search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Video viral"

    • புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நகைக்கடை பிஎன்ஜி ஜுவல்லர்ஸ்.
    • கலிபோர்னியா நகைக்கடையில் 20 பேர் கொண்ட கும்பல் நகைகளை கொள்ளை அடித்தது.

    வாஷிங்டன்:

    மகாராஷ்டிர மாநிலம் புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது பி.என்.ஜி. ஜூவல்லர்ஸ். இதன் அமெரிக்க கிளை கலிபோர்னியாவில் செயல்பட்டு வருகிறது.

    கலிபோர்னியாவில் உள்ள சன்னிவேல் பகுதியில் உள்ள நகைக்கடையில் 20 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே புகுந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் அங்கிருந்த பல்வேறு நகைகளை சில நிமிடங்களில் கொள்ளை அடித்துச் சென்றது.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. கொள்ளை போன நகைகளின் மதிப்பு வெளியாகவில்லை.

    விசாரணையில், கொள்ளையர்கள் கடையை தொடர்ந்து நோட்டமிட்டதும், முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியதும் தெரிய வந்துள்ளது.

    நகை கொள்ளை தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் நகைக்கடையில் புகுந்து நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நடிகை டாப்சி செல்பி எடுக்க மறுத்து ரசிகர்களின் கோபத்தில் சிக்கி உள்ளார்.
    • ரசிகர் ஒருவர் ஓடோடி சென்று டாப்சியிடம் ஒரே ஒரு செல்பி மேடம் என்று கெஞ்சினார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை டாப்சி.

    தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்சி. இதைத் தொடர்ந்து இவர் காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்தார். மேலும் பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் ஷாருக் கான் நடித்து வெளியான டங்கி படத்திலும் டாப்சி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.


    இந்நிலையில் நடிகை டாப்சி செல்பி எடுக்க மறுத்து ரசிகர்களின் கோபத்தில் சிக்கி உள்ளார்.

    டாப்சி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் ஏறுவதற்காக சென்றபோது போட்டோகிராபர்கள் பின்தொடர்ந்து புகைப்படம் எடுக்க முயற்சித்தனர். அவர்களை கண்டுகொள்ளாமல் சென்றார்.

    ரசிகர் ஒருவர் ஓடோடி சென்று டாப்சியிடம் ஒரே ஒரு செல்பி மேடம் என்று கெஞ்சினார். ஆனால் அவரை தள்ளிப்போங்க என்றபடி பார்வையை அவர் பக்கம் திருப்பாமல் நேராக காரில் ஏறி சென்று விட்டார்.

    இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகிறது. வீடியோவை பார்த்த பலரும் செல்பிக்கு கெஞ்சினால் கண்டு கொள்ளாமல் போவது ஏன்? ஜெயா பச்சன் மாதிரி நடக்கிறீர்களே? படங்கள் தோல்வி அடைவதால் மன அழுத்தமா? என்றெல்லாம் டாப்சியை காட்டமாக திட்டி ஆத்திரத்தை கொட்டி பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

    • தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வெளியான 'சாமி...' பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
    • தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வெளியான 'சாமி...' பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன. இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

    'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், படத்திற்கான புரோமோஷன் வேலைகளையும் படக்குழு தொடங்கியுள்ளது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வெளியான 'சாமி...' பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    இந்தப் பாடலின் ஹூக் ஸ்டெப்புக்கு ரசிகர்கள் பலரும் நடனம் ஆடி வீடியோ பகிர்ந்து வந்தனர். இந்த டிரெண்டில் தற்போது ஹன்சிகாவும் இணைந்துள்ளார். ராஷ்மிகாவின் சாமி ஹூக் ஸ்டெப்புக்கு பாவாடை, தாவணியில் நடனம் ஆடி அசத்தி இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

    • இரண்டு விமானங்கள் ஓடுபாதையில் ஆபத்தான முறையில் நெருங்கி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • சிறிது நேரத்தில் பெரும் விபத்துக்கு வழிவகுத்து இருக்கும்.

    மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஓடுபாதையில் ஆபத்தான முறையில் நெருங்கி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு விமானம் மற்றொரு விமானம் புறப்பட்ட அதே ஓடுபாதையில் தரையிறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இச்சம்பவம் மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதை 27 இல் சனிக்கிழமை அதிகாலையில் இந்தோரின் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்திலிருந்து வந்த இண்டிகோ விமானம் 6E 5053 ஓடுபாதையில் தரையிறங்கியது, அதே நேரத்தில் ஏர் இந்தியா விமானம் AI657 திருவனந்தபுரம் சர்வதேசத்திற்கு புறப்படும் பணியில் இருந்தது விமான நிலையம்.

    விமானங்கள் தரையிறங்கும் மற்றும் புறப்படுவதற்கான நெருங்கிய நேரம் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியது, இது சிறிது நேரத்தில் பெரும் விபத்துக்கு வழிவகுத்து இருக்கும். ஆனால் எந்தவித விபத்து ஏற்படவில்லை. இந்த வீடியோ வைரலால் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


    • சுற்றுலா பயணிகள் ராப்டிங் எனப்படும் நீர் சாகச விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள்.
    • ஒரு பயனர், சுற்றுலா பயணிகளை இவ்வாறு நடத்தக்கூடாது எனபதிவிட்டிருந்தார்.

    இந்தியாவில், ஜூன் மாதம் சுற்றுலாப் பயணிகளின் பரபரப்பான மாதம். நீதிமன்றங்கள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி வசதிகள் மூடப்பட்டுள்ளதால், பலர் நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட இடங்களுக்குச் செல்வார்கள். குறிப்பாக ரிஷிகேஷ் ஆன்மீக சுற்றுலா செல்வது மிகவும் விரும்பும் சுற்றுலா தலமாகும். இங்கே, பார்வையாளர்கள் வெள்ளை நீர் ராஃப்டிங் போன்ற உற்சாகமான உல்லாசப் பயணங்களை மேற்கொள்கின்றனர். கோயில்களைக் கண்டறியலாம் மற்றும் கண்கவர் கங்கா ஆரத்தி போன்றவற்றில் பங்கேற்பார்கள்.

    இந்நிலையில் உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷில் ஏராளமான பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. மேலும் அங்குள்ள ஆற்றில் படகு சவாரி செல்லவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் ராப்டிங் எனப்படும் நீர் சாகச விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இந்நிலையில் ரிஷிகேஷில் சுற்றுலா பயணிகளுக்கும் ராப்டிங் வழிகாட்டிகளுக்கும் இடையிலான மோதல் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    அதில் சுற்றுலா பயணிகளும், ராப்டிங் வழிகாட்டிகளும் படகை நகர்த்தி செல்ல பயன்படுத்தப்படும் துடுப்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கும் காட்சிகள் உள்ளன. வைரலான இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், சுற்றுலா பயணிகளை இவ்வாறு நடத்தக்கூடாது எனபதிவிட்டிருந்தார். அதே நேரம் சில பயனர்கள், வழிகாட்டிகளுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

    • மீட்பு குழுவினர் விரைந்து வந்து ஐபோனை மீட்க முயற்சி செய்தனர்.
    • கேரள மீட்பு குழுவினர் மற்றும் உதவியவர்களுக்கு பெண் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆண்டிலியா சேலட் என்ற இளம்பெண் தனது விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக தனது நண்பர்களுடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு எதிர்பாராத விதமாக அவரது ஐபோன் பாறைகளுக்கிடையே விழுந்தது.

    இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து வந்து ஐபோனை மீட்க முயற்சி செய்தனர். அவர்களது இந்த முயற்சியில் பொதுமக்களும் உதவினர்.

