என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜையில் வெங்கடேசன் எம்.பி., நகர்மன்ற தலைவர் முகமது யாசின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு வஞ்சிக்கிறது-எம்.பி. குற்றச்சாட்டு
- எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு வஞ்சிக்கிறது என்று வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டி உள்ளார்.
- நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூரில் புறநகர் பேருந்து நிறுத்தத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையை வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பலமுறை கேள்வி எழுப்பியும் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து மத்திய பா.ஜனதா அரசு உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு மத்திய அரசின் பங்கான ரூ. 250 கோடியை ஒதுக்கீடு செய்யாமல் 2026-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், நகரமன்ற கவுன்சிலர்கள் அறிவழகன், பாண்டி, கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கண்ணன், காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் மணவாளன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.






