search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜனதா"

    • நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளரான நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பியூஷ் கோயல் துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பாராளுமன்ற மக்களை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி மே மாதம் ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மாநில மற்றும் தேசிய கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பமனு தாக்கல் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று மதியம் 3 மணியுடன் முடிவடைந்தது.

    பல்வேறு மாநில கட்சிகள் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கியுள்ள காங்கிரஸ் கட்சி ஏப்ரல் ஐந்தாம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடும் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் ஆளும் பா.ஜனதா தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை இன்று அறிவித்துள்ளது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ள ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த குழுவில் 27 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளராகவும், பியூஷ் கோயல் துணை ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், அருணாச்சல பிரசேதம், ஒடிசா, குஜராத், அசாம், சத்தீஷ்கர், மத்தயி பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், டெல்லி, ஹரியானா, கேரளா மாநிலங்களை சேர்ந்த 24 உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம் பெறவில்லை. அதேபோல் ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து யாரும் உறுப்பினராக இடம்பெறவில்லை.

    • 2019-ம் ஆண்டு மதசார்பற்ற ஜனபக்சம் கட்சியை தொடங்கினார் பிசி ஜார்ஜ்.
    • இவர் கேரள மாநிலத்தில் ஏழு முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர்.

    கேரள மாநிலத்தில் ஏழு முறையாக எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர் பிசி ஜார்ஜ். இவர் அம்மாநிலத்தில் மதசார்பற்ற கேரள ஜனபக்சம் என்ற கட்சியை தொடங்கிய நடத்தி வந்தார். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் தனது கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்துக் கொண்டார்.

    டெல்லியில் நடைபெற்ற இணைப்பு விழாவில் ஜார்ஜ் உடன், அவரது மகன் ஷான் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டார். இதில் கேரள மாநிலத்திற்கான அரசியல் விவகாரத்திற்கான பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மூத்த பா.ஜனதா தவைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்தியாவின் 2047 விக்சித் பாரத்திற்கான பிரதமர் மோடியின் திட்டத்திற்கான முழு நம்பிக்கையை இந்த கட்சி இணைப்பு காட்டுகிறது என ஜார்ஜ் தெரிவித்தார்.

    கேரளாவில் பா.ஜனதாகடசி வளர்ச்சி அடைய வரலாற்று பாதை தொடங்கியுள்ளது. மேலும், பிரதமர் மோடியின் திட்டம் நாட்டின் வளர்ச்சியாக மாறுவதற்கும் இந்த இணைப்பு பங்களிக்கும் என பா.ஜனதாவின் தேசிய செயலாளர் அனில் அந்தோணி தெரிவித்துள்ளார்.

    ஜார்ஜ் மதசார்பற்ற கேரளா ஜனபக்சம் கட்சியை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கினார். முன்னதாக மதசார்பற்ற கேரளா காங்கிரஸ் இருந்தவர். பூஞ்சார் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை ஏழு முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜனதா 163 இடங்களில் வெற்றி பெற்றது.
    • சிவ்ராஜ் சிங் தொடர்ந்து முதல்வராக நீடிப்பார் எனக் கருதப்பட்ட நிலையில் மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சியை பிடித்து சாதனை படைத்தது.

    இந்த 3 மாநிலங்களிலும் 3 புதிய முகங்களை முதல்-மந்திரி பதவிக்கு பா.ஜனதா மேலிடம் தேர்வு செய்திருக்கிறது.

    மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வரும் பா.ஜனதா இந்த தடவை அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது. அங்கு மோகன் யாதவ் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். 54 வயதாகும் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும், பா.ஜனதா கட்சியிலும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில புதிய முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. மோகன் யாதவ் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    பதவி ஏற்கும் விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மோகன் யாதவுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மோகன் யாதவுடன் மந்திரிகளும் பதவியேற்றுக் கொண்டனர். ராஜேந்திர சுக்லா, ஜெகதீஷ் தேவ்தா இருவரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.

    • ஐந்து மாநில தேர்தலில்களில் 12 எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
    • ராஜினாமா செய்துள்ள அவர்களுக்கு மாநில மந்திரி சபையில இடம் கிடைக்க வாய்ப்பு

    கடந்த மாதம் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் காங்கிரசும், மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் (மாநில கட்சி) ஆட்சியை கைப்பற்றின.

