என் மலர்
நியூசிலாந்து
- நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 3.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- கடந்த வியாழன் அன்று நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
உலகின் இரண்டு முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்துள்ளது. இதனால் நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 3.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடந்த வியாழக்கிழமை, நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.
கெர்மடெக்:
நியூசிலாந்து நாட்டில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.
இன்று அதிகாலை அந்த நாட்டில் உள்ள கெர்மடெக் தீவுகளில் திடீரென சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உலுக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளியாக பதிவானதாக நில நடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.
நில நடுக்கம் ஏற்பட்ட கெர்மடெக் தீவுகளை சுற்றி 300 கிலோ மீட்டர் தூரத்தில் பொதுமக்கள் யாரும் வசிக்கவில்லை. இதனால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் நாட்டிலும் இன்று நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.
- பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் 2வதுமுறையாக சீறந்த வீராங்கனை விருது பெற்றார்.
துபாய்:
இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி புரூக் பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக0 தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டி ஆகியோரின் கடுமையான போட்டியை முறியடித்து, வளர்ந்து வரும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஹாரி புரூக் விருதுக்கான வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் டெஸ்டில் அறிமுகமான போதிலும், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ஏற்கனவே இங்கிலாந்தின் புதிய ஆபத்தான மனிதராக உருவெடுத்து வருகிறார், மேலும் டிசம்பரில் ஐசிசி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற பிறகு, அவரது வேகம் இன்னும் அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக வெலிங்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 24 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உள்பட ஒரு இன்னிங்ஸில் 186 ரன்களை விளாசியிருந்தார். மொத்தம் நடந்த இரண்டு டெஸ்டில் அவர் 329 ரன்கள் எடுத்தார்.
இதேபோல், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் 2வதுமுறையாக சிறந்த வீராங்கனை விருது பெற்றார்.
- இலங்கை அணி 2வது இன்னிங்சில் 302 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- 4-ம் நாள் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேரில் மிட்செல் 102 ரன்னும், மேட் ஹென்றி 72 ரன்னும், டாம் லாதம் 67 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரஜிதா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
18 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். சண்டிமால் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இலங்கை இரண்டாவது இன்னிங்சில் 302 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தனஞ்செய டி சில்வா 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து சார்பில் டிக்னெர் 4 விக்கெட்டும், மேட் ஹென்றி 3 விக்கெட்டும், டிம் சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை ஆடியது. நான்காம் நாள் முடிவில் நியூசிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.
இறுதி நாளான இன்று நியூசிலாந்து வெற்றி பெற 257 ரன்கள் தேவை என்பதாலும், இலங்கை வெற்றி பெற 9 விக்கெட்டுகள் தேவை என்பதாலும் கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் 102 ரன்னும், மேட் ஹென்றி 72 ரன்னும், டாம் லாதம் 67 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரஜிதா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
18 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் 20 ரன்னுடனும், பிரபாத் ஜெயசூர்யா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் இலங்கை அணி 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.
- தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் அரை சதம் கடந்து அசத்தினார்.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் அரை சதமடித்தார். அவர் 67 ரன்னில் அவுட்டானார். டேவன் கான்வே 30 ரன்னில் வீழ்ந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 165 ர்ன்கள் எடுத்துள்ளது. டேரில் மிட்செல் 40 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை சார்பில் லஹிரு குமாரா, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்களை குவித்தது.
- நியூசிலாந்து சார்பில் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
- துவக்க வீரர்கள் தேவன் கான்வே 61 ரன்களும், டாம் லாதம் 83 ரன்களும் குவித்து நம்பிக்கை அளித்தனர்.
- இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட நியூசிலாந்து 24 ரன்கள் பின்தங்கி உள்ளது.
வெல்லிங்டன்:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 435 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நியூசிலாந்து அணி 42 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் 2ம் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி, 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேக் லீச் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடர்ந்து ஆடி வருகிறது. முதல் இன்னிங்சில் கோட்டைவிட்ட நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்கள் தேவன் கான்வே 61 ரன்களும், டாம் லாதம் 83 ரன்களும் குவித்து நம்பிக்கை அளித்தனர். வில் யங் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கேன் வில்லியம்சன் 25 ரன்களும், ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்களும் எடுத்திருந்த நிலையில், இன்றைய ஆட்டம் நிறைவு பெற்றது. அப்போது நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட 24 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை 4வது நாள் ஆட்டம் நடக்கிறது. நியூசிலாந்து வீரர்கள் நின்று ஆடுவதைப் பொருத்து போட்டியின் முடிவு அமையும். எனவே, நாளை அதிகபட்ச ஸ்கோரை எட்டுவதற்கு நியூசிலாந்து வீரர்கள் முயற்சி செய்வார்கள்.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 435 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 209 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
வெல்லிங்டன்:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 435 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 186 ரன்னில் அவுட் ஆனார். ஜோ ரூட் 153 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்றி 4 விக்கெட்டும், பிரேஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நியூசிலாந்து அணி 42 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் 2ம் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. டிம் சவுத்தி ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் அவுட்டானார். 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிளெண்டல், டிம் சவுத்தி ஜோடி 98 ரன்கள் சேர்த்தது.
இறுதியில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் , ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜேக் லீச் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடர்ந்து ஆடி வருகிறது.
- நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டும், பிரேஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- நியூசிலாந்து அணி 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நேற்றைய முதல் நாள் முடிவில் 65 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 315 ரன் எடுத்தது. மழையால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
ஹாரிபுரூக் 184 ரன்னுடனும், ஜோரூட் 101 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய ஹாரி புரூக் 186 ரன்னிலும், ஜோ ரூட்153 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
இங்கிலாந்து 87.1 ஓவர்க ளில் 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டும், பிரேஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. கான்வே ரன் எதுவும் எடுக்காமலும், வில்லியம்சன் 4 ரன்னிலும், வில் யங் 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
அதன்பின் டாம் லாதம் (35 ரன்), நிக்கோலஸ் (30 ரன்) ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்து விளையாடியது. அவர்கள் அவுட் ஆன பிறகு விக்கெட்டுகள் சரிந்தது.
நியூசிலாந்து அணி 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது டாம் ப்ளூன்டெல் 25 ரன்னுடனும், டிம் சவுத்தி 23 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஜாக் லீச் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.