    இதற்கிடையே அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனை பொருட்படுத்தாமல் அவர்கள் கடுமையாக போராடி 7 மணிநேரத்திற்கு பிறகு ஐபோனை மீட்டு இளம்பெண்ணிடம் ஒப்படைத்தனர். இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த அவர் கேரள மீட்பு குழுவினர் மற்றும் உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

    இதற்கு ஆயிரக்கணக்கானோர் தங்களது விருப்பம் மற்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    • பாதுகாவலரை விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.
    • பாதுகாவலரின் கனவை நனவாக்கிய சம்பவம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஒவ்வொருவரும் தங்களது கனவை நனவாக்கவே போராடுகின்றனர். ஆனால் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் தனது பாதுகாவலரின் கனவை நனவாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாகியவர்களில் அனிஷ்பகத் என்பவரும் ஒருவர் ஆவார். இவரிடம் பியாஸ்ஜி என்ற 65 வயதான முதியவர் ஒருவர் பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.

    தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பியாஸ்ஜியை அறிமுகப்படுத்தி அவரிடம் அனிஷ்பகத், இந்த வயதில் ஏன் வேலை செய்கிறீர்கள் என கேட்கிறார். அதற்கு பியாஸ்ஜி, எனக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறான். ஆனால் அவன் என்னை கைவிட்டு விட்டான் என கூறுகிறார்.

    உடனே அவரிடம் அனிஷ்பகத் என்னை மகனாக கருதி கொள்ளுங்கள். உங்களுடைய ஆசை என்ன? என கேட்கிறார். அதற்கு பியாஸ்ஜி, அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது தான் எனது கனவு என்கிறார்.

    உடனே பாதுகாவலரின் கனவை நனவாக்க அனிஷ்பகத் அயோத்திக்கு டிக்கெட் போட்டு தனது பாதுகாவலரை விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.

    இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பயனர்கள் பலரும் அனிஷ்பகத்தின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • பேருந்து நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் மீண்டும் நடந்துள்ளது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கடந்த மாதம் திருச்சூரில் இருந்து கோழிக்கோடுக்கு அரசு பேருந்தில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று தாய், சேய் என இரண்டு உயிர்களை காப்பாற்றினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோவை பார்த்த பயனர்கள், துரிதமாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் பாராட்டினர்.

    இந்நிலையில், பேருந்து நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் மீண்டும் நடந்துள்ளது. அரசு பேருந்தில் பயணித்த வாலிபரின் உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய நடத்துனரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


     19 வினாடிகள் ஓடும் வீடியோவில், மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகளுக்கு பயணச்சீட்டை வழங்கும் பணியில் நடத்துனர் ஈடுபட்டுள்ளார். பேருந்து என்னவோ காலியாக உள்ளது. ஆனால் பேருந்தில் ஏறிய வாலிபரோ உள்ளே செல்லாமல் படிக்கட்டுக்கு நேராக பிடிமானம் இல்லாமல் நின்று கொண்டு பயணச்சீட்டை வாங்கிக்கொள்கிறார். அப்போது வேகத்தில் செல்லும் பேருந்தில் இருந்து தவறி விழும் வாலிபரை ஒரு கைகொடுத்து காப்பாற்றுகிறார் நடத்துனர். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நடத்துனர், வாலிபர் விழுவதை பார்க்காமல் ஒரு கையால் காப்பாற்றுகிறார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • டி20 உலகக் கோப்பை தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது.
    • ஹர்திக் பாண்ட்யாவின் படத்தை தவறாக ஒளிபரப்பியது.

    டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை ஓ.டி.டி.-யில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூகினியா அணிகள் மோதின. இந்த போட்டி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. அப்போது ஒளிபரப்பாளர்கள் இரு அணி வீரர்களின் ஸ்கோரையும், சிறந்த வீரர்கள் யார் என்பவர்களின் படத்தையும் காட்டினார்கள்.

    இதில் பிராண்டன் கிங், சேசா புவா, ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் ஆசாத் வாலா ஆகியோரின் புகைப்படங்களுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவின் படத்தை வைத்துவிட்டது. மேலும், இதே படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஐந்துமுறை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. 

