iFLICKS தொடர்புக்கு: 8754422764

தமிழகத்தில் செப்டம்பர் 17-ந்தேதி காலாண்டு தேர்வு ஆரம்பம்

தமிழகத்தில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வு வரும் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்க உள்ளது. #QuarterlyExams

ஜூலை 17, 2018 16:04

பாராளுமன்றம் சுமுகமாக இயங்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் - மோடி

நாளை தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக இயங்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஜூலை 17, 2018 16:02

ஊழல் வழக்கில் சிறை - நவாஸ் ஷரீப், மகள் மர்யம் நவாஸின் ஜாமின் மனு நிராகரிப்பு

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப், அவரது மகள் மர்யம் நவாஸ் ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ஜூலை 17, 2018 15:45

ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை நீக்க கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

ஓரினச் சேர்க்கைக்கு எதிரான 377-வது குற்றப்பிரிவு சட்டத்தை நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

ஜூலை 17, 2018 15:37

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.7 லட்சமாக உயர்வு- பீகார் அரசு உத்தரவு

கற்பழிப்பு, ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை ரூ.3 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்த்தி வழங்க பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது. #Bihar

ஜூலை 17, 2018 15:30

பயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்

கனமழை காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மட்டும் கடந்த ஆண்டில் 3600 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.#Potholes

ஜூலை 17, 2018 15:21

ஆட்சி நடத்த தகுதி இருக்கிறதா? ரஜினி-கமலுக்கு ராமதாஸ் சவால்

ஆட்சி நடத்த தகுதி இருக்கிறதா என்பதை அன்புமணியுடன் மேடையில் விவாதித்து ஜெயித்து காட்டவேண்டும் என்று ரஜினி, கமலுக்கு ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.

ஜூலை 17, 2018 15:19

திரும்பி போ ஸ்டாலின் - டுவிட்டரில் டிரெண்டிங் ஆன ஹேஷ்டேக்

தி.மு.க. செயல் தலைவர் லண்டனில் இருந்து சென்னை திரும்ப உள்ளதையொட்டி #GoBackStalin என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. #GoBackStalin #WelcomeStalin

ஜூலை 17, 2018 15:16

ராகுல்காந்தியின் பூர்வீகத்தை கிண்டல் செய்த தலைவர் நீக்கம் - மாயாவதி அதிரடி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பூர்வீகம் குறித்து கிண்டல் செய்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத்தலைவரை பதவிநீக்கம் செய்து மாயாவதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். #Mayawati

ஜூலை 17, 2018 15:04

உ.பி.யில் ஒழுங்காக பணி செய்யாத காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த முதல்மந்திரி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முறையாக பணி செய்யாத 2 காவல் கண்காணிப்பாளர்களை பணியிடை நீக்கம் செய்து முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #UttarPradesh #YogiAdityanath

ஜூலை 17, 2018 15:01

புதினின் முன் நனைந்த நூடுல்ஸ் போல நிற்கிறீர்களே - டிரம்ப் மீது அர்னால்ட் பாய்ச்சல்

ரஷிய அதிபர் புதின் உடனான டிரம்ப் சந்திப்புக்கு பின்னர், சொந்த கட்சியினரே அவரை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், புதின் முன்னால் டிரம்ப் நனைந்த நூடுல்ஸ் போல நிற்பதாக அர்னால்ட் விமர்சித்துள்ளார். #TrumpputinSummit

ஜூலை 17, 2018 14:58

வண்டலூர் அருகே ரூ.16 கோடியில் நவீன உள் விளையாட்டு அரங்கம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் ரூ.16 கோடியில் நவீன உள் விளையாட்டு அரங்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #EdappadiPalaniswami #TNCM

ஜூலை 17, 2018 14:52

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே செப்.12-ம் தேதி டெல்லி வருகை

பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமியின் அழைப்பை ஏற்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே செப்டம்பர் 12-ம் தேதி டெல்லி வருகிறார். #MahindaRajapaksa #RajapaksavisitsDelhi

ஜூலை 17, 2018 14:08

முட்டை கொள்முதலுக்கு ஒதுக்கீடு ரூ.4000 கோடி - எப்படி ரூ.5000 கோடிக்கு ஊழல் நடந்திருக்கும்? ஜெயக்குமார் கேள்வி

முட்டை கொள்முதலுக்காக ரூ.4000 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில், 5000 கோடி ரூபாய்க்கு ஊழல் எப்படி நடந்திருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். #TNEggsTender #Jayakumar

ஜூலை 17, 2018 13:45

5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்

தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. #SouthWestMonsoon

ஜூலை 17, 2018 13:40

லோக் ஆயுக்தா அமைப்பதை விரைவுப்படுத்த வேண்டும்- மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

லோக் ஆயுக்தா, லோக்பால் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SC #Lokayukta

ஜூலை 17, 2018 13:33

சர்வதேச எமோஜி தினத்தில் புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்

சர்வதேச எமோஜி தினத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் 70-க்கும் அதிகமான புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. #WorldEmojiDay

ஜூலை 17, 2018 13:33

412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்விற்கான பயிற்சி 412 மையங்களில் அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #NEETExam #Sengottaiyan

ஜூலை 17, 2018 13:24

பா.ஜனதாவுக்கு தமிழக மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் - தம்பித்துரை

தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பா.ஜனதாவின் ஆசைக்காக மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறினார். #ThambiDurai #BJP

ஜூலை 17, 2018 13:17

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை - 6 அணைகள் நிரம்பின

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருவதால் 6 அணைகள் நிரம்பின. #KadanaNathiDam #RamanathiDam

ஜூலை 17, 2018 13:08

உலகின் முதல் லீப் மைக்ரோஸ்கோப் அறிமுகம் செய்து ஐ.ஐ.டி. மெட்ராஸ் அசத்தல்

உலகின் முதல் லீப் மைக்ரோஸ்கோப் சாதனத்தை ஐ.ஐ.டி. மெட்ராஸ் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஜூலை 17, 2018 12:58

5

ஆசிரியரின் தேர்வுகள்...