என் மலர்

  நீங்கள் தேடியது "Priyanka Gandhi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அனைத்து தலைநகரங்களிலும் மகளிர் பேரணியை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
  • இந்த மகளிர் பேரணி 2 மாதங்களுக்கு நடைபெறும் என அக்கட்சி தெரிவித்தது.

  புதுடெல்லி:

  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையில் ஈடுபட்டு உள்ளார். இந்த பாதயாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.

  தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார். பிறகு அவர் ராஜஸ்தான் சென்றுள்ளார்.

  இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

  வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் எங்களது கட்சி சார்பில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி நடத்தப்படும்.

  இந்த மகளிர் பேரணி 2 மாதங்களுக்கு நடைபெறும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடையும்போது, அதன் தொடர்ச்சியாக, பிரியங்கா காந்தியின் மகளிர் பேரணி தொடங்கி நடைபெறும் என தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மத்தியபிரதேசம் வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
  • காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது.

  இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.

  தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என ராகுல் காந்தி பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

  கடைசியாக குஜராத்தில் நடைபயணம் முடிவடைந்த நிலையில், நேற்று காலை மத்தியபிரதேச எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது.

  இருமாநில எல்லையில் உள்ள போடர்லி என்ற கிராமம் வழியாக மத்தியபிரதேசத்துக்கு வந்த ராகுல்காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்தியபிரதேசத்தில், ராகுல்காந்தி பாதயாத்திரை 12 நாட்கள் நடக்கிறது.

  அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் செல்கிறார்கள். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மத்திய பிரதேச மாநிலம் போர்கானில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது.

  இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரியங்கா காந்தி மகன் ரைஹான் வத்ராவும் யாத்திரையில் இணைந்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராகுல் காந்தி நாளை மத்தியப் பிரதேசத்தில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.
  • உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துக் கொள்வது இதுவே முதல் முறை.

  இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.

  தமிழ்நாடை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா என தற்போது குஜராத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

  நேற்றுடன் குஜராத் பயணம் முடிவடைந்த நிலையில், ராகுல் காந்தி நாளை மத்தியப் பிரதேசத்தில் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார்.

  இந்நிலையில், ராகுல் காந்தி நாளை மத்திய பிரதேசத்தில் நுழையும்போது பாதயாத்திரையில் பிரியங்கா காந்தி வத்ரா இணைந்துக் கொள்வார் என்று கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

  உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துக் கொள்வது இதுவே முதல் முறை.

  இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், " பிரியங்கா காந்தி யாத்திரையில் கலந்துகொண்டு தொடர்ந்து நான்கு நாட்கள் பங்கேற்பார்" என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காங்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்
  • இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப்பொருட்களை ஒழிக்க காங்கிரஸ் கட்சி போராடும் என பேச்சு

  காங்ரா:

  இமாச்சல பிரதேசத்தில் வரும் 12ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு வாக்குறுதிகளையும் கொடுத்து வருகின்றனர்.

  இந்நிலையில், காங்ராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசும்போது, இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும், பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்குவோம் என்றும் வாக்குறுதி அளித்தார்.

  இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப்பொருட்களை ஒழிக்க காங்கிரஸ் கட்சி போராடும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஆங்கில வழிப் பள்ளிகளைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.

  இமாச்சல பிரதேசத்தை ஆளும் பாஜகவை கடுமையாக சாடிய அவர், பாஜக ஆட்சியின் கீழ் மாநிலம் கடனில் மூழ்கியுள்ளது என்றும, 63,000 அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவித்தார்.

  தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை சுட்டிக்காட்டிய பிரியங்கா, அதேபோன்று இமாச்சல பிரதேசத்திலும் தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றும் என உறுதி அளித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 1997-ம் ஆண்டு சோனியா காந்தி, கணவர் ராஜீவின் வழித்தடத்தில் அரசியலில் குதித்தார்.
  • 2017-ம் ஆண்டு வரையில் சோனியா தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார்.

  புதுடெல்லி :

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டபோது படுகொலை செய்யப்பட்டார்.

  அதைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு சோனியா காந்தி, கணவர் ராஜீவின் வழித்தடத்தில் அரசியலில் குதித்தார். மறு ஆண்டிலேயே கட்சியின் தலைவரானார். 2017-ம் ஆண்டு வரையில் அவர்தான் தலைவராக இருந்தார். அதன்பின்னர் அவர் மகன் ராகுல் காந்தி, கட்சிக்கு தலைவரானார். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப்பொறுப்பேற்று அவர் பதவி விலகினார். அதன்பின்னர் மீண்டும் சோனியாவே கட்சியின் இடைக்கால தலைவரானார்.

  இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா, ராகுல், பிரியங்கா என அந்தக் குடும்பத்தினர் யாரும் போட்டியிடவில்லை. முன்னாள் மத்திய மந்திரிகள் மல்லிகார்ஜூன கார்கேயும், சசி தரூரும் நேருக்கு நேர் மோதினர். இதில் மல்லிகார்ஜூன கார்கே வென்றார். நேற்று அவர் முறைப்படி கட்சியின் தலைவர் பதவியை ஏற்றார். அவரிடம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை சோனியா ஒப்படைத்தார்.

  அப்போது சோனியாவுக்கு நினைவுப்பரிசாக ராஜீவ் காந்தியின் 'பிரேம்' செய்யப்பட்ட புகைப்படத்தை மல்லிகார்ஜூன கார்கே வழங்கினார். அந்தப் படத்தைப் பெற்று சோனியா உயர்த்திப்பிடித்தபோது, கட்சித்தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

  இதையொட்டி இன்ஸ்டாகிராம் சமூக ஊடக பக்கத்தில் பிரியங்கா ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், " உங்களை எண்ணி பெருமைப்படுகிறேன் அம்மா. உலகம் என்ன சொன்னாலும் சரி, என்ன நினைத்தாலும் சரி, எனக்குத் தெரியும், நீங்கள் அன்புக்காகத்தான் எல்லாவற்றையும் செய்தீர்கள்" என உருகி உள்ளார்.

  அத்துடன் அவர் தனது தாய் சோனியா, தந்தை ராஜீவ் இருவருடைய படத்தையும் வெளியிட்டுள்ளார்.

  சோனியா காந்தி தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றதையொட்டி அந்தக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான், " இந்த மகத்தான நாட்டின் மீது அவர் (சோனியா) கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பில் இருந்து அவர் தனது அரசியல் உத்வேகத்தைப் பெறுகிறார். மக்களும் அதே அன்பையும், நம்பிக்கையையும் அவருக்கு திரும்ப அளித்தனர்" என உருக்கமாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெரும் தொழில் அதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கே பாஜக முன்னுரிமை அளிக்கிறது.
  • ஒரு லட்சம் அரசு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து ஒப்புதல் வழங்கப்படும்.

  சிம்லா:

  இமாச்சல் பிரதேச சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சோலான் பகுதியில் உள்ள தோடோ மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ்பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

  இமாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து ஒப்புதல் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம்.

  மாநிலத்தை ஆளும் பாஜக அரசு ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு பணத்தை வழங்குவது இல்லை. பெரும் தொழில் அதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கே பாஜக முன்னுரிமை அளிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக அரசுப் பதவிகள் காலியாக உள்ளன. இளைஞர்கள், அரசு ஊழியர்கள், பெண்கள் பற்றி அவர்கள் சிந்திப்பது இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, சோலன் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்ற பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சசி தரூர் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் கடும் போட்டி உருவாகும் என்று கூறப்படுகிறது.
  • 150 நாட்கள் நடைபெறும் பாத யாத்திரையில் ராகுலின் கவனம் தற்போது உள்ளது.

  புதுடெல்லி:

  காங்கிரஸ் கட்சிக்கு அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவுஎடுக்கப்பட்டது.

  இதையடுத்து செப்டம்பர் 22-ந் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது. 24-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. 30-ந் தேதி வரை மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படும் பட்சத்தில் 17-ந் தேதி டெல்லியில் ஓட்டுப்பதிவு நடைபெறும். சுமார் 9 ஆயிரம் பேர் வாக்களிப்பார்கள். 19-ந் தேதி வாக்குகள் எண்ணி முடிவு வெளியிடப்படும்.

  தற்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தியை ஏக மனதாக மீண்டும் தேர்ந்தெடுக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது. மல்லிகார்ஜூன கார்கே, அசோக் கெலாட் உள்பட மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியை தேர்தலில் போட்டியிட செய்ய தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

  ஆனால் தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று ராகுல்காந்தி பிடிவாதமாக கூறி வந்தார். பிரியங்காவையும் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கக்கூடாது என்று அவர் தடை விதித்துள்ளார். தங்கள் குடும்பத்தை சேராத ஒருவரை தலைவர் பதவியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.

  இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜி-23 தலைவர்களின் சார்பில் ஒருவரை களம் இறக்க முடிவு செய்துள்ளனர். சசி தரூரை களம் இறக்க எதிர்ப்பாளர்கள் தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

  அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ஆதரவு திரட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.

  சசி தரூர் தலைவர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் கடும் போட்டி உருவாகும் என்று கூறப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி களில் ஈடுபட்டுள்ளனர்.

  இதற்கிடையே தலைவர் பதவிக்கு வாக்களிப்பவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஆனால் வாக்களிப்பவர்களின் பட்டியலை வெளியிட ராகுல் ஆதரவாளர்கள் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.

