என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் கிரிக்கெட்: ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கேப்டன்
- மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.
- இந்தத் தொடருக்கு பிறகு நியூசிலாந்து கேப்டன் ஓய்வுபெற உள்ளதாக தெரிவித்தார்.
வெல்லிங்டன்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை சோபி டிவைன். இவர் நியூசிலாந்து அணிக்காக 151 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3,990 ரன்னும், 107 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். மேலும், 146 டி20 போட்டிகளில் ஆடி 3,432 ரன்னும், 119 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார்.
16 வயதில் நியூசிலாந்து அணிக்காக அறிமுகமான சோபி டிவைன் சுமார் 20 ஆண்டுக்கு மேலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சோபி டிவைன் இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து சோபி டிவைன் கூறுகையில், நியூசிலாந்து அணியில் விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன். அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிப்பேன். டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என தெரிவித்தார்.
13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.