    இந்த தேர்தலில், மத்திய மந்திரிகளாக இருந்த சிலரும், எம்.பி.க்கள் சிலரும் போட்டியிட்டனர். இவர்களில் 12 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

    வெற்றி பெற்றவர்களில் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர், நீர்வளத்துறை இணை மந்திரி பிரகலாத்சிங் பட்டேல் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். 2 மத்திய மந்திரிகளும் நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதேபோல், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் சிங், உத்ய பிரதாப் சிங் மற்றும் ரித்தி பதக், ராஜஸ்தானை சேர்ந்த கிரோடி லால் மீனா, தியா குமாரி மற்றும் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சத்தீஸ்கரைச் சேர்ந்த கோமதி சாய், அருண் சாவ் ஆகியோரும் நேற்று தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

    இந்த 12 எம்.பி.க்களில் கிரோடிலால் மீனாவை தவிர மற்ற அனைவரும் மக்களவை உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜினாமா செய்துள்ளது 12 எம்.பி.க்களும் 3 மாநிலங்களில் அமையும் பா.ஜனதா அரசுகளில் இடம்பெறுவார்கள் என்று தெரிகிறது.

    12 பேரும் ராஜினாமா கடிதங்களை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அளித்தனர்.

    அப்போது பா.ஜனதா தேசிய தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜே.பி.நட்டா உடன் இருந்தார். முன்னதாக அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து ஆசி பெற்றனர். இதற்கிடையே, மாநிலங்களவை எம்.பி. கிரோடி லால் மீனாவின் ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டதாக மாநிலங்களவையில் அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.

    முன்னதாக சபையில் பேசிய கிரோடி லால் மீனா, பசுவை தேசிய விலங்காக அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்திய கலாசாரத்தின் அங்கம் பசு என்பதால், அதை தேசிய விலங்காக அறிவிப்பதற்கான காலம் கனிந்து விட்டதாக அவர் கூறினார்.

    மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே பா.ஜனதா ஆட்சிதான் இருந்தது. அங்கு சிவராஜ்சிங் சவுகான் முதல்-மந்திரியாக இருந்தார். இவர் ஏற்கனவே 4 முறை முதல்-மந்திரியாக இருந்துள்ளதால் இந்த முறை புதுமுகத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுமுகமாக நரேந்திரசிங் தோமர் அல்லது பிரகலாத் சிங் பட்டேலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்றும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 71 வயதான ராமன் சிங்குக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே அங்கு முதல்-மந்திரியாக இருந்தார்கள்.

    ஆனால், வசுந்தரா ராஜேவுக்கு கட்சி மேலிடத்துடன் சுமுக உறவு இல்லை என்று கூறப்படுகிறது.

    ராமன்சிங்குக்கு வயதாகி விட்டதால், இளம் தலைமுறையை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரியாக நியமிக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. ஓ.பி.சி. சமூகத்தை சேர்ந்த அருண் சாவ், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த கோமதி சாய் ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கு பரிசீலிக்கப்படுகிறார்கள்.

    3 மாநிலங்களிலும் துணை முதல்-மந்திரிகள் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பை பா.ஜனதா வட்டாரங்கள் மறுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, 3 மாநிலங்களிலும் முதல்-மந்திரி தேர்வு அமையும் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

    தற்போது மத்திய மந்திரிசபையில் இருந்து மந்திரிகள் வெளியேறுவதால் மத்திய மந்திரிசபை வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மாற்றி அமைக்கப்படுமா? இல்லையா? என்பது டெல்லியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • பா.ஜனதா 5 மாநில தேர்தலுக்கு முன்பாக 10 மாநிலங்களில் ஆட்சி செய்து வந்தது.
    • நான்கு மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ளது.

    4 மாநிலத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக இது பாராளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டி போன்றது. இந்த அரையிறுதி போட்டியில் பா.ஜனதாவுக்கு பாடம் கற்பிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் வர்ணித்தன.

    ஆனால், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. மேலும், மத்திய பிரதேசத்தில் அமோக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் சற்று எதிர்பார்த்திருக்காது. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சி அமைப்பதில் அசோக் கெலாட் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், அவரது நம்பிக்கையை பா.ஜனதா சிதைத்துவிட்டது.

    இந்த மூன்று மாநில வெற்றிகள் மூலம் பா.ஜனதா மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பாக பா.ஜனதா உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், அசாம், ஹரியானா, உத்தரகாண்ட், திரிபுரா, மணிப்பூர், கோவா, அருணாச்சல பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் ஆட்சி செய்து வந்தது.

    இந்த நிலையில் அதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இணைந்து 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    மத்திய அரசின் நலத்திட்டங்கள் மாநில அரசுகளுக்கு சென்றடைய மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே அரசு இருக்க வேண்டும். இரட்டை என்ஜின் அரசு இருந்தால்தான் மக்கள் பயனடைவார்கள் என்பதை பா.ஜனதா தாரக மந்திரிமாக கொண்டுள்ளது. தற்போது இந்த இரட்டை என்ஜின் ஆட்சியில் மேலும் இரண்டு மாநிலங்கள் இணைந்துள்ளன.