  இந்த சிக்கல்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் ராகுலை களத்தில் இறக்கியே தீர வேண்டும் என்பதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீண்டும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பி உள்ள ராகுலிடம் மீண்டும் மூத்த தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

  எதிர்ப்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அது காங்கிரசை மேலும் பாதிக்கும் என்று ராகுல் காந்தியிடம் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல்காந்தி மனதில் சற்று மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவரது பிடிவாதம் தளர்வதாக மூத்த தலைவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

  எனவே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை டெல்லியில் நடக்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் ராகுல் உரையாற்ற உள்ளார். அதன் பிறகு அவர் கன்னியாகுமரியில் பாத யாத்திரை தொடங்கும் நிகழ்ச்சிகளுக்கு தயாராகிறார்.

  150 நாட்கள் நடைபெறும் பாத யாத்திரையில் ராகுலின் கவனம் தற்போது உள்ளது. இந்த நிலையில் தலைவர் தேர்தலுக்கான மனு தாக்கலும் அதே கால கட்டத்தில் நடைபெற உள்ளது. ராகுல் தலைவர் பதவிக்கு போட்டியிட முன்வரும் பட்சத்தில் பாத யாத்திரையை ஒருநாள் மட்டும் இடைவெளி விட்டு மனு தாக்கல் செய்ய வருவார் என்று மூத்த தலைவர் ஒருவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

  ராகுலை சமரசம் செய்யும் விஷயத்தில் கடைசி வரை போராடுவோம் என்று மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், மல்லிகார்ஜூன கார்கே, சல்மான் குர்ஷித் உறுதிபட தெரிவித்தனர். எனவே ராகுல் தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டுக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார்.
  • காங்கிரஸ் கட்சி ஒற்றுமை நடைபயணம் நடத்தும் நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் சில வாரங்கள் தள்ளிப்போகலாம்.

  புதுடெல்லி:

  நாட்டின் முதுபெரும் கட்சியான காங்கிரஸ், கடந்த 2014, 2019 என தொடர்ந்து இரு பாராளுமன்ற தேர்தல்களில் அடுத்தடுத்து படுதோல்வியைத் தழுவியது. கட்சியின் மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக காங்கிரசிலிருந்து விலகி வருகின்றனர்.

  ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கபில் சிபல், அமரிந்தர் சிங், சுனில் ஜாக்கர், அஸ்வினி குமார், ஆர்.பி.என்.சிங், ஹர்திக் படேல், ஜித்தின் பிரசாதா. ஜெய்வீர் ஷெர்கில் என பல தலைவர்கள் காங்கிரசில் இருந்து சமீப காலத்தில் விலகி உள்ளனர்.

  கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்துவந்த குலாம் நபி ஆசாத்தும் கட்சியுடனான தனது 50 ஆண்டு கால தொடர்பை முடித்துக்கொண்டு, நேற்று முன்தினம் காங்கிரசில் இருந்து விலகினார். அதுமட்டுமின்றி, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது அவர் சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினார். இது அந்தக் கட்சியில் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

  இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டுக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். அவருடன் ராகுலும், பிரியங்காவும் சென்றுள்ளனர்.

  குலாம் நபி ஆசாத் விலகல் பற்றி அவர்கள் நேரடியாக எந்தக் கருத்தும் இதுவரை வெளியிடவில்லை.

  இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது தொடர்பாக கட்சியின் அதிக அதிகாரமிக்க அமைப்பான காரிய கமிட்டி கூட்டம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

  வெளிநாட்டில் இருந்தவாறு சோனியா காந்தியும், ராகுல், பிரியங்காவும் இதில் காணொலிக்காட்சி வழியாக கலந்து கொள்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேர்தல் அட்டவணை இறுதிசெய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும்.

  கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கி காங்கிரஸ் கட்சி ஒற்றுமை நடைபயணம் நடத்தும் நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் சில வாரங்கள் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

  இந்த ஆண்டு ஆகஸ்டு 21 மற்றும் செப்டம்பர் 20-க்கு இடையே காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

  இன்றைய காரியக்குழு கூட்டத்தில் சோனியா காந்திக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆன தங்கள் ஆதரவை காரியக்குழு உறுப்பினர்கள் உறுதிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
  • அரசியல் சட்டம்தான் நீதிக்கான போராட்டத்தில் பெண்களுக்கு துணிச்சல் அளிக்கிறது.

  புதுடெல்லி :

  கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி கூட்டாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 பேரை குஜராத் மாநில அரசு கடந்த 15-ந்தேதி விடுதலை செய்தது. இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

  இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' என்று வெற்று கோஷம் எழுப்புபவர்கள், கற்பழிப்பு குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள். இது, பெண்களின் மரியாதை, உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை. பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது 'டுவிட்டர்' பக்கத்தில், ''11 கற்பழிப்பு குற்றவாளிகள் விடுதலையில் மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது. அரசியல் சட்டம்தான் நீதிக்கான போராட்டத்தில் பெண்களுக்கு துணிச்சல் அளிக்கிறது. பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சோனியா, ராகுலை தொடர்ந்து அந்த குடும்பத்தில் உள்ள பிரியங்காவை தலைமை பொறுப்புக்கு கொண்டு வரலாம் என்று சிலர் தீவிரமாக உள்ளனர்.
  • அசோக் கெலாட் அல்லது மல்லிகார்ஜூன கார்கே ஆகிய இருவரில் ஒருவரை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்ய அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

  புதுடெல்லி:

  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார்.

