது பிரபல நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் "கமென்ட்" செய்தாக வேண்டும் எனும் பிடிவாதக்காரர்களின் வீடியோ பரவி வருகிறது.

    இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் "டூத்லெஸ்.ஏஎம்ஜி" எனும் ஐடி-யை கொண்ட ஒரு பயனர், தான் வைத்திருக்கும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி (Mercedes-AMG) காரை குறித்து பதிவிட்டுள்ள வீடியோவை பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் பார்த்து, கமென்ட் பதிவிட்டால், தனது மெர்சிடிஸ் காரை விற்று விட்டு பிஎம்டபிள்யூ எம்340ஐ (BMW M340i) ரக காரை வாங்குவேன் என பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளித்த பிஎம்டபிள்யூ நிர்வாகம் "நீங்கள் உங்கள் இன்ஸ்டாகிராம் ஹேண்டில் பெயரையும் மாற்றி பிஎம்டபிள்யூ_சுகமான டிரைவிங் என மாற்றுவீர்களா?" என கேள்வி எழுப்பியிருந்தது.

    மிக பெரிய கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ ஒரு பயனரின் வீடியோவிற்கு உடனடியாக பதிலளித்தது இணையத்தில் பாராட்டப்படுகிறது.

    ஆனால், பிஎம்டபிள்யூ நிறுவனம் பதிலளித்ததனால், அந்த பயனர் வாக்களித்தபடி தனது மெர்சிடிஸ் காரை விற்று பிஎம்டபிள்யூ காரை வாங்கினாரா எனும் விவரம் தற்போது வரை வெளியாகவில்லை.

    இந்த கேள்வி-பதில் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம்.
    • இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்

    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இது தொடர்பாக கேன் வில்லியம்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில், எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    தனது குழந்தையின் பிறப்பை ஒட்டி, அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்.

    ஆனால் அதற்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை கேன் வில்லியம்சன் வெளிப்படுத்தியிருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 3 டெஸ்ட் சதங்களை அவர் அடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாக்கும் அண்மையில் தான் ஆகாய் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது

    • விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர்வாழும் இந்த தேசபக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள்.
    • விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்

    விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவர்களது தேசபக்தர்களுக்கும் உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என நடிகர் கிஷோர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமானதா? குறைந்தபட்ச ஆதார விலை (MSP) வழங்குகிறோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான இந்த அரசியல்வாதிகளை கூட விட்டு விடுவோம். ஆனால், விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர்வாழும் இந்த தேசபக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களை எப்படி இந்தியர்கள் என சொல்லமுடியும்?


    விவசாயிகள் போராட்டத்தின்போது சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டன, சுவர்கள் எழுப்பப்பட்டன, குழிகள் வெட்டப்பட்டன, துப்பாக்கிகள் சுடப்பட்டன, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக்கொள்ளும் மோடியின் அரசாங்கம் அனைத்தையும் செய்தது. மற்றொரு பக்கம் தேசம் முழுவதற்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளின் மீது தேசவிரோதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது.

    மதவெறி கொண்ட கூட்டத்தின் உறுதியான வாக்குறுதிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியும், அவரது அரசும், அவர்களது பக்தர்களும், விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஆகவே அவர்களுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும்.

    ஆனால் இந்த நன்றி கெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்... இந்த விவசாயிகள் தேசவிரோதிகள் எனும் முத்திரைக்கு தகுதியானவர்களா?" என நடிகர் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • உடல் எடை குறைப்பு இன்ஃப்ளுயன்சராக பெரும் புகழ் அடைந்தார், மிலா
    • மிலா, எடை குறைப்புக்கு முன்னரும் பின்னரும் இருந்த நிலையை படங்களாக பதிவிட்டார்

    சமூக வலைதளங்களின் வழியாக பல்வேறு விஷயங்களை குறித்து தங்கள் கருத்துகளை கூறி, மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் "இன்ஃப்ளுயன்சர்கள்".

    முக அழகு மற்றும் உடல் தோற்றத்தை மேம்படுத்தும் குறிப்புகளுடன் வெற்றிகரமான இன்ஃப்ளுயன்சராக திகழ்ந்தவர், அமெரிக்காவை சேர்ந்த 35 வயதான மிலா டி ஜெசுஸ் (Mila de Jesus).

    தென் அமெரிக்க நாடான பிரேசிலில் பிறந்த மிலா, அமெரிக்க மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநில பாஸ்டன் நகரில் வசித்து வந்தார்.

    அதிக உடல் எடையால் அவதிப்பட்டு வந்த மிலா, சுமார் 6 வருடங்களுக்கு முன் எடை குறைப்பிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து, அவரது உடல் மெலிவடைந்து அவர் விரும்பிய உடல் அமைப்பை பெற்றார்.

    மிலா, உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்கு முன்னரும் பின்னரும் தனது உடல் இருந்த நிலையை புகைப்படங்களாக வெளியிட்டார்.

    தனது சமூக வலைதள பக்கங்களில் இது குறித்து விரிவாக பதிவிட்ட மிலாவை பல்லாயிரக்கணக்கான பயனர்கள் பின் தொடர்ந்தனர்.

    இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் சுமார் 60 ஆயிரம் பேரும், யூடியூப் வலைதளத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களும் மிலாவை பின் தொடர்ந்தனர்.

    மேலும், மிலா பல அழகு குறிப்புகளை தொடர்ந்து பதிவுகளாக வெளியிட்டு வந்தார்.

    இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று மிலா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

    தனது முந்தைய திருமண வாழ்க்கையின் மூலம் 4 குழந்தைகளுக்கு தாய் ஆன மிலா, 4 மாதங்களுக்கு முன் மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மிலாவின் திடீர் மாரடைப்புக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

    • வடகிழக்கு டெல்லியில் உள்ள பாகீரதி விகாருக்கு வருமாறும் கூறினார்.
    • பைசல் மற்றும் சமீர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஒரு பிளக்ஸ் தயாரிப்பு கடையில் வேலை பார்த்து வந்தவர் மாஹிர் என்கிற இம்ரான் ( வயது 18) இவருக்கும் 21 வயது பெண் ஒருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் விரும்பினார்கள்.

    இந்த சூழ்நிலையில் அந்த பெண்ணுக்கு அர்மான் கான் (20) என்பவருடன் இன்ஸ்டாகிராம் வழியாக நட்பு உருவானது. சம்பவத்தன்று இருவரும் நேரில் சந்தித்தனர். அந்த சமயம் அப்பெண் வீடியோ காலில் மாஹிருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததை அம்ரான்கான் பார்த்தார். இது தொடர்பாக அவர் அந்த பெண்ணிடம் கேட்டார். அதற்கு அவர் தான் மாஹிரை விரும்புவதாக தெரிவித்தார். இது அம்ரான்கானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. உடனே அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்த அம்ரான்கான் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    நேற்று அவர் மாஹிரை தொடர்பு கொண்டு காதலியின் செல்போனை திருப்பி தருகிறேன் என்றும் அதனால் வடகிழக்கு டெல்லியில் உள்ள பாகீரதி விகாருக்கு வருமாறும் கூறினார்.

    இதையடுத்து மாஹிர் அந்த இடத்துக்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு குறுகிய சந்தில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த அர்மான்கான் மாஹிரை சரமாரியாக கத்தியால் குத்தினார். 3 பேரும் சேர்ந்து அவரை 50 தடவை கத்தியால் குத்தினார்கள். இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மாஹிர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இக்கொலை தொடர்பாக அர்மான்கான் மற்றும் அவரது நண்பர்கள் பைசல் மற்றும் சமீர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
    • டவுன்லோட் செய்யப்படுவதை தடுக்கும் வசதியும் உள்ளது.

    இன்ஸ்டாகிராம் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ரீல்ஸ்-ஐ நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அந்த வகையில், பயனர்கள் இனிமேல் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    இந்த அம்சம் தற்போதைக்கு பப்ளிக் அக்கவுண்ட்-களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பயனர்கள் விரும்பினால் ரீல்ஸ் டவுன்லோட் செய்யப்படுவதை தடுக்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

    ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்யும் புதிய அம்சம் குறித்த தகவலை இன்ஸ்டாகிராம் செயலிக்கான தலைவர் ஆடம் மொசெரி தனது சேனலில் தெரிவித்தார். ஏற்கனவே இந்த அம்சம் அமெரிக்க பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உலகளவில் பயனர்கள் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்யும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த அம்சம் பயனர்கள் பப்ளிக் அக்கவுண்ட்களில் இருந்து ரீல்ஸ்-ஐ சேவ் செய்து கொள்ள அனுமதிக்கிறது. இவ்வாறு டவுன்லோட் செய்யப்படும் ரீல்களில், அதனை உருவாக்கிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டின் லோகோ வாட்டர்மார்க் (ரீல்ஸ் பின்னணியில் காட்சி குறியீடு) செய்யப்பட்டு இருக்கும்.

    இன்ஸ்டா ரீல்ஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

    புதிய அப்டேட் மூலம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய, குறிப்பிட்ட ரீல்ஸ்-இல் இருந்த படி ஷேர் செய்யக் கோரும் பேப்பர் ஏர்பிளேன் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு, டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷனை பார்க்க முடியும். அதனை க்ளிக் செய்ததும் ரீல்ஸ் சாதனத்தில் டவுன்லோட் செய்யப்பட்டு விடும்.

    • அக்கம் பக்கத்தினர் சிறுவர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
    • ஜவுளிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய சிறுவர்கள் 8 பேரை தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    மேலும் அந்த இளம்பெண்ணுடன் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 சிறுவர்களும் இளம்பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்தனர். இதன் காரணமாக சிறுவர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று 17 வயது சிறுவன், 16 வயது சிறுவனை தொடர்பு கொண்டு இளம்பெண்ணுடன் பழகுவது குறித்து பேச வேண்டும் என அழைத்தார். இதனையடுத்து 16 வயது சிறுவன் தனது நண்பர்கள் 4 பேருடன் ராமநாதபுரம் வள்ளியம்மாள் வீதிக்கு சென்றார்.

    அங்கு 17 வயது சிறுவன் தனது நண்பர்கள் 4 பேருடன் அங்கு நின்று கொண்டு இருந்தார். அப்போது சிறுவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்ற ஜவுளிக்கடை வைத்து நடத்தி வரும் சர்ச் வீதியை சேர்ந்த பாலசுந்தர மூர்த்தி (வயது 22) என்பவர் தடுக்க சென்றார்.

    அப்போது சிறுவர்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து பாலசுந்தர மூர்த்தியின் கையில் குத்தினர். இதில் அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுவர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பாலசுந்தர மூர்த்தியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவுளிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய சிறுவர்கள் 8 பேரை தேடி வருகின்றனர். 

    ×