என் மலர்
நீங்கள் தேடியது "காதல்"
- அனிதா பி.ஏ.முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- பண்ருட்டி போலீசில் அவரது தாய் அஞ்சலாட்சிபுகார் கொடுத்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிகுப்பம் அடுத்த அன்னக்காரன் குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் அனிதா (23). இவர், பி.ஏ.முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்தவர் காணாமல் போனார். பல இடங்களில் தேடி யும் கிடைக்காததால். பண்ருட்டி போலீசில்வஅவரது தாய் அஞ்சலாட்சிபுகார் கொடுத்தார். புகாரில் பெத்தான்குப்பத்தை சேர்ந்த சிவமணியை (30) அனிதா காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொண்டதாகவு ம்கூறியுள்ளார்.
- திருமணத்திற்கு முன்பு சஞ்சய் தனது காதலியிடம் உனக்கு நிலாவில் நிலம் வாங்கி தருகிறேன் என கூறியிருந்தாராம்.
- காதல் மனைவிக்கு நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி மனைவிக்கு பிறந்தநாள் பரிசளித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மகாட்டோ. இவர் காதல் திருமணம் செய்தவர். திருமணத்திற்கு முன்பு சஞ்சய் தனது காதலியிடம் உனக்கு நிலாவில் நிலம் வாங்கி தருகிறேன் என கூறியிருந்தாராம். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர் காதலியை கரம் பிடித்தார்.
இந்நிலையில் தனது வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் சஞ்சய் தனது காதல் மனைவிக்கு நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி மனைவிக்கு பிறந்தநாள் பரிசளித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் கூறுகையில், திருமணத்துக்கு முன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக தனது மனைவிக்கு நிலாவில் இடம் வாங்கி பரிசளிக்க திட்டமிட்டேன். இதுதொடர்பாக எனது நண்பர்களிடம் ஆலோசித்தேன். அவரது உதவியுடன் லூனா சொசைட்டி இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் நிலாவில் நிலம் வாங்கினேன். பின்னர் நிலம் வாங்கியதற்கான பதிவு சான்றை எனது மனைவியிடம் கொடுத்தபோது அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாக கூறினார்.
- போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
- பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே கீரமங்கலம் தர்மர் கோவிலை சேர்ந்தவர் சரவணன் மகன் மணிகண்டன் (வயது 23). சிவகங்கை மாவட்டம், புதுவயல் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கணேசன் மகள் பிரதீபா (20). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில் பிரதீபாவை காணவில்லை என்று அவரது தாய் உமா சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மணிகண்டன்-பிரதீபா இருவரும் பழனி கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து ஆலங்குடி போலீசார் சாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் காதல் ஜோடி இருவரையும் சாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
- இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர்.
- காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெய்ஜிங்:
காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை நல்ல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகின்றன. என்றாலும் அதிலும் பல்வேறு பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.
சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி அடிக்கடி பல இடங்களுக்கு சென்று தங்களின் காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு இருவரும் 'லிப்லாக்' எனப்படும் உதட்டு முத்தம் கொடுத்துள்ளனர்.
இருவரும் உதட்டோடு உதட்டை வைத்து சுமார் 10 நிமிடங்களுக்கு விடாமல் முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென்று காதலனின் காதில் ஊசி குத்துவது போன்று வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது காதலியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உதட்டு முத்தத்தை நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்துள்ளனர். ஆனால் காதலனின் காதில் ஏற்பட்ட வலி நேரம் செல்ல செல்ல அதிகரித்ததோடு, அவரின் கேட்கும் திறனும் குறைந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக இருவரும் மருத்துவ மனைக்கு சென்றனர். அங்கு காதலனுக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டனர். அப்போது அவரது காதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புற பகுதியை பிரிக்கும் சிறிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியில் சிறு அளவிலான 2 துளைகள் இருப்பது தெரியவந்தது. அதுதான் அவரது காது வலிக்கு காரணம் என்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். உணர்ச்சிவசப்பட்டு கொடுக்கும் முத்தம் காதுக்குள் காற்றழுத்தத்தில் விரைவான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றனர்.
இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் முழுமையாக குணமடைய 2 மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். காதலன் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனையே இழந்த சம்பவம் காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- விஜய் மது பழக்கத்திற்க்கு அடிமையானதால் காதலி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் விஜய் (27). இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் விஜய் மது பழக்கத்திற்க்கு அடிமையானதால் காதலி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த விஜய் எறும்புகளை அழிக்க பயன்படுத்தும் டர்பண்ட் ஆயிலை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
- வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.
- சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா.
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."
புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக்கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை."
இப்போது ஞானி சொன்னார்,
"இது தான் திருமணம்!".
- முகமது ஷோயப் இளம்பெண்ணின் பெற்றோரின் கண்ணில் படாமல் இருப்பதற்காக மறைவான பகுதிக்கு ஓடினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத் போர பண்டாவை சேர்ந்தவர் முகமது சவுகத் அலி. இவரது மகன் முகமது ஷோயப் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
தினமும் காலையில் வேலைக்கு செல்லும் முகமது ஷோயப் நள்ளிரவு ஒரு மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை முகமது ஷோயப் காதலித்து வந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு வேலையில் இருந்து வந்த முகமது ஷோயப் காதலியை ரகசியமாக சந்திக்க முடிவு செய்தார். முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு காதலி வீட்டில் 3-வது மாடிக்கு சென்றார்.
