என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
லியோ திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தால்?
- சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கலந்துகொண்டார்.
- இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாக வெளியாகியது.
பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. சமீபத்தில், இவர் இயக்கிய படம் ஜெயிலர்.
இதில், ரஜினிகாந்த், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
அதிரடி சண்டை படமாக தயாரான இப்படம் கடந்த வருடம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி உலகளவில் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப்படைத்தது. இந்நிலையில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதாக வெளியாகியது.
சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் லியோ படத்தை எடுத்திருந்தால் யாரை நடிக்க வைத்திருப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்,
நான் லியோ படத்தை இயக்கி இருந்தால் விஜய்யுடன் ஷாருக்கான், மம்மூட்டி மற்றும் மகேஷ் பாபுவை நடிக்க வைத்திருப்பேன். மேலும், கதாநாயகிகளாக நயன்தாரா மற்றும் ஆலியாபட்டை தேர்ந்தெடுத்திருப்பேன். இவ்வாறு கூறினார். பின் யாரை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிரது என்ற கேள்விக்கு மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க ஆசைபடுகிறேன் என்ரு பதிலளித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.