search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில்  பாரதீய ஜனதா கட்சி சார்பில் 21-ந்தேதி கிறிஸ்துமஸ் விழா- மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்கிறார்
    X

    தூத்துக்குடியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் 21-ந்தேதி கிறிஸ்துமஸ் விழா- மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்கிறார்

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுகிறது.
    • தூத்துக்குடியில் முதன்முறை யாக பா.ஜ.க. சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுகிறது.இதற்கான நிகழ்ச்சி வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் பகுதியில் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பா.ஜ.க . தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் உமரி எஸ்.சத்தியசீலன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.

    நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் வக்கீல் வாரியார் வரவேற்று பேசுகிறார். வக்கீல் சின்னத்தம்பி நன்றி கூறுகிறார்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய மந்திரி எல்.முருகன், தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற குழு தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு பா.ஜ.க. துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, பொதுச் செயலாளர் பொன்பாலகணபதி, மாநில சிறுபான்மை பிரிவு பொது செயலாளர் சதீஷ்ராஜா, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு 1000 பேருக்கு இலவச வேட்டி,சேலை மற்றும் 50 பெண்களுக்கு தையல் எந்திரங்களை வழங்கி சிறப்புரையாற்றி கிறிஸ்மஸ் விழா சிறப்பு பிரார்த்தனை செய்து விழாவை கொண்டாடு கின்றனர். தூத்துக்குடியில் முதன்முறை யாக பா.ஜ.க. சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுவதால் பா.ஜ.க. நிர்வாகிகள் விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து வருகின்றனர்.

    Next Story
    ×