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    • தீவிபத்து நிகழ்ந்தபோது அந்த பெட்ரோல் பங்கில் மற்ற வாகனங்களும் எரிபொருள் நிரப்புவதற்காக நின்று கொண்டிருந்தன.
    • விபத்து சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், புவனகிரி பகுதியில் அமைந்துள்ள நயாரா பெட்ரோல் பங்கில் ஒரு லாரி டீசல் நிரப்ப பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் உடனடியாக பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து துரிதமாக செயல்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த தீ விபத்து சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த தீவிபத்து நிகழ்ந்தபோது அந்த பெட்ரோல் பங்கில் மற்ற வாகனங்களும் எரிபொருள் நிரப்புவதற்காக நின்று கொண்டிருந்தன.

    லாரி டேங்க் வெடித்து தீப்பிடித்ததும் அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தெறித்து ஓடினர். ஆனால், பெட்ரோல் பங்கின் ஊழியர்களில் ஒருவர் மட்டும் துணிவுடன் முன்வந்து ஓடிச்சென்று தீயணைப்பு கருவியை எடுத்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் மற்ற ஊழியர்களும் தீயணைப்பு கருவிகளுடன் வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்து சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீடியோவை சிரஞ்சீவியின் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
    • சிரஞ்சீவியின் வீடியோ ஆந்திர அரசியலில் பரபரப்பு.

    திருப்பதி:

    ஆந்திர மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவருடைய தம்பி நடிகர் பவன் கல்யாண் பிதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.அவருக்கு ஆதரவாக சிரஞ்சீவி பிரசாரம் செய்து வருகிறார்.

    நேற்று அவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில் என்னுடைய தம்பி தன்னை பற்றி சிந்திக்காமல் மக்களை பற்றி அதிகம் சிந்திக்கிறான்.

    ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு ஏதாவது செய்வேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் பவன் கல்யாண் விவசாயிகளின் கண்ணீரை துடைக்க தனது சொந்த பணத்தை செலவழித்து, நமது எல்லையை காக்கும் ராணுவ வீரர்களுக்கும் தாராளமாக நன்கொடை அளித்தார், மீனவர்களுக்கு உதவினார். இதையெல்லாம் பார்க்கும்போது, இவரைப் போன்ற ஒரு தலைவர் மக்களுக்குத் தேவை என்று உணர்கிறோம்.

    தனது வாழ்க்கையை அரசியலுக்காக அர்ப்பணித்துள்ளார் சட்டமன்றத்தில் அவரது குரல் ஒலிப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

    இந்த வீடியோவை சிரஞ்சீவியின் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். சிரஞ்சீவியின் வீடியோ வைரலாகி வருகிறது. 

    • புத்திசாலித்தனமான முடிவு என்று ரசிகர்கள் பாராட்டு.
    • ஆட்டோவில் சென்ற வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சுருதிஹாசன் தற்போது மும்பையில் தங்கி இருக்கிறார். அங்கு ஒரு படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற சுருதிஹாசன் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்.

     காரில் அவரால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. இதையடுத்து காரை ஒதுக்கி நிறுத்தி விட்டு ஆட்டோ பிடித்து அதில் பயணம் செய்தார். ஆட்டோவில் சென்ற வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    சுருதிஹாசன் ஆட்டோவில் சென்றது புத்திசாலித்தனமான முடிவு என்று ரசிகர்கள் பாராட்டினர். குறிப்பாக மும்பையில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதில் காரை விட ஆட்டோவில் போவதே சிறந்தது என்கின்றனர்.

    அமிதாப்பச்சனும் சமீபத்தில் போக்குவரத்து நெரிசலால் காரை ஒதுக்கி விட்டு ஆட்டோவில் பயணித்த சம்பவம் நடந்தது. இது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமன்றி சுற்றுச்சுழலுக்கும் சிறந்தது. நடிகர்களுக்கு சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு செல்லவும் உதவுகிறது என்கின்றனர்.

    ×