search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை, கேரள வாலிபர் கைது

    பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மதுரை

    மதுரையில் 13 வயது சிறுமிக்கு வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் காதல் டார்ச்சர் கொடுப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு புகார் வந்தது.

    இதன் அடிப்படையில் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் ஆலோசனை பேரில், மாநகர தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். 

    மேலும் சிறுமிக்கு வந்த இன்ஸ்டாகிராம் தகவல்கள் சோதித்து பார்க்கப்பட்டது. அப்போது அந்த குறுஞ்செய்தியை அனுப்பியது, கேரளாவைச் சேர்ந்த ஒரு வாலிபர் என்பது தெரியவந்தது. எனவே போலீசார் அந்த நபரை தொடர்பு கொண்டனர். ஆனால் மறுமுனையில் போன் எடுக்கப்படவில்லை. 

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அதிநவீன சாதனங்களுடன் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதில் அந்த வாலிபர் பிடிபட்டார். எனவே அவரை தனிப்படை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். 

    இதில் அவர் கொல்லம் மாவட்டம், செந்தாபூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் லோகேஷ் (வயது 21) என்பது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

    அப்போது அவர், “நான் சிறுமி வசிக்கும் அதே தெருவில் வசித்து வந்தேன். அப்போது அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நான் அவரை காதலிப்பதாக சொன்னேன். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். எனவே இன்ஸ்டாகிராம் மூலம் காதலிக்கும்படி நெருக்கடி கொடுத்தேன். அது இவ்வளவு பெரிய அளவில் பிரச்சனை ஆகும் என்பது எனக்கு தெரியாது” என்று தெரிவித்து உள்ளார். 

    இதனைத் தொடர்ந்து 8-ம் வகுப்பு சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் காதல் டார்ச்சர் கொடுத்ததாக, கேரள வாலிபர் லோகேசை  மாநகர தெற்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×