search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் காதலனுடன் ஓட்டம்: கணவர்- பெற்றோர் அதிர்ச்சி
    X

    திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் காதலனுடன் ஓட்டம்: கணவர்- பெற்றோர் அதிர்ச்சி

    • காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை மீனாட்சிபுரம் அருகே உள்ள புது காலனியை சேர்ந்த 25 வயது வாலிபர் எலக்ட்ரீசினியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் போத்தனூரை சேர்ந்த பட்டதாரியான 23 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 9-ந்தேதி திருமணம் நடந்தது.

    திருமணமான 2-வது நாளில் வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இந்தநிலையில் கணவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என அனுப்பி இருந்தார்.

    இதனால் கணவரும், பெண்ணின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். கணவர் இதுகுறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே அவரது வீட்டின் அருகே வசிக்கும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இளம்பெண்ணை திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×