அங்கு வந்த காதலியுடன் சுவாரிசியமாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இளம் பெண்ணின் பெற்றோர் திடீரென மாடிக்கு வந்தனர்.
இதனை கண்ட முகமது ஷோயப் இளம்பெண்ணின் பெற்றோரின் கண்ணில் படாமல் இருப்பதற்காக மறைவான பகுதிக்கு ஓடினார்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கால் தடுக்கி 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக முகமது ஷோயாப்பின் தந்தை முகமது சவுகத் அலிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அலறியடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த முகமது சவுகத் அலி மற்றும் அவரது உறவினர்கள் முகமது ஷோயப்பை மீட்டு சிகிச்சைக்காக உஸ்மானியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போர பண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் திரும்பி வரவில்லை.
- கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவருடன் பழகிவந்தது தெரியவந்தது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த காட்டாவூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம் பெண் கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2019 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவிலலை.
இதுகுறித்து பொன்னேரி போலீஸ்நிலையத்தில் இளம்பெண்ணின் கணவர் புகார் செய்தார். விசாரணையில் மாயமான இளம்பெண் கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவருடன் பழகிவந்தது தெரியவந்தது.
இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி அடுத்த மாதவரம் முஸ்லிம் நகரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி மாயமானார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.
- இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே நீங்காரவிளை, முளகுமூடு, பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவர் சினேகா (25) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது மது அருந்தி விட்டு வந்து மனைவி சினேகாவிடம் தகராறு செய்வது வழக்கம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வந்து மனைவி சினேகாவை அடித்து கொடுமை படுத்தி உள்ளார். அவர் தனது 3 பிள்ளைகளையும் அழைத் துக் கொண்டு தன் தந்தை வீட்டுக்கு சென்றார். மனைவி தன்னை விட்டு சென்றதை எண்ணி மன வேதனையில் சுரேஷ் இருந்து வந்தார். சம்பவத் தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறி கம்பியில் தூக்கில் தொங்கி னார்.
இதை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பார்த்து சினேகாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்து உடனே திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சினேகா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடினார்கள்.
- நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
நாகர்கோவில்:
சென்னை வடபழனியைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.
அவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் நேரில் சந்தித்து பேசினார்கள். இந்நிலையில் வீட்டிலிருந்த மாணவி மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.
ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடினார்கள். அப்போது மாணவி வாலிபருடன் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து மாணவியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக அவர் செல்போனில் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். இதனால் அவரை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. ஒரு மாதமாக தேடியும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மாணவி, தனது தோழி ஒருவருக்கு செல்போனில் பேசினார். அவர் தனது தோழியிடம் காதலனை நம்பி வந்ததாகவும் அவர் தனது நகையை விற்று செலவு செய்து விட்டு, தற்பொழுது கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறினார். மேலும் பக்கத்து வீட்டு பெண் ஒருவரின் செல்போனை வாங்கி பேசுவதாக கூறியதுடன் தான் குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தன்னால் கூற இயலவில்லை. எனவே பெற்றோரிடம் தெரிவித்து தன்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசினார். இதையடுத்து மாணவியை அவரது தோழி சமாதானம் செய்தார். மேலும் மாணவியின் பெற்றோரிடம் நடந்த சம்பவத்ததையும் கூறினார். அவர்கள் இந்த தகவலை போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர்.
உடனே சென்னை போலீசார், வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாணவியை மீட்க வடசேரி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மாணவி கூறிய தகவலின் அடிப்படையில் வடசேரி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மாணவி இருந்தது தெரிய வந்தது. அவரை மீட்ட போலீசார், அங்கு இருந்த வாலிபரையும் பிடித்தனர். மீட்கப்பட்ட மாணவியையும் அந்த வாலிபரையும் போலீசார் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
மாணவி மீட்கப்பட்டது குறித்த தகவல் சென்னை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அவர்கள் மாணவியின் பெற்றோரை அழைத்துக் கொண்டு இன்று காலை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.
வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவியுடன் சமூக வலைதளம் மூலமாக பழகி தனது நண்பர் ஒருவரது ஏற்பாட்டில் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்ததாகவும் நாகர்கோவிலில் வாடகை வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் வாலிபர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்ற தகவலும் தெரியவந்தது.
மாணவிக்கு 17 வயதே ஆவதால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வடசேரி வாடகை வீட்டில் மீட்கப்பட்ட மாணவியை போலீசார் நேற்று இரவு விசாரணைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இன்று காலை மீண்டும் மாணவி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது சென்னையில் இருந்து போலீசாரும் மாணவியின் பெற்றோரும் அங்கு வந்தனர். மாணவி அவரது பெற்றோரை பார்த்ததும் கதறி அழுதார். இதையடுத்து அவர்கள் அவரை சமாதானம் செய்தனர். வாலிபரை நம்பி எனது வாழ்க்கையை இழந்து விட்டேன் என்று கூறி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
வடசேரியில் வாடகை வீட்டில் மீட்கப்பட்ட மாணவிக்கு 17 வயதே ஆவதால் அந்த மாணவியரிடம் குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. மீட்கப்பட்ட மாணவியிடம் நடந்த சம்பவத்தை அவர்கள் கேட்டறிந்தனர். விசாரணையின் போது அவரது பெற்றோர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.