    • பதட்டம் நிலவியதால் போலீசார் விரைந்தனர்
    • தாங்களாகவே படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் உள்ளன.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் பகுதியில் பம்மத்திலிருந்து வெட்டுமணி வரை 2¾ கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அடிப்பகுதியில் சாலையின் இரு பக்கங்களிலும் பொது மக்கள் நடந்து செல்ல நடை பாதை அமைக்கப்பட்டது.

    இதில் பொது மக்களுக்கு நடந்து செல்ல வசதியாக பல பகுதிகளில் படிக்கட்டு களும் அமைக்கப்ப ட்டுள்ளது. இதில் உயர்வாக காணப்படும் பகுதிகளில் சில கடை வியாபாரிகள், ஆக்கிரமிப்பு செய்ததோடு தங்களுக்கு வசதியாக கடைகளில் இருந்து நடைபாதைக்கு செல்லும் வழியின் மேற்பகுதிகளில் சீட்டுகளை அமைத்து கடையாக மாற்றி உள்ளனர். மேலும் சாலையிலிருந்து கடைக்கு செல்ல நடை பாதையை உடைத்து, தாங்களாகவே படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார்கள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் காந்தி மைதானத்தை தொட்டு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு கடைக்கு படி அமைக்க முயன்றனர். அவர்கள் கனரக வாகனம் மூலம் நடைபாதையை உடைத்தனர். மேலும் நடைபாதையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த கிரில்களையும் உடைத்து எடுத்துள்ளனர்,

    இதை கேள்விப்பட்ட பா.ஜ.க. மாநில வழக்கறிஞர் பிரிவு, குழித்துறை நகர பா.ஜ.க. தலைவர் சுமன், கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் பிரதாப், உமேஷ் உட்பட நிர்வாகிகள் அங்கு வந்தனர். அவர்கள் நடைபாதையை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததோடு போராட்டமும் நடத்தினர்.

    இதையடுத்து சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நடைபாதையை இடிக்க பயன்படுத்திய கனரக எந்திர வாகனம் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வர பா.ஜனதா எண்ணுகிறது என்று ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
    • இந்தியாவில் 8.1 சதவீதம் வேலையின்மை உள்ளது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற் றுமை பயண ஓராண்டு நிறைவு விழா மற்றும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற் றது. கூட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் எஸ்.ஆர்ம்ஸ்ட்ராங் பெர் ணாண்டோர் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராம சாமி, மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் மலேசியா பாண்டியன், திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினர் கருமாணிக்கம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பி னர்கள் ராஜராம்பாண்டி யன், தெய்வேந்திரன், ரமேஸ்பாபு, கோட்டை முத்து, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச் சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சோ.பா.ரெங்க நாதன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    நகர் தலைவர் ஜோ.ராஜீவ்காந்தி வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசியதா வது:-

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மூத்த உறுப்பினர் ராகுல்காந்தி எம்.பி., இந்திய ஒற்றுமை பயணத்தை துவங்கி 4,000 கிலோ மீட்டர் நடைபயணம் நடைபெற்றது. இந்த நடைபயணம் நாடு முழுவதிலும் பெரும் வர வேற்றை பெற்று மன வலி மையை நிருபித்து காட்டிய வர் ராகுல் காந்தி. பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பை ஏற்ப டுத்துவதாக தெரிவித்தார். ஆனால் இன்று நாட்டில் வேலை இல்லாத நிலை அதி கரித்துள்ளது.

    இளைஞர்கள் 22 சதவீதம் வேலையின்மை, பட்டதாரி கள் மத்தியில் 42 சதவீதம் வேலையின்மை என மொத் தமாக இந்தியாவில் 8.1 சதவீதம் வேலையின்மை உள்ளது. இதுவே செயல் இழந்த அரசு என்பதற்கு உதாரணம். பா.ஜ.க. ஆட்சி யில் கடந்த பத்து ஆண்டுகள் இந்திய பூமி கலவர பூமியாக மாறிவிட்டது. மணிப்பூர் மாநிலம் கடந்த 150 நாட்க ளாக பற்றி எரிகிறது. 60 ஆயிரம் பேர் உள்நாட்டில் அகதிகளாக இருந்து வரு கின்றனர். 600-க்கும் மேற் பட்டவர்கள் உயிரிழந்துள் ளனர்.

