என் தம்பிக்கு ஓட்டு போடுங்க - நடிகர் சிரஞ்சீவியின் வீடியோ வைரல்

வீடியோவை சிரஞ்சீவியின் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.சிரஞ்சீவியின் வீடியோ ஆந்திர அரசியலில் பரபரப்பு.
என் தம்பிக்கு ஓட்டு போடுங்க - நடிகர் சிரஞ்சீவியின் வீடியோ வைரல்
Published on

திருப்பதி:

ஆந்திர மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய தம்பி நடிகர் பவன் கல்யாண் பிதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.அவருக்கு ஆதரவாக சிரஞ்சீவி பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று அவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில் என்னுடைய தம்பி தன்னை பற்றி சிந்திக்காமல் மக்களை பற்றி அதிகம் சிந்திக்கிறான்.

ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு ஏதாவது செய்வேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் பவன் கல்யாண் விவசாயிகளின் கண்ணீரை துடைக்க தனது சொந்த பணத்தை செலவழித்து, நமது எல்லையை காக்கும் ராணுவ வீரர்களுக்கும் தாராளமாக நன்கொடை அளித்தார், மீனவர்களுக்கு உதவினார். இதையெல்லாம் பார்க்கும்போது, இவரைப் போன்ற ஒரு தலைவர் மக்களுக்குத் தேவை என்று உணர்கிறோம்.

தனது வாழ்க்கையை அரசியலுக்காக அர்ப்பணித்துள்ளார் சட்டமன்றத்தில் அவரது குரல் ஒலிப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

இந்த வீடியோவை சிரஞ்சீவியின் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். சிரஞ்சீவியின் வீடியோ வைரலாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com