  இதனால் இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்றார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபட இயலவில்லை.

  இதையடுத்து குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்பட 23 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்து புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினார்கள். இதையடுத்து ஆகஸ்டு 21-ந் தேதி முதல் செப்டம்பர் 21-ந் தேதிக்குள் காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

  இந்தநிலையில் ராகுல்காந்தியை மீண்டும் தலைவராக்க சில மூத்த தலைவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என்று ராகுல்காந்தி பிடிவாதமாக மறுத்து வருகிறார். இதனால் வருகிற 28-ந் தேதி சோனியா காந்தி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

  காங்கிரஸ் தலைவர் பதவி தொடர்பாக 28-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. சோனியா சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதால் அவர் தற்காலிகமாக தலைவர் ஒருவரை தேர்வு செய்ய விரும்புகிறார். அசோக் கெலாட் அல்லது மல்லிகார்ஜூன கார்கே ஆகிய இருவரில் ஒருவரை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்ய அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

  இதில் அசோக் கெலாட்டுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கடைசி வரை ராகுலை தலைவராக்க போராடுவேன் என்று தெரிவித்து உள்ளார்.

  ஆனால் ராகுல் பிடிவாதமாக இருப்பதால் தற்காலிகமாக ஒருவர் தலைவர் பதவியில் இருப்பார் என்று தெரிகிறது. இது தொடர்பாக காங்கிரசின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

  சோனியா, ராகுலை தொடர்ந்து அந்த குடும்பத்தில் உள்ள பிரியங்காவை தலைமை பொறுப்புக்கு கொண்டு வரலாம் என்று சிலர் தீவிரமாக உள்ளனர். ஆனால் பிரியங்காவை தலைவராக்க ராகுல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

  இந்த நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சியில் உள்ள குலாம்நபி ஆசாத் தலைமையிலான எதிர்ப்பாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுத ஆலோசித்து வருகிறார்கள். அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் தலைவர் பொறுப்புக்கு ஒருவரை தேர்வு செய்ய அவர்கள் வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது.

  அசோக் கெலாட், மல்லிகார்ஜூன கார்கே தவிர முகுல் வாசினிக், மீரா குமார், குமாரி செல்ஜா, சுசில் குமார் ஷின்டே ஆகியோரது பெயர்களும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. ஏக மனதாக தேர்வு செய்யப்பட முடியாத பட்சத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தலாமா என்றும் ஆலோசிக்கப்படுகிறது.

  தேர்தல் நடத்தப்பட்டால் எதிர்ப்பாளர்கள் தரப்பில் இருந்து ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று சோனியாவை எதிர்க்கும் 23 தலைவர்களில் ஒருவர் உறுதிபட தெரிவித்து உள்ளார். இதனால் காங்கிரஸ் தலைவராக யார் தேர்வு பெறுவார்? எப்படி தேர்வு பெறுவார் என்பதில் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சோனியாவுடன் அவரது மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் செல்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தலைவர் பதவியை ராகுல் ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

  புதுடெல்லி:

  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட இயலவில்லை.

  என்றாலும், காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்று கட்சி பணிகளை மேற்கொண்டுள்ளார்.

  இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் அடுத்தடுத்து 3 தடவை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு சோனியா மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளார்.

  இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், 'காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு செல்ல இருக்கிறார். சிகிச்சை முடிந்து திரும்பி வரும் வழியில் அவர் இத்தாலி சென்று தனது தாயாரை சந்தித்து பேசிவிட்டு டெல்லி திரும்புவார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

  ஆனால் சோனியா எந்த நாட்டுக்கு சிகிச்சைக்காக செல்கிறார்? எப்போது செல்கிறார்? என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

  சோனியாவுடன் அவரது மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் செல்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ராகுல் காந்தி பேசுவது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்பிறகு செப்டம்பர் 7-ந் தேதி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து பாத யாத்திரையை தொடங்க உள்ளார். எனவே அதற்கு முன்னதாக அவர் சோனியாவை அழைத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

  இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்தல் அடுத்த மாத இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பும் இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தலைவர் பதவியை ராகுல் ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் சோனியா உடல் நலக்குறைவு மற்றும் கட்சி பணிகளால் ராகுல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்.

  இந்த நிலையில் அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்பாரா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.