    பெண்கள் பாலியலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். ஆனால் எத்தனையே நாடு கள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் மணிப்பூர் மாநி லத்திற்கு மட்டும் செல்லாதது அரசியல் ஆதாயத்தை தேடு கிறார் என்பதை காட்டுகிறது.

    நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி மீண்டும் ஆட் சிக்கு வந்துவிடலாம் என எண்ணுவதை தடுக்க வேண் டும். பா.ஜ.க. கொண்டு வந்துள்ள பெண்க ளுக்கான இட ஒதுக்கீடு சில திருத் தங்கள் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி தான் நிறை வேற்றும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது
    • அமெரிக்க அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்

    ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்தி வருகிறது. 200 மாநாடு 32 இடங்களில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்திலும் மாநாடு நடைபெற்றது. உச்சி மாநாடு டெல்லியில் அடுத்த மாதம் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    இதனால் டெல்லி நகரை அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சுவர்கள் அனைத்திலும் வண்ண வண்ண படங்கள் வரைதல், மரங்கள் வளர்த்தல், பூச்செடி வைத்தல், சாலைகள் சீரமைப்பு போன்ற பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    டெல்லி என்றாலே மத்திய அரசுக்கும், அம்மாநில அரசுக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. தற்போது டெல்லியை அழகுப்படுத்துவதிலும் பா.ஜனதாவுக்கும், ஆம்ஆத்மிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    டெல்லி மாநில அரசின் செலவில்தான் நகரம் புதுப்பொழிவாக ஜொலிக்க இருக்கிறது என்கிறது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், மத்திய அரசுதான் பணம் செலவழிக்கிறது என்கிறார் டெல்லி மாநில பா.ஜனதா தலைவர். இதனால் டெல்லியை அழகுபடுத்தும் பணியில் பணம் செலவழிப்பது யார்? என்பதில் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.

    கடந்த வாரம் டெல்லி மாநில பா.ஜனதா தலைவர் விரேந்த்ரா சச்வாடா கூறுகையில் ''டெல்லியில் ஜி-20 மாநாட்டிற்காக, நகரை அழகுப்படுத்தும் பணிகளை டெல்லி அரசு மற்றும் டெல்லி மாநகராட்சி செய்து வருகின்றன. ஆனால், இவை அனைத்தும் மத்திய அரசு வழங்கும் நிதியில் இருந்து செய்யப்படுகிறது'' என்றார்.

    இதற்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் ''புதுடெல்லி நகராட்சி கார்பரேசன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் சாலைகள் தொடர்பான திட்டத்திற்கு மட்டும் மத்திய அரசு பணம் அளித்துள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியால் செய்த வேலைகளை பா.ஜதான செய்தது என்று சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுப்பணித்துறை சாலைகளுக்கு அனைத்து பணமும் டெல்லி அரசின் பொதுப்பணித்துறையால் செலவழிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எம்.சி.டி. சாலைகள் பணிக்கான செலவை எம்சிடி செய்துள்ளது'' என பதிலடி கொடுக்கப்பட்டது.

    இதற்கு சச்வாடா பதில் கூறுகையில் ''டெல்லியை அழகுப்படுத்துவதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. மத்திய அரசு செய்த வேலைகளை ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவால் மந்திரிகள், தாங்கள் செய்ததாக பெயரை தட்டிச்செல்ல பார்ப்பது அவமான செயல்'' என்றார்.

    மேலும், "டெல்லியை அழகுப் படுத்துவதற்கான ஒரு திட்டத்தை செய்ததாக கெஜ்ரிவால் அரசால் சொல்ல முடியுமா?" என சாவல் விட்டுள்ளார். 

    • ராதாபுரம் பஸ் நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    வள்ளியூர்:

    நெல்லை தெற்கு மாவட்டம் ராதாபுரம் தெற்கு ஒன்றியம் பா.ஜனதா சார்பில் ராதாபுரம் பஸ் நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராதை காமராஜ் பொறுப்பு வகித்தார். அரசு தொடர்பு பிரிவு தலைவர் வக்கீல் மணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூ.1000 வழங்கிட கோரியும், கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த கோரியும், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தியும், மின்சார கட்டணத்தை குறைத்திட வேண்டியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் கணேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சட்டமன்ற பார்வையாளர் சுந்தரம், கிளை தலைவர் சந்திரன், காரியாகுளம் முருகன், கணபதிநகர் தாசன், தவசிகுமார், சுப்பிரமனியபேரி ஈஸ்வரன், சுபாஸ், முருகன், மாணிக்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு குழுவிலும் இரண்டு பிராந்திய எம்.பி.க்கள் இடம் பெறுவார்கள்
    • ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்

    மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் திட்டம் வகுத்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு போட்டியாக 38 கட்சிகளுடன் கடந்த 18-ந்தேதி டெல்லியில் கூட்டம் நடத்தியது.

    தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். மக்களவை தேர்தல் நெருங்குவதால், தேர்தல் குறித்து திட்டம் வகுக்க, இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமர் மோடி எம்.பி.க்களை 10 குழுக்களாக பிரித்து அவர்களுடன் தினந்தோறும் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஒவ்வொரு குழுவிலும் 35 முதல் 40 எம்.பி.க்கள் இருப்பார்கள் எனத் தெரிகிறது. பிராந்தியம் வகையில் குறிவைக்கும் நோக்கமாக இது பார்க்கப்படுகிறது. ஜூலை 25-ந்தேதியில் இருந்து இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

    இந்த எம்.பி.க்கள் குழு பிராந்தியம் ரீதியில் பிரிக்கப்படுகிறது. ஒவவொரு குரூப்பிலும் இரண்டு பிராந்தியத்தில் உள்ள எம்.பி.க்கள் இடம் பெறுவார்கள். முதல் கூட்டத்தில் உத்தர பிரதேசம் மற்றும் வடகிழக்கு பிராந்திய எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.

    பிரதமர் மோடி மாலை 6.30 மணிக்கு ஒரு கூட்டம், இரவு 7.30 மணிக்கு ஒரு கூட்டம் என இரண்டு கூட்டமாக நடத்த இருக்கிறார். பிரதமர் மோடியுடன் பா.ஜனதா தலைவர் நட்டா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரும் ஒவ்வொரு கூட்டத்திலும் இருப்பார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள சஞ்சீவ் பல்யான், அஜய் பாத், பா.ஜனதா கட்சி அதிகாரிகள், மத்திய அமைச்சர்களும் இடம் பெற இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி 25 வருடத்தை நிறைவு செய்யும் நிலையில் இநத் கூட்டம் நடைபெற இருக்கிறது.

    பிரதமர் மோடி தலைமையில் 2024 மக்களவை தேர்தலை பா.ஜனதா சந்திக்க உள்ளது. இந்த முறை மிகப்பெரிய அளவில் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.

    • எதிர்க்கட்சிகள் முதல் கூட்டத்தில் 14 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்
    • கர்நாடகாவில் நடைபெறும் 2-வது கூட்டத்தில் 24 கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு

    மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி என்றாலும் தனிப்பெரும்பான்மை என்பதால் பா.ஜனதா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த முறையும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    மோடி ஹாட்ரிக் வெற்றி பெற்றால், அது நாட்டிற்கு ஆபத்து எனக் கூறிவரும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதற்கான முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெறுகிறது. அதில் 14 கட்சிகள் இடம் பிடித்திருந்தன. இன்றும், நாளையும் கர்நாடகாவில் நடைபெற இருக்கும் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு போட்டியாக பா.ஜனதா நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை டெல்லியில் நடத்துகிறது. இதில் 30 கட்சிகள் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் பா.ஜனதாவின் இந்த திடீர் கூட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் ''பிரதமர் மோடி, பா.ஜனதா மலைத்துப் போய் உள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் திடீரென தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து யோசித்துள்ளார்.

    அந்த கூட்டணிக்கு மூச்சு கொடுத்து உயிர்கொடுக்க முயற்சிக்கிறார். திடீரென, நாளை டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவே இதுவாகும்'' என்றார்.

    • முன்னால் சென்ற வாகனத்தினை முந்த முயன்று போது முடியாமல் திடீர் என பிரேக் பிடித்தார்.
    • தூக்கி வீசப்பட்ட சசிகலா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், 1010 நெசவாளர் காலனியில் வசிப்பவர் சசிகலா (36). இவர் சென்னிமலை மண்டல பா.ஜனதா கட்சியின் மகளிர் அணி பொதுச்செயளாளராக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில் சகிகலாவுக்கு திருமணம் ஆகி கணவரை பிரிந்து வசித்து அவிநாசி அருகே தெக்கலூரில் தனியார் கார்மெட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்னிமலை- ஈங்கூர் மெயின் ரோட்டில் ஈங்கூர் ெரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தனக்கு முன்னால் சென்ற வாகனத்தினை முந்த முயன்று போது முடியாமல் திடீர் என பிரேக் பிடித்தார்.

    அப்போது தூக்கி வீசப்பட்ட சசிகலா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானர்.

    இது குறித்து சசிகலா அண்ணன் ஜோசப் ராஜப்பா கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×